தினமணி கதிர்

சாதனை மாணவரின் சரித்திரம்....

ராமநாதபுரம் மாவட்டத்துக்கு உள்பட்ட பரமக்குடியைச் சேர்ந்த பொறியாளர் ராமமூர்த்தி-ஷியாமளா தம்பதியரின் மகன் விக்னேசுவரர்.

DIN

ராமநாதபுரம் மாவட்டத்துக்கு உள்பட்ட பரமக்குடியைச் சேர்ந்த பொறியாளர் ராமமூர்த்தி-ஷியாமளா தம்பதியரின் மகன் விக்னேசுவரர். இருபத்து மூன்று வயது நிரம்பிய பொறியியல் பட்டதாரியான இவர் அமெரிக்காவில் மிக்ஸிகன் பல்கலைக்கழகத்தில் படிக்கும்போதே சப்தமில்லாமல் ஓடும் மின்சார ஸ்கூட்டர்களில் பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் அருகில் சென்றவுடனே அவர்களுக்கு எச்சரிக்கை ஒலி எழுப்பும் கருவியை கண்டு

பிடித்திருக்கிறார். அடுத்த முயற்சியாக, இவர் ஏ.ஐ.தொழில் நுட்பத்தின் உதவியுடன் மிகவும் மேம்படுத்தப்பட்ட இலகுரக ஆக்மெண்டட் ரியாலிட்டி கண்ணாடிகளை உருவாக்கியிருக்கிறார்.

மதுரைக்கு அண்மையில் வருகை தந்த விக்னேசுவரரிடம் பேசியபோது:

நான் ஹைதராபாத்தில் பிளஸ் 2 படிப்பை முடித்தவுடன், பிரசித்தி பெற்ற அமெரிக்காவில் உள்ள மிக்ஸிகன் மாகாண பல்கலைக்கழகத்துக்கு மின்பொறியியல் பட்டப்படிப்புக்காக விண்ணப்பித்தேன். பள்ளியில் படிக்கும்போது அறிவியல் கண்டுபிடிப்புகளை நான் செய்திருந்த விவரங்களையும் இணைத்திருந்தேன். எனது விண்ணப்பத்தை பார்த்த பல்கலை

நிர்வாகம் மும்பைக்கு என்னை வரவழைத்து நேர்காணல் நடத்தியது. படிப்புக்கான அனைத்து செலவுகளையும் தாங்களே ஏற்றுகொள்வதாக கூறி அமெரிக்காவுக்கு அழைத்து சென்றது.

முதலாவது ஆண்டில்(2021) சிறந்த மாணவருக்கான மனோகரன் நாகா மெமோரியல் விருது கிடைத்தது.

2-ஆவது ஆண்டில் அமெரிக்காவில் உள்ள கெல்லி.ஏ.போர்டு தொழில் நுட்ப விருதும் 5 ஆயிரம் டாலர் (இந்திய மதிப்பில் ரூ.4 லட்சம்) இணைத்தும் வழங்கினார்கள். 3-ஆவது ஆண்டு படிக்கும்போதே சப்தமில்லாமல் ஓடக்கூடிய மின்சார ஸ்கூட்டர்களில் பார்வையற்றவர்கள் அருகில் வந்தால் முன்கூட்டியே ஒலி எழுப்பி எச்சரிக்கை செய்யக்கூடிய கருவியை கண்டு பிடித்தேன். இதற்காக பல்கலை. நிர்வாகம் 2023 - ஆம் ஆண்டுக்கான இலையுதிர் கால பொறியியல் வடிவமைப்பு தின விருதை வழங்கியது.

பொறியியல் படிப்புடன் தொழில் துறையில் முன்னேற விரும்பி தயாரிப்பு மற்றும் வடிவமைப்பு என்ற ஓராண்டு சான்றிதழ் படிப்பையும் படித்தேன்.இதனால் ப்ராடிஜ்ம் ஏ.ஐ. என்ற நிறுவனத்தை தொடங்கி, தொழில் முனைவோரானேன். தொடக்க சமூகத்தின் பல்வேறு மானியங்கள்' என்ற அமைப்பு எனது நிறுவனத்துக்கு ரூ.25 ஆயிரம் டாலர் (ரூ.20லட்சம்) நிதி உதவி வழங்கியது.

இந்த நிதி கிடைத்த உற்சாகத்தில் நான் சிலிக்கான்வேலி' என அழைக்கப்படும் பரபரப்பான தொழில் நகரான சான்பிரான்சிஸ்கோவுக்கு மாறி எனது நிறுவனத்தையும் அங்கு பதிவு செய்தேன். இந்த நகரில் தான் கூகுள்,ஆப்பிள்,மைக்ரோ சாப்ட் உள்ளிட்ட அனைத்து விதமான கணினி நிறுவனங்களும் உள்ளன.

எனது ஆராய்ச்சிகளை,எல்லைகளை விரிவுபடுத்திக்கொண்டே இருந்ததை அறிந்த அன்ஷேக்டு வென்சர்ஸ்' என்ற அமைப்பு 1.50 மில்லியன் டாலர்( ரூ.1.30 கோடி) வழங்கியது.

நான் செயற்கை நுண்ணறிவு உதவியுடன் மிகவும் மேம்படுத்தப்பட்ட மிகக் குறைவான (75கிராம்) எடையுடைய இலகுரக ஆக்மெண்டட் ரியாலிட்டி கண்ணாடியை உருவாக்கினோம். விலை குறைவும், எடை குறைவுமே இதன் சிறப்பம்சம். இந்த தனித்துவமான கண்ணாடி 3டி முப்பரிமான படிமம் (ஹாலோ கிராம்களை)காண்பிக்கும்.

நாம் இந்தக் கண்ணாடியை அணிந்து கொண்டு எதையும் பார்த்தவுடன் அது குறித்து கேள்வி எழுப்பினால் செயற்கை நுண்ணறிவை தடையின்றி ஒருங்கிணைத்து அனைத்து அறிவுத் தேவைகளுக்கும் உதவும் ஒரு நுண்ணறிவுப் பொக்கிஷம்.

நமக்கு என்ன அறிவுத் தேவையோ அதை நாம் அணிந்திருக்கும் கண்ணாடியிலேயே பார்த்து தெரிந்து கொள்ளலாம். கண்ணாடியில் இருக்கும் பிரேமிலேயே பேட்டரி, கணினி மென்பொருள் ஆகியன பொருந்தியே இருக்கும். எடையும் (75 கிராம்) குறைவு என்பதால் யாரும் அணிந்து கொண்டு தேவையான அனைத்து தகவல்களையும் பெறலாம்.

கண்ணாடியை அணிந்துகொள்வதால் பார்வைக்கு எந்த தொந்தரவும் இல்லாமல் தகவல்களை தரும். இளைஞர்கள் எந்தப் படிப்பையும் படிப்பதோடு நின்றுவிடாமல் தொடர்ந்து அது தொடர்பான மேற்படிப்புகளை,ஆராய்ச்சிகளைத் தொடர்ந்து கொண்டே இருக்க வேண்டும் என்கிறார் விக்னேசுவரர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வு முடிவுகள் வெளியீடு!

ரஷியாவுக்கே இந்த நிலையா? எரிபொருள் தட்டுப்பாடு!

மணிப்பூரில் புதிதாகத் தேர்தல் நடத்த வேண்டும்: காங்கிரஸ்

அமெரிக்கா வரி விதிப்பு: மத்திய அரசுக்கு தமிழக அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும்-துரை.வைகோ

3 வெண்கலப் பதக்கங்களுடன் நிறைவு செய்த மனு பாக்கர்!

SCROLL FOR NEXT