தினமணி கதிர்

சிரி... சிரி...

'உங்கள் வீரத்தைப் புகழ்ந்து பாட புலவர் வந்திருக்கிறார், மன்னா!'

இணையதளச் செய்திப் பிரிவு

'உங்கள் வீரத்தைப் புகழ்ந்து பாட புலவர் வந்திருக்கிறார், மன்னா!''

'நன்கு சோதனை செய்த பிறகு அவரைப் பதுங்குக் குழிக்கு அனுப்பிவிடுங்கள், நான் அங்கே செல்கிறேன்!''



'உனக்கு கைகால் எல்லாம் நல்லாத்தானே இருக்கு ... திருடாம உழைச்சுச் சாப்பிட்டா என்ன?''

'எல்லாம் தெரிஞ்ச நீங்களே இப்படிக் கேக்கறீங்களே, எசமான்! கை, கால் நல்லா இருக்கிற வரைக்கும்தானே இந்தத் தொழிலைச் செய்ய முடியும்!''



'எது எதைத்தான் கடனா கேட்கிறதுன்னு ஒரு வரைமுறையே இல்லாமப் போயிடிச்சு!''

'என்ன விஷயம் , சார்?''

'எதிர் வீட்டு ஜோக் எழுத்தாளர், 'பத்து ஜோக்ஸ் கடனா கொடுங்க... ஒரு வாரத்துல திருப்பித் தர்றேன்'னு கேக்கறாரு, சார்!''



'ஞாபக மறதிக்கு மாத்திரை எழுதிக் கொடுத்தேனே, இப்ப எப்படி சார் இருக்கு?''

'மாசத்துல பலநாள் மாத்திரை சாப்பிடவே மறந்து போயிடுது, டாக்டர்!''

வி.ரேவதி, தஞ்சை.

'ஒரே நாள்ல ரெண்டு பொண்ணைப் பார்க்க ஏன் என்னைக் கூட்டிக்கிட்டுப் போறீங்க, தரகரே?''

'ஒண்ணு பிடிக்கலேன்னா... இன்னொண்ணாவது தேறுமே!''



'பக்கத்து வீட்டு தம்பதி லவ் மேரேஜ் பண்ணிக்கிட்டவங்கன்னு எதை வச்சுச் சொல்றே?''

'அந்தப் பொண்ணு தினமும் உப்புமா செஞ்சு போடுது.... அவரும் எதுவும் சொல்லாமச் சாப்பிடுறாரே!''



'கார் லோன் கொடுத்தா ஒழுங்கா கட்டுவீங்களா?''

'காரை ஓட்டத்தான் செய்வாங்க... யாராவது கட்டி வைப்பாங்களா, சார்?''

'..............?''

எம்.ஏ.ஆதம், அரக்கோணம்.

'என்ன, பஜ்ஜி கசங்கிக் கிடக்கு?''

'நாங்களே பிழிஞ்சு எண்ணெயை எடுத்துட்டோம், சார்!''

-அ.ரியாஸ், சேலம்.



'எதுக்குங்க பையில ரெண்டு கட்சிங்களோட சட்டையைத் திணிச்சுக்கிட்டுக் கிளம்பறீங்க?''

'இன்னைக்கு எந்தக் கட்சி 'ரோடு ஷோ' நடத்தப்

போகுதுங்கறது மதியத்துக்குப் பிறகுதானே தெரியும்!''

ரத்னம் மரகதம், கோயமுத்தூர்.



'வீட்டுக்கு மகாலட்சுமியா மருமக வந்திருக்கான்னு சொன்னீயே, எப்படி இருக்கா?''

'அதையேன் கேக்குறே! அம்சமா மேக்கப்போட உட்கார்ந்திருக்கா... நாங்கதான் எல்லாம் படைக்கிறோம்.''

-கீதா சீனிவாசன், சென்னை.



'வவ்வால் சைவம்னு எப்படிச் சொல்றே?''

'அதுதான் பழம் தின்னி வவ்வாலாச்சே!''

பொன் முத்து, திருவிடைமருதூர்.



'எங்க தாத்தா சின்ன வயசுலயே ரொம்ப கஷ்டப்பட்டாரு!''

'தெரியுமே... அந்தக் காலத்துல சின்ன வயசுலயே கல்யாணம் பண்ணிடுவாங்களே!''

தீபிகா சாரதி, சென்னை 5.



'என்ன சர்வர், சட்னியில சிமென்ட் வாடை வருது?''

'இது, 'கெட்டி' சட்னி சார்!''

பேகம்பூர் ஷம்மு, திண்டுக்கல்.



'எங்க வீட்டுல திருட வந்திருக்கீங்க... அப்படியே போகும்போது எதிர்த்த வீட்டிலும் திருடிட்டுப் போங்க!''

'அவங்க சொல்லித்தான் நாங்க உங்க வீட்டுக்கு திருட வந்தோம்!''

நடேஷ் கன்னா, கல்லிடைக்குறிச்சி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இரும்புக் கை மாயாவி திட்டத்தில் லோகேஷ் கனகராஜ்?

மு.க. ஸ்டாலினுடன் காங்கிரஸ் ஐவர் குழு சந்திப்பு!

விமலின் மகாசேனா டிரைலர்!

நேரு குறித்த ராஜ்நாத் சிங்கின் கருத்து திசைதிருப்பும் முயற்சி! பிரியங்கா காந்தி

“Yes To Labour Justice” நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் போராட்டம்! | Congress | Bjp

SCROLL FOR NEXT