சில்வஸ்டர் ஸ்டாலோன் சில்வஸ்டர் ஸ்டாலோன்
தினமணி கதிர்

ஹாலிவுட்டில் ஹிந்து வாழ்க்கை முறை!

இந்தியாவுக்கு வருகை புரிந்த பிரபல ஆங்கில எழுத்தாளரான 'சாமர்செட் மாம்' தனது, 'பாயின்ட்ஸ் ஆஃப் வியூ' என்ற புத்தகத்தில், 'ஹிந்து மதம் ஒரு மதம் மட்டும் அல்ல; அது ஒரு தத்துவமும் கூட!

நாகராஜன்

இந்தியாவுக்கு வருகை புரிந்த பிரபல ஆங்கில எழுத்தாளரான 'சாமர்செட் மாம்' தனது, 'பாயின்ட்ஸ் ஆஃப் வியூ' என்ற புத்தகத்தில், 'ஹிந்து மதம் ஒரு மதம் மட்டும் அல்ல; அது ஒரு தத்துவமும் கூட! மதம் மற்றும் தத்துவம் மட்டுமல்ல; அது ஒரு வாழ்க்கை முறை!'' என்று எழுதி வியந்தார். இந்த வாழ்க்கை முறையை வியந்து போற்றியவர்களுள் இரு ஹாலிவுட் பிரபலங்களைப் பார்ப்போம்.

சில்வஸ்டர் ஸ்டாலோன்

சில்வஸ்டர் ஸ்டாலோன் உலகப் புகழ் பெற்ற ஹாலிவுட் நடிகர். இத்தாலியப் பின்னணியைக் கொண்டவர். அவரது தாயார் யூத வம்ச பாரம்பரியத்தைக் கொண்டவர். தந்தை ஒரு கத்தோலிக்கர். 2012ஆம் ஆண்டு முப்பத்தாறு வயதான அவரது அருமை மகன் சேஜ் திடீரென்று மரணமடைய, அவர் சொல்லொணாத் துக்கம் கொண்டார்.

போதைப் பொருளை சேஜ்அளவுக்கு அதிகமாகச் சாப்பிட்டதால் இந்தத் துயரமான முடிவு ஏற்பட்டது. இறந்த மகனை அடிக்கடி பார்ப்பதாக ஸ்டாலோன் கூறினார். ஹிந்து தர்மத்தைப் பற்றியும் புனர் ஜென்மத்தைப் பற்றியும் அறிய அவருக்கு ஆர்வம் ஏற்பட்டது. ரிஷிகேசத்தில் உள்ள வேத பண்டிதருடன் தொடர்பு கொண்டார்.

2015ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் ஹரித்வாரில் அவர் தனது மகனுக்கு கங்கா நதி தீரத்தில் உரிய முறைப்படி சிரார்த்தத்தை ரகசியமாகவே செய்தார்.

இதற்காக தனது சகோதரரான மைக்கேல், அவரது மனைவி மற்றும் இரண்டு பேரை அவர் ஹரித்வாருக்கு அனுப்பிவைத்தார். விபத்தினால் துர்மரணம் நேரிட்டவர்களுக்கு உரிய சாந்தியை அவர்கள் செய்தனர். இதைச் செய்த பிறகு ஸ்டாலோன் மனதில் பெரும் நிம்மதி ஏற்பட்டது. இதற்கு அவருக்கு உதவி செய்தவர் மிஸ்ராபுரி என்ற ஒரு ஜோதிடர். இந்த சிரார்த்தம் முடிந்த பிறகு 48 வயதான தனது சகோதரி ரோனி இறந்து வெகு நாள்கள் சிரார்த்தம் செய்தார்.

இப்படி இன்னும் பல பிரபலமான ஹாலிவுட் நடிகர்களும் நடிகையரும் இந்திய வாழ்க்கை முறையில் நம்பிக்கை கொண்டு வாழ்ந்து வருகின்றனர்.

ஜூலியா ராபர்ட்ஸ்

ஜூலியா ராபர்ட்ஸ்

ஜூலியா ராபர்ட்ஸ் பிரபலமான அமெரிக்க நடிகை. இவரது தாய் ஒரு ரோமன் கத்தோலிக்கர். இளம் வயதிலிருந்தே ஜூலியாவுக்கு ஹிந்து மதத்தின் மீது ஈர்ப்பு உண்டானது. அசைவ உணவை விட்டுவிட்டு சைவ உணவை உட்கொள்ள ஆரம்பித்தார்.

யோகாவில் ஈடுபட்டார். தியானத்தை மேற்கொண்டார். இயற்கையை நேசித்து அதைப் பாதுகாக்க வேண்டும் என்ற உணர்வு அவருக்கு மிகவும் பிடித்திருந்தது. அவர் ஒரு தயாரிப்பு நிறுவனத்தை ஆரம்பித்தார். அதன் பெயர் ரெட் ஓம் பிலிம்ஸ்.

ஆஸ்கர் விருது பெற்ற இவர் நடித்த 'ஈட் ப்ரே லவ்' என்ற படம் உலகினரின் கவனத்தை ஈர்த்தது. எல்லாமே பெற்று விட்டதாக நினைக்கும் பெண்கள் தங்கள் வாழ்க்கையைத் தொலைத்துவிட்டு அதைப் பிடிக்க ஏங்கும் அவல நிலையை இந்தப் படம் சித்திரிக்கிறது.

படத்தின் கதாநாயகி எலிஸபத் ஜில்பர்ட் (ஜூலியா ராபர்ட்ஸ்) இந்தியாவில் பிரார்த்தனை புரிந்தார். இந்தோனேஷியாவில் பாலித் தீவில் அன்பின் பெருமையை உணர்ந்தார். படம் மாபெரும் வெற்றி பெற்றது.

ஜூலியா ராபர்ட்ஸ் ஹிந்து வாழ்க்கை முறையை நுணுகி ஆராய்ந்து அம்மதத்தைத் தழுவினார். ஹனுமன் உபாசகரான 'நீம் கரோலி பாபா' என்பவரை தனது குரு என்றார். ஹனுமான் படத்தைப் பார்த்தவுடன் அவருக்கு மனமாற்றம் வந்ததாம்.

தீபாவளியை உலக மக்கள் அனைவரும் கொண்டாட வேண்டும் என்ற அவரின் கருத்து உலகெங்கும் பரவலாகப் பேசப்பட்டது. பிரபல நாளிதழ்கள் வெளியிட்ட செய்தியின்படி அவர் 'ஸ்வாமி தரம் தேவ்' என்பவரை சந்தித்த போது, தனது குழந்தைகளுக்கு ஹேஸல், பின்னயஸ் என்ற பெயர்களை மாற்றி, லக்ஷ்மி, கணேஷ் என்று பெயர் சூட்டினார்.

-ச. நாகராஜன்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கேரளப் பள்ளியில் பாலஸ்தீன ஆதரவு நாடகம்: தடுத்து நிறுத்திய ஆசிரியா்களுக்கு எதிராக இஸ்லாமிய மாணவா் அமைப்பு போராட்டம்!

அரூா், வந்தவாசி தொகுதி நிா்வாகிகளுடன் முதல்வா் ஆலோசனை!

ஹெச்-1பி விசா கட்டண உயா்வுக்கு எதிராக அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்கு!

குழந்தைகள் தந்தையிடம் இருப்பது சட்ட விரோத காவலாகக் கருதக் கூடாது: ஆள்கொணா்வு வழக்கில் உயா்நீதிமன்றம் உத்தரவு

தமிழா் பிரதமரானால் ஈழத்தமிழா் பிரச்னைக்கு தீா்வு: திருமாவளவன்

SCROLL FOR NEXT