புள்ளிகள்
டாக்டர் அல்லி, வாடாமலர், செந்தாமரை, கயமை, கரித்துண்டு, கள்ளோ காவியமோ, அகல் விளக்கு எனப் பல நூல்களை எழுதி, அந்தக்கால இளைஞர்களின் மனம் கவர்ந்தவர் டாக்டர் மு.வரதராசனார்.
டாக்டர் அல்லி, வாடாமலர், செந்தாமரை, கயமை, கரித்துண்டு, கள்ளோ காவியமோ, அகல் விளக்கு எனப் பல நூல்களை எழுதி, அந்தக்கால இளைஞர்களின் மனம் கவர்ந்தவர் டாக்டர் மு.வரதராசனார்.
அந்த நூல்களில் 'அகல் விளக்கு', 1961-ஆம் ஆண்டுக்கான சாகித்திய அகாதெமி விருதைப் பெற்றது. விருது அளிக்கப்பட்டபோது வழங்கப்பட்ட தொகையில் ஒரு பகுதியை நூலை அச்சிட்ட தொழிலாளர்களுக்கு மு.வ. அளித்து மகிழ்ந்தார்.
'பாட்டுத் துறைக்கு வந்திருக்காவிட்டால் நான் படத் துறைக்குப் போயிருப்பேன் என நினைக்கிறேன். படம் என்றால் திரைப்படத்தைச் சொல்லவில்லை. ஓவியம் வரைவதைச் சொல்கிறேன். ஓவியம் வரைவதில் எனக்கு ஈடுபாடு உண்டு.
Advertisement
Advertisement
அதில் எனக்குப் பயிற்சி கிடையாதே தவிர, ஓவியக் கண்காட்சி சென்னையில் எங்கு நடந்தாலும் என் கணவருடன் சென்று பார்த்துவிட்டு வருவேன். நீண்ட நேரம் ஒவ்வொரு படத்தின் அருகிலும் நின்று ரசிப்பேன். குழந்தைகளைப் பற்றிய படம் என்றால் மிகவும் பிடிக்கும்' என்று விழா ஒன்றில் பாடகி பி.சுசீலா கூறினார்.
-த.சீ.பாலு, அத்திப்பட்டு.
'ரேடியோ' என்று அறிமுகமான கருவியை தமிழில் எவ்வாறு அழைப்பது என்று தமிழறிஞர்கள் தவித்த நேரத்தில், டி.கே.சிதம்பரநாத முதலியார்தான் முதன்முதலில் 'வானொலி' என்ற சொல்லை முன்மொழிந்தார். ரேடியோ அலைகள் வானத்தின் வழியாகப் பரவி வந்து ஒலிப்பதால், 'வான் + ஒலி=வானொலி' என்று அவர் விளக்கமும் அளித்தார். ஆகாஷ்வாணி எனும் ரேடியோவின் ஹிந்தி மொழி வார்த்தையை தமிழில் 'வானொலி' என்று பெயர் மாற்றத்துக்குப் பாடுபட்ட கி.ஆ.பெ.
விசுவநாதத்தை நாம் மறக்க முடியாது. வானொலி நிலையம் என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டதும், வானொலி அழகுத் தமிழ்ச்சொல்லாக மாறிவிட்டது.
('தாழம்பூவின் நறுமணத்தில்...' எனும் நூலில் இருந்து)
ராஜாஜி கவர்னர் ஜெனரலாக இருந்தபோது, வைசிராய் மாளிகையில் தனது குருநாதரான ரசிகமணி டி.கே.சி.யை வரவேற்றுப் பேசிக்கொண்டிருந்தார் ராஜாஜி.
ரசிகமணியோடு பேசிக்கொண்டிருப்பது என்பது காலம், நேரம் இவற்றை மறந்து போகும்படி ஆகிவிடும் காரியம்.
இன்பமாக அவர்கள் ஒருத்தருக்கு ஒருத்தர் பேசி மகிழ்ந்துகொண்டிருக்கும்போது இடையில் புகுந்த ஓர் அதிகாரி கவர்னர் ஜெனரலின் அடுத்த நிகழ்ச்சி பற்றி ஞாபகப்படுத்துகிறார். ராஜாஜியின் முகம் சுருங்கிவிட்டது.
ரசிகமணி டி.கே.சி.யிடம் மன்னிப்புக்கோரும் பாணியில், 'ஒன்றும் செய்யமுடியாது. நாம் இந்த மாளிகையில் நான் ஒரு கைதிபோலத்தான்' என்று அவருக்கே உரிய சிரிப்போடு சொன்னார் ராஜாஜி.
(கி.ரா. எழுதிய 'கரிசல் காட்டுக் கடுதாசி' நூலில் இருந்து...)
-தங்க.சங்கரபாண்டியன், பொழிச்சலூர்.
காமராஜர் பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிக்கொண்டிருந்தபோது, அவருக்கு அணிவிப்பதற்காக பிரமாண்டமான மாலையை நான்கு பேர் தூக்கி வந்தனர். இதைப் பார்த்த காமராஜர், 'இந்தா என்ன இது?' என்றார். 'உங்களுக்குப் போடுவதற்காக மாலை' என்றனர் அவர்கள். 'ஒஹோ... நீங்க நான்கு பேர் தூக்கி வரும் மாலையை நான் தனியாகத் தூக்கணுமா? அட கொண்டு போப்பா...' என காமராஜர் கூற, கூட்டத்தினர் சிரித்தனர்.
ஆரம்ப காலத்தில் தனது படங்களில் ஆண்களையே பெண் வேடத்தில் நடிக்க வைத்தார் தாதா சாஹேப் பால்கே. பெண் போன்ற நளினம் அவர்களுக்கு வர வேண்டும் என்பதற்காகவே ஆண்களைச் சேலை கட்டிக் கொண்டு நடிக்கச் சொன்னார். நாள் முழுவதும் சமையல், வீட்டு வேலைகளைச் செய்துவிட்டு வரவேண்டும் என்று நிபந்தனையையும் அவர் விதித்தார். எப்போதுமே புடவையைக் கட்டிக் கொண்டு இருக்க வேண்டும், கூந்தலை நீளமாக வளர்க்க வேண்டும், பெயரைக் கூட மாற்றிக் கொள்ள வேண்டும் என்றெல்லாம் ஆணையிட்டு இருந்தார்.
கோட்டாறு ஆ.கோலப்பன்
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.