தினமணி கதிர்

சிரி... சிரி...

'நான் என் மனைவியோடு நிம்மதியா இருக்கேன்...'

இணையதளச் செய்திப் பிரிவு

'நான் என் மனைவியோடு நிம்மதியா இருக்கேன்...'

'அது எப்படி?'

'அவ தனியா மொபைல் பார்த்துக்கிட்டு இருப்பா... நான் தனியா உட்கார்ந்து என் மொபைல் பார்ப்பேன்!'

-நடேஷ்கன்னா, கல்லிடைக்குறிச்சி.



'என் மகளை எத்தனை நாளா காதலிக்கிறே?'

'உங்க மொபைலுக்கு டாப்அப் பண்ணிக் குடுக்க ஆரம்பிச்சேனே... அப்போ இருந்துதான் மாமா!'

-பர்வீன் யூனுஸ், சென்னை.



'டாக்டர்... என் மனைவியோட தொண்டையில் சிம்கார்டு மாட்டிக்கிச்சு...'

'பேச முடியுதா?'

'பேச முடியாது, டாக்டர். சிம்கார்டில் பேலன்ஸ் இல்லையே!'



'என்ன... உங்க குரல் நடுங்குது?'

'அது வேற ஒண்ணுமில்லை... என் செல்போன் மழை தண்ணீரில் விழுந்துவிட்டது!'



'அவரு பெரிய சவுண்ட் பார்ட்டி!'

'எப்படி?'

'யாரிடம் போனில் பேசினாலும் மற்றவங்களைப் பேச விடாமல் சவுண்டா கத்துவாரு!'



'எங்க எம்.எல்.ஏ. 24 மணி நேரமும் வாட்ஸ் அப்-ல இருப்பாரு...'

'தொகுதியில எப்ப இருப்பாரு?'

-தீபிகா சாரதி, சென்னை.



'அமைச்சரே... எதிரி மன்னன் வாட்ஸ் அப்பில் ஏதோ தகவல் அனுப்பியிருக்கிறாரே... என்னவாம்?'

'நீர் ஓடும்போது கையில் வாளை எதற்குச் சுமக்க வேண்டும். போட்டுவிட்டு ஓடினால் நிராயுதபாணியை நான் துரத்த மாட்டேன் என்றுள்ளது மன்னா!'

-ரத்னம் மரகதம், கோவை-15.



'எதுக்காக இப்படி வேகமாய் படிக்கட்டு வழியா இறங்குறீங்க?'

'என் செல்போன் மாடியில் இருந்து விழுந்துவிட்டது!'

'இந்த நேரம் விழுந்திருக்குமே?'

'இன்னும் விழுந்திருக்காது சார்... அதில் டைம் ஐந்து நிமிடம் ஸ்லோ!'

-ஏ.எஸ்.கோவிந்தராஜன், சென்னை.



'அந்தாளு சரியான டூபாக்கூர் பார்ட்டின்னு சொல்றீயே... எப்படி?'

'ஆப்பிள் போன் வாங்கப் போனாராம். விலை ரொம்ப அதிகமாய் இருந்ததாலே ஆரஞ்சு போன் வாங்கிட்டு வந்திருக்காராம்!'



'அந்த அம்மாவுக்கு போன் பண்ணா, 'நீங்கள் அழைத்த நபர் தொலைக்காட்சித் தொடர் பார்த்துக்கொண்டிருப்பதால் ஒரு மணி நேரம் கழித்து அழைக்கவும்'னு வாய்ஸ் மெசேஜ் வருதே?'

'அந்த அம்மாவே அப்படிப் பேசியிருக்கும், சார்!'

-வி.ரேவதி, தஞ்சாவூர்.



'புலம்பியடியே வருகிறீர்களே... போருக்குத் தேவையான எதையாவது மறந்துவிட்டீர்களா?'

'ஹெட் ஃபோனை எடுக்காமல் வந்துவிட்டேன், அமைச்சரே!'

-அ.ரியாஸ், சேலம்.



'நீயும் உன் மாமியாரும் சண்டையே போட்டுக்கிறதில்லையாமே?'

'ஆமாம்... புதுப்புது சீரியல்களை மொபைல்ல பார்க்கவே எங்களுக்கு நேரம் பத்தமாட்டேங்குதே!'

-அ.சுஹைல் ரஹ்மான், திருச்சி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இரு சக்கர வாகனம் மோதியதில் தம்பதி காயம்

புது ஆற்றில் 2 ஆண் சடலங்கள் மீட்பு

ஆதிக்கம் செலுத்தும் எண்ணம் தமிழா்களுக்கு கிடையாது: கனிமொழி எம்.பி.

எதிா்க் கட்சிகளை முடக்க முடியாது: செல்லூா் கே. ராஜூ

கல்லூரியில் பட்டமளிப்பு விழா

SCROLL FOR NEXT