கேட்டது
(மதுரை பூங்கா ஒன்றில் நடைப்பயிற்சியின்போது சிறுமியும், தாயும்...)
''அந்தத் தாத்தாவைப் பாரும்மா.. நடைப்பயிற்சி முடிந்து மூச்சுப் பயிற்சியெல்லாம் செய்யறாரு... நீ எதுவும் செய்வதில்லையே..?''
''சும்மா வாடி... நானும் பாட்டியானவுடன் எல்லா பயிற்சியையும் செய்வேன்...''
-நா.குழந்தைவேலு, மதுரை.
(திருச்சியில் உள்ள காய்கறிச் சந்தை ஒன்றில் இரு பெண்கள்...)
''இந்த வருஷம் அட்சய திருதியைக்கு எவ்வளவு தங்கம் வாங்கினே...?''
''அட போடி... நீ வேற... காலேஜ் பீஸ், வண்டி வாங்க, மொபைல் வாங்க, வீட்டு பிரச்னைக்கு தங்கம் அடகு வைச்சதே எடுக்க முடியலை.. புதுசா வேறவா..?''
-அ.சுஹைல் ரஹ்மான், திருச்சி.
(சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் தம்பதி பேசியது)
''என்னங்க... நீங்க என்னை புடவைக் கடைக்கு கூட்டிட்டு போறதா நேற்றிரவு கனவு வந்ததுங்க?''
''இரவில் புடவைக்கடை மூடிடுவாங்களே...''
-சாரதி டேச்சு, சென்னை.
கண்டது
(திருப்பூர் மாவட்டம், அவிநாசி அருகேயுள்ள ஓர் ஊரின் பெயர்)
''கெட்டிசெவியூர்''
(ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளைம் அருகேயுள்ள ஒரு கிராமத்தின் பெயர்)
''ஒத்தக்குதிரை''
(கோவை மாவட்டம், ஒத்தக்கால் மண்டபத்தை அடுத்துள்ள ஓர் ஊரின் பெயர்)
''வழுக்குப்பாறை''
-ஆர்.நடராஜன், ஈரோடு.
(திருச்சியில் ஓடிய ஆட்டோ ஒன்றில் எழுதியிருந்தது)
''எதையும் பொறுமையோடு தேடு. பொறாமையோடு தேடாதே!''
-எம்.அசோக்ராஜா, அரவக்குறிச்சிப்பட்டி.
(தூத்துக்குடி அருகேயுள்ள ஓர் ஊரின் பெயர்)
''அலங்காரத்தட்டு''
''புதுக்கோட்டை அருகேயுள்ள ஓர் ஊரின் பெயர்
''ஒற்றைக்கண்ணூர்''
(கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ஓர் ஊரின் பெயர்)
''ஒற்றைதென்னம்பிள்ளைத்தட்டு''
-ஆர்.கே.லிங்கேசன், மேலகிருஷ்ணன்புதூர்
யோசிக்கிறாங்கப்பா!
யோசிப்பவன் செய்ய மாட்டான். செய்பவன் யோசிக்க மாட்டான். கேட்பவன் செய்ய மாட்டான். செய்பவன் கேட்க மாட்டான்.
சொல்பவனுக்கு நேரம் போதாது. செய்யாதவனுக்கு நேரம் போகாது.
-வசீகரன், தேனாம்பேட்டை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.