தினமணி கதிர்

அன்றோ மலை; இன்றோ வனம்..!

'தமிழ்நாடு ஆந்திரா எல்லையில் அமைந்துள்ள குக்கிராமமான பாலாபுரத்தில் மலைப் பாங்கான இடத்தில் நீர் மேலாண்மைத் திட்டத்தைச் செயல்படுத்த அதிகாரிகளை அணுகினோம்.

ஜி. யோகானந்தம்

'தமிழ்நாடு ஆந்திரா எல்லையில் அமைந்துள்ள குக்கிராமமான பாலாபுரத்தில் மலைப் பாங்கான இடத்தில் நீர் மேலாண்மைத் திட்டத்தைச் செயல்படுத்த அதிகாரிகளை அணுகினோம். அவர்கள் உடனுக்குடன் திட்டங்களைச் செயல்படுத்த ஆவண செய்ததால், 30 தடுப்பணைகளைக் கட்டினோம். மரக்கன்றுகளை நட்டு வனப் பகுதியாக மேம்படுத்தினோம். கிராம மக்களும் மிகுந்த ஆர்வத்துடன் முழு ஈடுபாட்டுடன் இந்தப் பணியில் செயல்பட்டனர்'' என்கிறார் திருவள்ளூர் மாவட்டத்துக்கு உள்பட்ட ஆர்.கே. பேட்டை ஒன்றியத்தில் உள்ள பாலாபுரம் ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் தென்னரசு.

இந்த நிலையை பாலாபுரம் ஊராட்சி அடைய முழு வீச்சில் செயல்பட்ட அவரிடம் பேசியபோது:

'சிறந்த மாநிலம், மாவட்டம், ஊராட்சிப் பள்ளிகள், தனியார் நிறுவனம், தொழிற்சாலைகள், தன்னார்வலர்கள் உள்ளிட்ட 11 பிரிவுகளில் மத்திய ஜல் சக்தி துறை அமைச்சகம் சார்பில் ஆண்டுதோறும் 57 தேசிய நீர் விருதுகள் வழங்கப்படுகின்றன.

நீர் மேலாண்மைத் திட்டத்துக்காக முப்பதுக்கும் மேற்பட்ட தடுப்பணைகள் கட்டப்பட்டு, நீர்நிலைகள் வளம் பெற்று, நீர் சேமிக்கப் பெற்று மலைப்பாங்கான பகுதியில் பாலாபுரத்தில் ஆயிரக்கணக்கான செடிகள் நடப்பட்டன. காடு வளர்ப்புத் திட்டத்தைச் செயல்படுத்தி சிறந்த இயற்கை வளத்தை உருவாக்கியதால் எங்கள் ஊராட்சியானது தேசிய அளவில் மூன்றாவது இடத்தைப் பெற்றது.

இதனால், மத்திய அரசின் ஜல்சக்தி அமைச்சகத்தின் சார்பில் நவம்பர் 18இல் நடைபெற்ற 6ஆவது தேசிய நீர் மேலாண்மைக்கான விருதுகள் வழங்கும் விழாவில், பாலாபுரம் ஊராட்சியானது நீர் மேலாண்மையில் சிறந்த ஊராட்சியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு மூன்றாவது இடத்துக்கான விருது வழங்கப்பட்டது. இந்த விருதை மத்திய நீர்வளத் துறை அமைச்சர் சி.ஆர். பாட்டிலிடம் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் பெற்றுக்கொண்டார்.

தற்போது முன்பு இருந்ததைவிட விவசாய உற்பத்தியும், காய்கறிகள், பழங்கள் உற்பத்தியும் செய்யப்பட்டு இது தன்னிறைவு கிராமமாக உருவாகியுள்ளது. அதில் என் பங்கும் இருப்பது எனக்கு மகிழ்ச்சியாகவும், பெருமிதமாகவும் உள்ளது.

'நீரின்றி அமையாது உலகு' என்றார் திருவள்ளுவர். தண்ணீர் அதிகம் கிடைக்கக் கூடிய மழைக்காலத்தைவிட, நீர் கிடைக்காத கோடைக் காலத்தில்தான் தண்ணீர் தேவை அதிகமாக உள்ளது.

நீர் மேலாண்மையில் மக்களையும் பல்வேறு தரப்பினரையும் முழுமையாக ஈடுபடுத்துவதை ஊக்குவிக்கும் வகையில் தேசிய நீர் விருதுகளை மத்திய அரசு 2018- ஆம் ஆண்டு முதல் வழங்கி வருகிறது. இந்த விருது எங்கள் ஊராட்சிக்கு அளிக்கப்பட்டுள்ளது மகிழ்ச்சியை அளிக்கிறது.

தண்ணீரின் முக்கியத்துவம் குறித்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், நீர் மேலாண்மை நடைமுறைகளை இன்றும் கிராம மக்கள் பின்பற்றுகின்றனர்'' என்கிறார் தென்னரசு.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

செய்யாறு தொகுதியில் கேள்விக்குறியாக 34,219 வாக்காளா்கள்

இலங்கை வெள்ளத்தில் 607 ஆக அதிகரித்த உயிர்ப் பலிகள்! மீண்டும் நிலச்சரிவு எச்சரிக்கை!

இண்டிகோ விமான சேவைகள் பாதிப்பு: வருத்தம் தெரிவித்த சிஇஓ

மொபைல் போன் இறக்குமதி 0.02% ஆக சரிவு!

சேலையில் செதுக்கி... ஷ்ரத்தா ஸ்ரீீநாத்!

SCROLL FOR NEXT