தினமணி கொண்டாட்டம்

ஏ.ஆர்.ரஹ்மானின் "ஒன் ஹார்ட்'

DIN

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், கன்சர்ட் வகைத் திரைப்படம் ஒன்றை இயக்கித் தயாரித்திருக்கிறார். என்ன கன்சர்ட் வகை? ஒரு இசைக்கலைஞர் தன்னுடைய இசைக்குழுவுடன் இணைந்து ஒரு இசை நிகழ்ச்சியை எவ்விதம் வெற்றிகரமாக மேடையேற்றுகிறார் என்பதை விவரிக்கும் திரைப்படமாம். தமிழில் இப்படியொரு பாணியில் படம் வெளிவருவது இதுவே முதன் முறை என்கிறார்கள். ஹாலிவுட்டில் இதற்கு முன் மைக்கேல் ஜாக்சனை வைத்து "திஸ் இஸ் இட்' என்ற படம் இந்த பாணியில் உருவாகியிருந்தது.  பிரம்மாண்டமான முறையில் வெளிவந்து வெற்றிப் பெற்ற இந்தப் படத்தை முன் மாதிரியாக கொண்டு உருவாகி வருகிறது ஏ.ஆர்.ரஹ்மானின்  "ஒன் ஹார்ட்'. ஒரு இசை நிகழ்ச்சிக்காக ஏ.ஆர்.ரஹ்மான் எப்படி தயாராகிறார் என்பதை ரசிகர்கள் அறிந்திருக்க முடியாது. இது போன்ற நிகழ்வுகளை உள்ளடக்கியதாக இந்தப் படத்தின் திரைக்கதை இருக்கும். 16 பாடல்கள் இடம் பெற்றுள்ள இப்படத்தில், பல தமிழ்ப் பாடல்களும் இடம் பெற்றுள்ளன.  ரஹ்மானும் அவருடைய இசைக்குழுவில் இடம்பெற்றிருக்கும் அனைத்துக் கலைஞர்களும்தான் இந்தப் படத்தில் நடிகர்கள். பலவித உணர்வுகளின் கலவையாக இருக்கும் இப்படம் தமிழ், ஆங்கிலம் , ஹிந்தி ஆகிய மூன்று மொழிகளில் வெளிவரவுள்ளது.  "ஆங்கிலப் பதிப்பில் தமிழ்ப் பாடல்கள் நேரடியாக இடம் பெற்றுள்ளது இதன் சிறப்புகளில் ஒன்று' என்கிறது படக்குழு.  
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரயில்வே பாதுகாப்புப் படையில் 4,660 காலிப் பணியிடங்கள்: மே 14-க்குள் விண்ணப்பிக்கலாம்

இன்று நீட் தோ்வு: 11 மையங்களில் 6,120 மாணவ, மாணவிகள் எழுதுகின்றனா்

வணிகா் தினம்: தமிழகத்தில் இன்று கடைகள் இயங்காது

அந்நியச் செலாவணி கையிருப்பு 63,792 கோடி டாலராகக் குறைவு

கோடை வெயில் தாக்கம் அதிகரிப்பு: வேளாங்கண்ணியில் பக்தா்களுக்கு சிறப்பு வசதிகள்

SCROLL FOR NEXT