தினமணி கதிர்

பேல்பூரி

வெற்றி பெற குதிரை மாதிரி ஓடு...

தினமணி செய்திச் சேவை

கண்டது

(செங்கல்பட்டு பேருந்து நிலையம் அருகே வேன் ஒன்றின் பின்புறம் எழுதப்பட்டிருந்த வாசகம் )

'வெற்றி பெற குதிரை மாதிரி ஓடு...

வெற்றிக்குப் பின் குதிரையைவிட வேகமாக ஓடு!'

-க.அருச்சுனன், செங்கல்பட்டு.

(புதுச்சேரி தொண்டமாநத்தம் அருகில் உள்ள ஓர் ஊரின் பெயர்)

'வம்புபட்டு.'

-பி.ஆஷாலட்சுமி, செம்பனார்கோவில்.

(தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தின் பெயர்)

'வாழவல்லான்.'

-அண்ணா அன்பழகன், அந்தணப்பேட்டை.

கேட்டது

(அரக்கோணத்தில் ஒரு வீட்டு வாசலில் கணவனும் மனைவியும்...)

'ஏங்க! நான் ஆபிஸ்லயிருந்து இன்னைக்கு வீட்டுக்கு வர ரொம்ப லேட்டாகும்...'

'நீ சீக்கிரம் வந்தாலும், நான் தானேபா சமைக்கிறேன்...!?'

-ஏ. மூர்த்தி, புல்லரம்பாக்கம்.

(செங்குன்றத்தில் ஒரு டீக்கடைக்காரர் தன் நண்பரிடம்)

'ஒருகிலோ சர்க்கரை வாங்குனா ஒரு வாரத்துக்கு வருதுப்பா!'

'ஆச்சர்யமா இருக்கே... எப்படி?'

'சர்க்கரை நோயால பெரும்பாலான கஸ்டமர்கள் வித்தவுட் சுகர் டீ, காபியே குடிக்கிறாங்கப்பா!'

-சிவன், திருவள்ளூர்.

(சென்னை, நந்தனம் புத்தகக் கண்காட்சியில் ஓர் இளம் தாயும், அவருடைய மகளான சிறுமியும்...)

'என்னம்மா, இன்னும் சில்ரன் புக் செக்ஷன் பக்கம் கூட்டிட்டுப் போகாம இருக்கே...?'

'பரவாயில்லையே... உனக்கும் நல்ல புத்தி வந்துடுச்சே... எப்பவும் ஸ்நாக் சாப்பிட எப்போ போகலாம்னு இல்லே கேட்பே!'

-கே.ஜி.எஃப். பழனி, கிழக்கு தாம்பரம்.

யோசிக்கிறாங்கப்பா!

கடுமையாய் உழைப்பவனுக்கு

கவலைப்பட நேரமிருக்காது!

- உமா கணேசன், நமசிவாயபுரம்.

மைக்ரோ கதை

ஒரு கணவனும் மனைவியும் தங்களுக்குள் அடிக்கடி சண்டை நடப்பதால், கவுன்சிலிங்கிற்காக மருத்துவரைச் சந்தித்தனர்.

'ஓகே! உங்க பிரச்னை ரொம்ப சின்னது தான். நான் உங்களுக்கு ஆளுக்கு ஒரு நோட்டு தர்றேன். உங்களுக்குள் எப்பவெல்லாம் கோபம், சண்டை வருதோ... அந்தக் கோபத்தைப் பற்றி நோட்டில் எழுதி, ஒரு வாரத்தில் கொண்டு வாங்க... பிரச்னையை 'சால்வ்' பண்ணிடலாம் !' என்றார்.

இருவரும் விடைபெற்று ஒரு வாரம் கழித்து மருத்துவரைப் பார்க்க மீண்டும் வந்தனர்.

'சரியா வந்துட்டீங்களே... ஆமா, உங்க கையில நான் கொடுத்த நோட்டைக் காணோமே?'

'யார் முதலில் எழுதறதுன்னு வந்த ஈகோவுல சண்டை வந்து ரெண்டு நோட்டும் கிழிந்து போயிடுச்சு, டாக்டர்!' கணவனும் மனைவியும் சொல்ல... தலையில் கை வைத்தார் மருத்துவர்.

-எம்.பி.தினேஷ், கோவை - 25.

எஸ்எம்எஸ்

வெற்றி என்பது சந்தோஷம்...

தோல்வி, வாழ்க்கையில் கிடைத்து மிக அற்புதமான பாடம்!

-ஜி.அழகிரிவேல், ஒதியடிக்காடு.

அப்படீங்களா!

சமூக ஊடகத்தில் சிறு விடியோக்கள் எனப்படும் 'ரீல்'கள் பெருமளவில் வலம் வருகின்றன. பிற மொழிகளில் இந்த ரீல்கள் உள்ளதால் பெருமளவில் பார்வையாளர்கள் கிடைப்பதில்லை.

மொழி பிரச்னையைப் போக்கும் வகையில், ரீல்களை தமிழ், தெலுங்கு, கன்னடம், மராத்தி, ஹிந்தி, பெங்காலி ஆகிய ஆறு மொழிகளில் 'டப்பிங்' செய்வதற்கான புதிய சேவை இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக் ஆகியன தொடங்கி உள்ளன. இதனால் மாற்று மொழியினரும் இவற்றைக் காணும் வசதி ஏற்பட்டுள்ளது.

இதற்கு முன்பு ஆங்கிலத்தில் இருந்து ஸ்பானிஷ், போர்ச்சுகீஸ் ஆகிய மொழிகளில் ரீல்களை டப்பிங் செய்யும் வசதியை மெட்டா நிறுவனம் அளித்திருந்தது.

அதுமட்டுமில்லாமல், தேவநாகிரி, பெங்காலி, அஸ்ஸாமி எழுத்துகளில் மொழிபெயர்ப்பு வாசகங்கள் இடம்பெறும் சேவையும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இந்தச் சேவையைப் பெற இன்ஸ்டாகிராமில் டைம்லைனில் உள்ள 'எடிட்டிங்கில்' சென்று 'டெக்ஸ்ட்'-யை தேர்வு செய்து 'ஏ.ஐ. ஐகான்' உள்ளே சென்று

'ஃபான்ட்ஸ்'களை தேர்வு செய்து கொள்ளலாம். இந்த சேவை இந்தியாவில் மெல்ல மெல்ல ஆன்ட்ராய்ட் பயன்பாட்டாளர்களுக்கு வழங்கப்படும் என்று மெட்டா நிறுவனம் தெரிவித்துள்ளது.

-அ.சர்ப்ராஸ்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பேட்ரியாட் வெளியீட்டுத் தேதி!

திருவள்ளூரில் குடியரசு நாள் கொண்டாட்டம்!

மூன்றாவது வரிசையில் ராகுல் காந்தி! மீண்டும் அவமதிப்பா?

கிருஷ்ணகிரியில் குடியரசு நாள் விழா

காஞ்சிபுரத்தில் குடியரசு நாள் விழா கொண்டாட்டம்!

SCROLL FOR NEXT