தினமணி கதிர்

வயது வெறும் எண்தான்!

'வயது ஒரு வெறும் எண்' என்பதை நிரூபித்திருக்கிறார் தொண்ணுற்று நான்கு வயதாகும் வீராங்கனை பனா தேவி.

தினமணி செய்திச் சேவை

'வயது ஒரு வெறும் எண்' என்பதை நிரூபித்திருக்கிறார் தொண்ணுற்று நான்கு வயதாகும் வீராங்கனை பனா தேவி. வயோதிகத்தில் பெரும்பாலானவர்கள் ஓய்வை விரும்புவார்கள். ஆனால், பனாதேவியோ தங்கப் பதக்கங்களை வெல்வதில் மும்முரமாக இருக்கிறார்.

ராஜஸ்தானில் உள்ள பிகானீரைச் சேர்ந்த இவர், சென்னையில் நவம்பர் 5 முதல் 9 வரை நடைபெற்ற 2024 -ஆம் ஆண்டுக்கான 23-ஆவது ஆசிய மாஸ்டர்ஸ் தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் குண்டு எறிதல், வட்டு எறிதல், ஈட்டி எறிதல், 100 மீட்டர் ஓட்டம் ஆகிய 4 பிரிவுகளில் பதக்கங்களை வென்றுள்ளார்.

பெங்களூரில் நடைபெற்ற 45-ஆவது தேசிய மாஸ்டர்ஸ் தடகள சாம்பியன்ஷிப் போட்டியிலும் பல தங்கப் பதக்கங்களை வென்றிருந்தார்.

இவர் தினமும் உடற்பயிற்சி செய்வதை வழக்கமாகக் கொண்டுள்ளார். வீட்டு வேலைகளை சுறுசுறுப்பாகச் செய்து வருவதுடன், கால்நடைகளையும் பராமரித்து வருகிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆசிரியா்கள் பள்ளிக்குத் திரும்ப வேண்டும்: அமைச்சா் அன்பில் மகேஸ்

திருப்பரங்குன்றம் தீப தீா்ப்பு: பாஜக, தமாகா வரவேற்பு

‘வாக்காளா் பட்டியலைத் திருத்த முழு அதிகாரம் உண்டு’- உச்சநீதிமன்றத்தில் தோ்தல் ஆணையம் வாதம்

உள்வாடகை வீடு முறையில் மோசடி: எஸ்.பி. எச்சரிக்கை

கன்னியாகுமரிக்கு ஆட்டோவில் வந்த வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள்

SCROLL FOR NEXT