முகப்பு
தினமணி கதிர்

நவாப்பின் சொந்த ரயில்!

உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த ராம்பூர் சமஸ்தானத்தை 1889-ஆம் ஆண்டு முதல் 1930 வரை ஆட்சி செய்த மன்னர் நவாப் சர் சையத் ஹமீது அலிகான் பகதூர், செல்வமிக்கவர்.

Updated On : 17 மே 2026, 4:01 am IST
பகிர்:

உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த ராம்பூர் சமஸ்தானத்தை 1889-ஆம் ஆண்டு முதல் 1930 வரை ஆட்சி செய்த மன்னர் நவாப் சர் சையத் ஹமீது அலிகான் பகதூர், செல்வமிக்கவர்.

அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகம், லக்னோ மருத்துவக் கல்லூரி, ராசா நூலகம் உள்ளிட்ட கல்வி நிலையங்களுக்கு உதவிகளைச் செய்து பாதுகாத்ததால், கல்வியாளராக இன்றும் புகழப்படுபவர். இவர் தன்னுடைய அரண்மனைக்கு நேரடியாகச் செல்ல சொந்தமாக ரயில் பாதையை 1925-இல் அமைத்ததோடு, அதற்கெனத் தனியாக நிலையத்தையும் அமைத்தவர்.

41 ஆண்டுகள் ஆட்சியில் இருந்த இவர், 1930-இல் தனது 54-ஆவது வயதில் மறைவுற்றார். பின்னர், இவரது மகன் நவாப் ராசா அலி கான் பகதூர் ஆட்சிக்கு வந்தார். பத்தாவது நவாப்பான இவரே, சமஸ்தானத்தில் கடைசி நவாப்பும்கூட!

Advertisement

நான்கு பெட்டி

களைக் கொண்ட இந்த ரயில் மிக ஆடம்பரமாக இருந்தது. ஒவ்வொரு பெட்டியும் பாரசீக கம்பளங்கள், நுணுக்கமாகச் செதுக்கப்பட்ட தேக்கு மரத் தளவாடங்கள், நேர்த்தியான திரைச்சீலைகள், பிரம்மாண்ட சரவிளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு அது ஒரு நகரும் அரண்மனை சூழலைக் கொண்டிருந்தது.

ரயிலில் ஓர் ஆடம்பரமான படுக்கை அறை, முறையான உணவருந்தும் பகுதி, முழுமையாகச் செயல்படும் சமையலறை, பிரத்யேகப் பொழுதுபோக்கு இடம் உள்ளிட்ட வசதிகளும் இருந்தன. பணியாளர்கள், பாதுகாப்புப் பணியாளர்கள், சமையலர்களுக்குத் தனித்தனியே இருக்கைகள் ஒதுக்கப்பட்டன.

மிலக்கிலிருந்து ராம்பூர் வரை 40 கி.மீ. நீளமுள்ள ரயில் பாதை பிரத்யேகமாக அமைக்கப்பட்டது. பிறகு ரயில் பொதுப்பாதையில் இணைந்து பயணிக்கும்.

அரண்மனை வளாகத்திலேயே இருந்த பிரத்யேக ரயில் நிலையமானது நவாப்பின் அந்தஸ்து, பெருமையின் சக்தி வாய்ந்த சின்னமாக விளங்கியது.

1947-இல் நாடு பிரிவினையின்போது கொந்தளிப்பான காலகட்டத்தில் எண்ணற்ற குடும்பங்கள் பாகிஸ்தானுக்கு விரும்பி இடம்பெயர்ந்தது. அப்போது பாகிஸ்தானுக்கு பாதுகாப்பாகச் செல்ல விரும்பியவர்களுக்கு உதவுவதற்காக நவாப் தனது தனி ரயிலை பயன்படுத்திக் கொள்ள அனுமதித்தார்.

அவரது குடும்பத் தினரின் மறைவுக்குப் பின்னர், அரச ரயில் நிலையத்தின் கம்பீரம் மங்கத் துவங்கியது. 1954-இல் ரயில் நிலையம் மத்திய அரசிடம் ஒப்படைக்கப்பட்டு, 1966-ஆம் ஆண்டு வரை பயன்பாட்டில் இருந்தது.

பின்னர், தண்டவாளங்கள் சேதமுற்றன. கட்டடத்தின் மீது தூசி படிய, நவாப்பின் பிரம்மாண்ட ரயில் கடந்த காலத்தின் நினைவுச் சின்னமாக இப்போது மாறியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.