தினமணி கதிர்

அப்படீங்களா! ’ரீல்'களுக்குக் காப்புரிமைப் பெறும் சேவை அறிமுகம்!

முதல் தயாரிப்பு 'ரீல்'களுக்குக் காப்புரிமைப் பெறும் வகையில் இந்தச் சேவை முதலில் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராமில் அறிமுகமாகி உள்ளது.

தினமணி செய்திச் சேவை

சமூக ஊடகங்களில் 'மீம்ஸ்'களை அடுத்து மக்களிடம் வேகமாகப் பரவி வருவது 'ரீல்'கள் எனும் சிறு விடியோக்களாகும். ஆனால், இந்த ரீல்களை முதலில் யார் தயாரித்தது என்பதைக் கண்டுபிடிப்பது எளிதல்ல. இதனால் லட்சக்கணக்கான பார்வைகளைக் கொண்ட 'ரீல்'கள் அப்படியே மறுஉருவாக்கம் செய்யப்படுகிறது. இதனால் அந்த 'ரீல்'களுக்கு பார்வைக்கு ஏற்ப சன்மானம் அளிப்பதில் பிரச்னையும் ஏற்படுகிறது.

பிரபல 'ரீல்' தயாரிப்பவர்களைப் போன்று போலியாகத் தகவல்களை உருவாக்கியதாக கடந்த ஜூலை மாதத்தில் மட்டும் 5 லட்சம் சமூக ஊடகக் கணக்குகள் மீது 'மெட்டா' நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இதற்குத் தீர்வு காண 'மெட்டா' நிறுவனம் ஃபேஸ்புக் ரீல் தயாரிப்பாளர்களுக்கு புதிய பாதுகாப்பு சேவையாக 'ஃபேஸ்புக் கன்டென்ட் புரடெக்ஷன்' என்ற ஒன்றை 'மெட்டா' அறிமுகம் செய்துள்ளது.

இதன் மூலம் தங்கள் 'ரீல்'கள் அனுமதியின்றி மறுபதிப்பு செய்ய முடியாது. அப்படி மறுபதிப்பு செய்தால், அந்தக் கணக்கின் மீது புகார் அளித்தவுடன், மறுபதிப்பு செய்யப்பட்ட 'ரீல்' ரத்து செய்யப்பட்டு, கணக்கும் முடக்கப்படும். பிரபலமான ரீல்ஸைப் போலவே அப்படியே மறுபதிப்பு செய்தால், அதையும் இந்தச் சேவை காட்டிக் கொடுத்துவிடும்.

இதுபோன்று முதல் தயாரிப்பு 'ரீல்'களுக்குக் காப்புரிமைப் பெறும் வகையில் இந்தச் சேவை முதலில் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராமில் அறிமுகமாகி உள்ளது.

தவறாக புகார் அளிக்கப்பட்டாலும் அதுகுறித்து வாதம் முன்வைக்கவும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

-அ.சர்ப்ராஸ்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வடகிழக்கு பருவமழை - நீர்நிலைகளை கண்காணிக்க அமைச்சர் துரைமுருகன் உத்தரவு

இந்த வாரம் கலாரசிகன் - 23.11.2025

காதா சப்த சதியும் கலிங்கத்துப் பரணியும்...

காயத்தான்-வாகனத்தான்-அழியான்

அறந்தலைப்பிரியா ஆறு எது?

SCROLL FOR NEXT