நாடு முழுவதும் தினமும் 13 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரயில்கள் இயக்கப்படுகின்றன, இவற்றில் நாள்தோறும் 2 கோடிக்கும் மேற்பட்டோர் பயணிக்கின்றனர். ஆனால் ஒரே ஒரு ரயில் மட்டுமே அமைதியாக தனித்து நிற்கிறது. வேகம், ஆடம்பரம், தொழில்நுட்பம் காரணமாக அல்ல; மாறாக மனிதாபிமானத்துக்காக?
சச்கண்ட் எக்ஸ்பிரஸ்' என்று அழைக்கப்படும் இந்த ரயில் மகாராஷ்டிராவிலிருந்து பஞ்சாப் வரையிலாக கிட்டத்தட்ட 35 மணி நேரம் முழுவதும் பயணிகளுக்கு இலவச காலை உணவு, மதிய உணவு, இரவு உணவு வழங்கப்படும் ஒரே ரயில் இதுவே ஆகும்.
மகாராஷ்டிராவின் நாந்தேட்டுக்கும், பஞ்சாப்பின் அமிர்தசரஸூக்கும் இடையே இயக்கப்படும் சச்கண்ட் எக்ஸ்பிரஸ் (எண் 12715), இரண்டு புனித சீக்கியத் தலங்களை இணைக்கும் வகையில் சுமார் 2 ஆயிரம் கி.மீ. தூரம் பயணிக்கிறது. இந்த ரயிலில் பயணம் செய்வோர் எவரிடமும் பணம் கேட்காமல்,வீட்டுமுறை உணவு வழங்கப்படுகிறது. கதி-சாவல், சப்ஜி மற்றும் புதிய ரொட்டிகள், ஒரு அன்பான புன்னகையுடன் பரிமாறப்படலாம்.
இந்த உணவுகள் ரயில்வே சமையல் அறையில் சமைக்கப்படுவதில்லை, மாறாக, அருகிலுள்ள குருத்வாராக்களில் தயாரிக்கப்பட்டு தன்னார்வலர்களால் கொண்டு வரப்படுகின்றன. இவை அனைத்தும் சீக்கிய பாரம்பரியமான லங்காரின் ஒரு பகுதியாகும், அங்கு பணக்காரர், ஏழை, உள்ளூர் அல்லது அந்நியர் என எவருக்கும் மரியாதையுடனும் இலவசமாகவும் உணவும் வழங்கப்படுகிறது. இந்த அழகான சேவை 1995-ஆம் ஆண்டு முதல் நடந்து வருகிறது, மேலும் பயணிகள் கிட்டத்தட்ட 30 ஆண்டுகளாக இலவச உணவைப் பெற்று வருகின்றனர்.
இந்த உணவு ஒரே இடத்தில் மட்டும் வழங்கப்படுவதில்லை, பயணத்தின்போது பல நிலையங்களில் வழங்கப்படுகிறது. அதிகாரபூர்வ பட்டியல் இல்லாவிட்டாலும், பல பயணிகள் ஹெளரங்காபாத், போபால், ஜான்சி, குவாலியர், தில்லி, லூதியானா போன்ற நிறுத்தங்களில் உணவைப் பெற்றுள்ளனர்.
மேலும், உணவுகள் ரயில்வேயின் உணவுப் பெட்டியிலிருந்து வராததால், உணவைப் பெற பயணிகள் தங்கள் சொந்த தட்டு அல்லது டிபன் பாக்ஸை எடுத்துச் செல்ல வேண்டும். தன்னார்வலர்கள் வழக்கமாக நடைபாதையில் நடந்து செல்வார்கள் அல்லது புதிய உணவுகள் நிறைந்த கொள்கலன்களுடன் பெட்டிகளில் ஏறி, ஏற்றுகொள்ளத் தயாராக இருப்பவர்களுக்கு அவற்றை வழங்குவார்கள்.
எல்லாமே விட்டுக்கொடுத்தல் பற்றியதுதான் என்ற காலகட்டத்தில், இந்த ரயில், கருணை என்பது ஆயிரக்கணக்கான கி.மீ. தூரம் பயணிக்க முடியும் என்பதை நினைவூட்டுகிறது. சீக்கிய சமூகத்தால் ஒரு தாழ்மையான காணிக்கையாகத் தொடங்கியது, இப்போது இந்த ரயிலின் அடையாளத்தின் ஒரு பகுதியாக மாறிவிட்டது. தாராள மனப்பான்மை, நம்பிக்கை மற்றும் பகிரப்பட்ட மனிதநேயத்திற்கு ஒரு நெகிழ்ச்சியான எடுத்துக்காட்டாகும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.