முகப்பு
தினமணி கதிர்

சிரி... சிரி...

எப்போதும் உனக்குச் சாப்பாடு ஞாபகம் தானா?

Updated On : 15 மார்ச், 2026 at 10:03 AM
பகிர்:

'ஏன் அவர் ஆமை வடை வேண்டாங்கிறார்?'

'அவர் பியூர் வெஜிடரியனாம்!'

-வி.எஸ்.மங்கை, நங்கநல்லூர்.



'எப்போதும் உனக்குச் சாப்பாடு ஞாபகம் தானா?'

'இல்லையே... அப்பப்ப டிபன் ஞாபகமும் வரும்!'

- பர்வதவர்த்தினி, பம்மல்.



'சொந்த வீடு கட்டியும் ஏன் கவலையா இருக்கீங்க?'

'வீடு கட்டி முடித்த பிறகு நிலத்தோட சொந்தக்

காரன் வந்துட்டானே!'



'அந்த லேடீஸ் டைலர்கூட என்ன சண்டை?'

'ஜன்னல் வச்ச ஜாக்கெட்ல ரிமோட்ல திறக்கற மாதிரி டோர் வெச்சு தைச்சிருக்காரு !'

-எம்.பி.தினேஷ், இடையர்பாளையம்.



'கல்யாண மேடையை ஏன் படகு வடிவத்துல அமைச்சிருக்காங்க?'

'இந்தக் காதல் ஜோடி அடிக்கடி பீச்ல மீட் பண்ணி கல்யாணம் பண்ணிக்கிறாங்களாம்!'



'கண் டாக்டரை லவ் பண்றேன்டி!'

'பெஸ்ட் ஆப் 'லுக்'! '



'டார்லிங், உன்னை கண் கலங்காம வச்சிக் காப்பாத்துவேன்!'

'உங்களை எப்படி நம்புறது?'

'ரமா, உமாலாம் நம்புனாங்களே... அது மாதிரிதான்!'



'சேர்ந்தே இருப்பது எது புலவரே?'

'வாரப்பத்திரிகையும் மன்னர் ஜோக்ஸூம், அரசே!'



'ஃபேஸ்புக்ல நண்பரான அந்தப் பையனை கட்டிக்கிறதுல என்ன சிக்கல்?'

'எங்கப்பா 'லைக்' பண்ண மாட்டேங்கிறாரே!'

-பர்வீன் யூனுஸ், சென்னை.



'மன்னர் யாருக்கு மிகவும் அஞ்சுவார்? ராணிக்கா? எதிரிக்கா?'

'புலவரை விட்டுவிட்டீர்களே!'



'பதுங்குக் குழியே கதி என்று கிடந்தால் எப்படி மன்னா?'

'இதை போர் ஓலை அனுப்பும் அண்டை நாட்டு மன்னர்களிடம் கேள்!'



'நம்ப ராப்பிச்சைக்கு எவ்வளவு கிண்டல் பாருடீ...?'

'என்ன விஷயம்?'

'பாவம்னு நினைச்சு சோறு போட்டா, 'குக்கர்ல இன்னைக்கு சோறு வழியலையா தாயி?'ன்னு கேக்கறாண்டி!'



'எனக்குச் சிக்கனமே இல்லைனு சொல்றியேன்னு, 'சிக்கனமாக வாழ்வது எப்படி?'ங்கிற புத்தகத்தை வாங்கிட்டு வந்திருக்கேன் பாரு..!'

'வெளங்கிடும் போங்க ... ஐந்நூறு ரூபா கொடுத்து யாராவது ஐம்பது பக்க புத்தகத்தை வாங்குவாங்களா?'



' என்ன மாமா உங்க பொண்ணு இப்படிச் சத்தமா பேசறா?'

'நான்தான் முதல்லயே சொல்லியிருக்கேனே மாப்ளே... அவ 'கூச்சல் சுபாவம் உள்ளவ'ன்னு!'



'அவனுக்கு ஏன் கடன் கிடையாதுன்னு சொல்லி அனுப்பிட்டே?'

'எப்படி திருப்பித் தருவேன்னு கேட்டதுக்கு, 'ஆன்லைன் ரம்மில ஜெயிச்சாவது தந்துடுவேன்'னு சொன்னானே.!'



'நான் எப்பயாச்சும் கோவமா இருந்தா, உடனே என் மனைவி வந்து என்னை சாந்தப்படுத்திடுவா!'

'எப்படி சார்?'

'அவளோட கோவத்தைக் காட்டித்தான்!'

-வி.ரேவதி, தஞ்சை.

முழு கட்டுரையைப் படிக்க →