முகப்பு
ஞாயிறு கொண்டாட்டம்

சர்க்கஸ் ராணி 'அலைஸ்'

ஆஸ்திரேலியாவில் இருந்த பெரிய சர்க்கஸ் நிறுவனமான 'விர்த் சர்க்கஸ் கம்பெனி'யில் பல அதிசய, அபூர்வ நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

Updated On : 28 பிப்ரவரி, 2026 at 10:45 PM
பகிர்:

ஆஸ்திரேலியாவில் இருந்த பெரிய சர்க்கஸ் நிறுவனமான 'விர்த் சர்க்கஸ் கம்பெனி'யில் பல அதிசய, அபூர்வ நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இங்கு 25 ஆண்டுகள் பணிபுரிந்த புரூஸ் ஹூட்டன், சர்க்கஸ் குறித்து கனடாவில் இருந்து வெளியான 'பேமிலி எரால்டு' இதழில் ஒரு தொடரை எழுதினார். அதில், நிறுவனத்தில் 'சர்க்கஸ் ராணி'யாகப் போற்றப்பட்ட 'அலைஸ்' எனும் யானையைக் குறித்து பல ஆச்சரியமான செய்திகளை அவர் பதிவு செய்திருக்கிறார். அதில் கூறப்பட்டிருந்ததாவது:

'இந்தியாவில் இருந்து 1899- ஆம் ஆண்டில் 'அலைஸ்' என்ற யானையை சர்க்கஸ் நிறுவனம் வாங்கியது. சர்க்கஸில் அடிப்படையான பயிற்சிகளைப் பெற்றிருந்த அந்த யானை ஐம்பத்து மூன்று வயதிலும் இளமை குன்றாமல் சுறுசுறுப்புடன் இருந்தது. ஆஸ்திரேலிய ரசிகர்களின் உள்ளத்தில் அது இரு தலைமுறைக் காலம் அழியாத இடம் பெற்றிருந்தது. சன்னிஸா என்ற சர்க்கஸ் யானையுடன் அலைஸ் மூன்று ஆண்டுகள் பயிற்சி பெற்று, 'சர்க்கஸ் ராணி'யாகிவிட்டது. 1902-இல் சன்னிஸா யானை இறந்ததும், அது செய்துவந்த அபாயகரமான பணிகளை அலைúஸ ஏற்றது.

அலைஸூடன் நெருங்கிப் பழகியவர் சார்லி வெஸ்ட் என்ற பணியாளர். அலைஸ் ஒருமுறை தன் சமயோசிதப் புத்தியால், எலின்விர்த் என்பவரின் உயிரைக் காப்பாற்றியது. 1914-இல் சிட்னியில் நடைபெற்ற பெரிய ஊர்வலத்தில் யானைகள் வரும் வழியில் எப்படியோ ஒரு குழந்தை நுழைந்துவிட்டது. அதைக் கண்ட அலைஸ் லாகவமாகத் தனது துதிக்கையால் குழந்தையைத் தூக்கி, அதன் பெற்றோரிடம் ஒப்படைத்தது.

1946-ஆம் ஆண்டில் அலைஸின் நூறாவது பிறந்த நாள் கொண்டாட்டம். ஐந்து அடி உயரமுள்ள பெரிய பிறந்த நாள் கேக் காட்சிக்கூடத்தில் வைக்கப்பட்டிருந்தது. அதை நோக்கி பெரிய கத்தியை ஏந்திக் கொண்டு அலைஸ் வந்தபோது, ரசிகர்கள் ஆரவாரம் செய்தனர். கேக் வெட்டி ஷாம்பைன் பாட்டில் மூடியைத் திறந்தது. மற்றொரு யானை எர்லி வாழ்த்தியது. ஒலிப்பெருக்கியில் வாத்தியங்கள் முழங்கின. பாண்டு வாத்தியக்காரர்கள், 'அவள் ஒரு நல்ல பெண்மணி' எனப் பொருள் தரும்படி பாடினர்.

1953-ஆம் ஆண்டு சர்க்கஸ் நிறுவனத்தினர் மெல்போர்னை விட்டுப் புறப்பட்டனர். அலைஸூக்கு வயது நூற்று ஏழு. சர்க்கஸ் நிறுவனத்துக்கு வந்தே 54 ஆண்டுகள் ஆயிற்று. இதுவே அலைஸூக்கு மிகப் பெரிய உழைப்பாகும்.

இதற்கு ஓய்வை அளிக்க விரும்பிய சர்க்கஸ் நிறுவனம் மெல்போர்ன் உயிரியல் காட்சிச்சாலையில் விட்டுவிட்டு, தனது முகாமை நியூஸிலாந்துக்கு மாற்றியது. அலைஸூக்கு பலமான உபசரிப்புகள் நடைபெற்றாலும், பழைய நண்பர்களைப் பிரிந்தது மனச் சோர்வை அளித்தது. உண்ண மறுத்ததோடு, சக யானைகளுடன் பழக மறுத்ததால் நோய்வாய்ப்பட்டது.

சர்க்கஸ் நிறுவனத்தினர் மீண்டும் மெல்போர்னுக்குத் திரும்பியபோது, அலைஸை திரும்பப் பெற்றனர். அது மீண்டும் நண்பர்களுடன் சேர்ந்ததால், உற்சாகத்துடன் இருந்தது. ஆனால், உடல் தளர்ச்சியால் வேலை எதுவும் செய்ய முடியவில்லை.

ஒரு நாள் மாலை ஆறு மணிக்கு சர்க்கஸ் நிறுவனம் வேறு ஊருக்குப் புறப்பட்டபோது, ஒரு பெரிய டிரக்கில் அலைஸை ஏற்றினர். என்ன முயற்சித்தும் அதை ஏற்ற முடியவில்லை. சில விநாடிகளில் பெருமலை கீழே சாய்வதைப் போன்று சாய்ந்துவிட்டது. உடலில் சில எலும்புகள் முறிந்து அது தரையில் பரிதாபமாகக் கிடந்தது.

'அலைஸ் உயிர் பிழைப்பது அரிது. துன்பப்படாமல் மேலுலகுக்கு அனுப்பிவிடுவதே நல்லது' என்று மருத்துவர்கள் கூறினர். சர்க்கஸ் நிறுவன உரிமையாளருக்கோ துக்கம் தொண்டையை அடைத்தது. கண்ணீர் விட்டுக் கதற, சர்க்கஸ் குழுவினரும் அழுதனர். பின்னர், சர்க்கஸ் நிர்வாகத்தினர் மனதைத் தேற்றியவாறு, கருணைக் கொலை செய்ய அனுமதித்தனர். அதன் மரணம் உலகம் முழுவதும் உள்ள பத்திரிகைகளில் வெளியானது.

சர்க்கஸின் தாயகமான ரோமா

புரியில் 'தி சர்க்கஸ் மாக்ஸிமஸ்' என்கிற வட்டவடிவமான அரங்கத்தில், அந்தக் காலத்தில் ரதப் பந்தயங்கள் நடைபெறும்போது, இடையே மக்கள் சலிப்படையாமல் இருப்பதற்காக, மனிதர்கள் கயிற்றின் மீது நடத்தலும், குதிரை சவாரியும் நடைபெற்றன. இப்படியான கதம்பமான விளையாட்டே 'சர்க்கஸ்' என்றானது.

18-ஆம் நூற்றாண்டில் பிரிட்டனில் நான்கு சக்கரங்கள் பூட்டி குதிரைகளால் இழுக்கப்பட்ட வாகன சர்க்கஸ்கள் தோன்றின. இவையே கோமாளிகளின் 'மேக்அப்' அறையாக விளங்கின. வண்டிக்கு மேலே பாண்டு வாத்தியக்காரர்கள் அமர்ந்திருப்பார்கள். கிராமத்துக்குப் புல்வெளிகளிலும், மார்க்கெட் ஓரங்களிலும் தங்கள் ஆட்டங்களை நடத்தினார்கள். காட்சி முடிந்தவுடன் அதன் மேலாளர் தனது தொப்பியை எடுத்துத் திருப்பிப் பிடித்தவாறு கூட்டத்தில் வரும்போது அளிக்கும் பணத்தை அவர் மகிழ்ச்சியுடன் பெறுவார்

பிலடெல்பியாவில் நடைபெற்ற சர்க்கஸை அமெரிக்க அதிபர் ஜார்ஜ் வாஷிங்டன் ரசித்தார். 19-ஆம் நூற்றாண்டில் சர்க்கஸ்கள் பெருகின. ஆனாலும், ஒரு நிறுவனத்தில் ஏழு குதிரைகளும், ஏழு ஆட்டக்காரர்களுமே இருந்தனர். கிளாரினெட், பேஸ்டிரம், இரும்பு வாத்தியம் ஆகியவையே இருந்தன. விளக்கேற்ற வசதிகள் இல்லாததால், காட்சிகள் பகலில்தான் நடைபெற்றன. நாளடைவில் புதுமைகள் நுழைந்தன.

முழு கட்டுரையைப் படிக்க →