தினமணி கதிர்

சிரி... சிரி...

என்னோட மூணு பெண்களுமே நட்சத்திரங்கள், சார்!''

தினமணி செய்திச் சேவை

'என்னோட மூணு பெண்களுமே நட்சத்திரங்கள், சார்!''

'சினிமா நட்சத்திரங்களா?''

'இல்லை... மூத்தவ பேரு ரேவதி, அடுத்தவ சுவாதி, மூணாவது ரோகிணி!''



'எனக்காக உயிரையே கொடுக்க ஏழெட்டுப் பேர் ரெடியா இருக்காங்க!''

'அடுத்ததா ஆபரேஷன் பண்ணிக்கப் போறவங்கதானே, டாக்டர்?''



'பொண்டாட்டியைக் காணோம்னு பதினைஞ்சு நாள் கழிச்சு புகார் கொடுக்க வந்திருக்கீங்களே, ஏன்?''

'இதுக்கு முந்தி காணாமப் போனப்பல்லாம் பதினைஞ்சு நாள்ல திரும்பிடுவாங்க, சார்!''



'சோதிடத்து மேல தலைவர் ரொம்ப நம்பிக்கை வச்சிருக்கார்!''

'அப்படியா...?''

'ஆமாம். 'இப்ப சோதிடம் பார்க்க வந்தால் நல்லா இருக்குமா?'ன்னு கேட்டுக்கிட்டுத்தான் சோதிடம் பார்க்கவே போவாரு!''



'போருக்குப் பயந்து வைக்கோல் போருக்குள் பதுங்கியபோது மன்னரை அங்கிருந்த பாம்பு தீண்டி விட்டதாம்!''

'மன்னருக்கு 'போரில் கண்டம்' என்று சோதிடர் சொன்னது சரியாகத்தான் இருக்கிறது!''



'நம்ப குடும்ப விஷயங்களை எதுக்கு உங்க ஆபீஸ் நண்பர்கள்கிட்டச் சொல்றீங்க?''

'அவுங்கள்லாம் ஏழெட்டு விஷயம் சொல்லும்போது... நான் ஒண்ணு ரெண்டுகூடச் சொல்லாட்டி நல்லா இருக்காதே!''



'பயிற்சிப் பட்டறை ஆரம்பிக்கச் சொல்லி அந்த டைரக்டரை பலபேர் வற்புறுத்தறாங்களாம்!''

'என்ன பயிற்சி ?''

'கதையே இல்லாமல் படம் எடுப்பது எப்படிங்கிற பயிற்சிதான்!''



'கோயில்ல நிறைய கல்யாணம் நடந்ததுல ரெண்டு ஜோடி மாறிப்போச்சு!''

'அடடா.... அப்புறம்?''

'கண்டுபிடிக்கிறதுக்குள்ள ரெண்டு மாப்பிள்ளையுமே தாலியைக் கட்டிட்டாங்க!''



'பேப்பர் ரோஸ்ட்டுக்கு அதிரடி ஆஃபர்னு மெனு போர்டுல இருக்கே... என்னப்பா ஆஃபர்?''

'அதே விலைக்கு 20% எக்ஸ்ட்ரா மாவு ஊத்துவாங்க, சார்!''

வி.ரேவதி, தஞ்சை.

'தலைவர் ஏன் மேடையில கண்சிமிட்டாமப் பேசுறார்?''

'அந்த கேப்ல தொண்டர்கள் எஸ்கேப் ஆயிடறாங்களாம்!''



'ஆஸ்பிட்டல்ல அட்மிட்டாக ஏன் செக்யூரிட்டியோட வர்றீங்க?''

'இங்க கிட்னி திருடு போறதா கேள்விப்பட்டேன், அதான்!''

அ.ரியாஸ், சேலம்.

'ஹோட்டலை ஆரம்பிச்சதுலேர்ந்து பல வருஷமா ஒரே அயிட்டங்களைத் தான் போடுறோம்னு எப்படிக் கண்டுபிடிச்சீங்க?''

'வாசல்ல, மெனுவை கல்வெட்டுல செதுக்கி வைச்சிருக்கீங்களே!''

கி. கணேசன், நமச்சிவாயபுரம்.



'தலைவர் அறிவிக்கிற திட்டங்களைப் பார்த்தா சிரிப்பு வருதா, ஏன்?''

'திருட்டுப் பயத்தைப் போக்க, வீட்டுக்கு ஒரு வாட்ச்மேனை இலவசமா வழங்குவோம்னுஅறிவிச்சிருக்கிறாரே!''

உமா கணேசன், பைத்தந்துறை.

'ஓட்டுக் கேட்டுப் போன தலைவரை ஏன் கைது செஞ்சாங்க?''

'டீக்கடையில டீ போட்டாரு... ஹோட்டலில் பரோட்டா போட்டாரு... கள்ளச்சாராயம் விற்கிற ஏரியாவுல, கள்ளச் சாராயம் வித்து ஓட்டுக் கேட்டிருக்காரு!''

க. பூமலை, நமச்சிவாயபுரம்.

'ஏங்க, தரகர் கூட்டிட்டு வந்த வரன் போலி டாக்டராம்!''

'நல்லதாப் போச்சு... நாம கவரிங் நகையைப் போட்டுக் கல்யாணத்தைக் கச்சிதமா முடிச்சிடுவோம்!''

எம்.ஏ.ஆதம், அரக்கோணம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நியாய விலைக் கடை விற்பனையாளா் பணியிடை நீக்கம்

நாளைய மின்தடை: கங்காபுரம்

கல்லூரி மாணவி ரயிலில் அடிபட்டு பலத்த காயம்!

போலி வாக்காளா்கள் இல்லாத மாநிலமே இல்லை: புதுச்சேரியில் கே. அண்ணாமலை பேச்சு

கோயிலில் திருடிவிட்டு மதுபோதையில் மயங்கிக் கிடந்த நபா் கைது

SCROLL FOR NEXT