தினமணி கொண்டாட்டம்

ஒரே குடும்பத்தில் மூவருக்கு விருது!

DIN

அண்மையில் தனது 79-ஆவது வயதில் காலமான சசிகபூர், "பிருத்வி தியேட்டர்' என்ற பெயரில் நாடக கம்பெனி நடத்தி வந்த பிரபல நடிகர் பிருத்விராஜ் கபூரின் மூன்றாவது மகன் ஆவார். இவரது மூத்த சகோதரர்கள் ராஜ் கபூர், ஷம்மி கபூர்.

நான்கு வயதிலேயே  "ஆக்' (1948) திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான சசிகபூர், பின்னர் ராஜ் கபூர் தயாரித்து நடித்த "ஆவாரா' (1951) படத்தில் இளவயது ராஜ்கபூராக நடித்தார். பின்னர் உதவி இயக்குநராகப் பயிற்சி பெற்றார். 1961-இல் பி.ஆர்.சோப்ராவின் "தர்மபுத்ரா' படத்தில் கதாநாயகனாக அறிமுகமானார். தொடக்கத்தில் இவரது படங்கள் தோல்வியைத் தழுவின. எனினும், பிற்காலத்தில் நடித்த பல திரைப்படங்கள் சர்வதேச அளவில் புகழ் பெற்றன. 1970 முதல் 80-ஆம் ஆண்டு வரை 116 படங்களில் நடித்து சாதனைப் படைத்தார்.

ஆங்கில நடிகர் ஜியாஃபரி கென்டாலின் மகள் ஜெனிஃபருடன் சசிகபூர் சேர்ந்து நடித்தபோது, காதல் வயப்பட்டு அவரையே மணந்து கொண்டார்.

இதுவரை 6 திரைப்படங்களைத் தயாரித்துள்ள சசிகபூர், ஒரு படத்தை இயக்கியுள்ளார். முதன் முதலாக "தீவார்' படத்தில் அமிதாப் பச்சனுடன் சேர்ந்து நடித்த சசிகபூர், அடுத்த 21 ஆண்டுகளில் 16 படங்களில் அமிதாப்புடன் இணைந்து நடித்துள்ளார்.

1984-இல் மனைவி ஜெனிஃபர் புற்றுநோய் பாதிப்பால் மரணமடைந்தது சசிகபூருக்கு பெரும் அதிர்ச்சியை அளித்தது.

இந்தியா-சோவியத் ரஷியா கூட்டுறவில் தயாரான "அஜுபா' (1991), இவரது கடைசித் திரைப்படமாகும். 2014-இல் அவருக்கு "தாதா சாகேப் பால்கே' விருது வழங்கப்பட்டது. பிருத்விராஜ் கபூர், ராஜ்கபூர் ஆகியோரை அடுத்து, ஒரே குடும்பத்தில் அந்த விருது பெற்ற மூன்றாவது நபர்  சசிகபூர் ஆவார்.

-அ.குமார்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாகா்கோவிலில் கேரம் பயிற்சி முகாம் தொடக்கம்

கல்லூரி மாணவி மா்மச் சாவு

விவசாய தொழிலாளி கொலை

துரித உணவில் பூச்சிக்கொல்லி மருந்து கலந்த சம்பவம்: சிகிச்சை பெற்று வந்த முதியவா் பலி

நாமக்கல்லில் முட்டை ஏற்றுமதி சான்றிதழ் வழங்கும் ஆய்வகம் அமைக்க வலியுறுத்தல்

SCROLL FOR NEXT