தினமணி கொண்டாட்டம்

பாலிவுட் செல்கிறார் தன்ஷிகா!

தினமணி

அசின், திரிஷா, காஜல் அகர்வால், தமன்னா, ஸ்ரேயா என கோலிவுட் ஹீரோயின்கள் பாலிவுட்டில் நடிக்கச் சென்று ஜெயிக்க முடியாமல் திரும்பினார்கள். இதில் கொஞ்சம் தாக்குப் பிடித்தவர் அசின் மட்டுமே. அவரும் திருமணத்துக்குப் பின் விலகி கொள்ள, இப்போது கோலிவுட் ஹீரோயின்கள் பாலிவுட் களத்தில் இல்லை. இந்நிலையில் ஹிந்தியில் நடிக்க உள்ளார் சாய் தன்ஷிகா. இது பற்றி அவரிடம் பேசும் போது... "கோலிவுட்டிலிருந்து சென்ற நடிகைகள் பாலிவுட்டில் பெரிதாக ஜொலிக்கவில்லை என்பதை ஏற்க முடியாது. ஸ்ரீதேவி தனக்கென ஓர் இடத்தை பாலிவுட்டில் பிடித்தார். எல்லாம் சரியாக அமைந்தால் வெற்றிதான். "பரதேசி', "கபாலி' படங்களின் பாதிப்பால் எனக்கு ஹிந்தியில் இருந்து அழைப்பு வருகிறது. அதற்கான கதை தேர்வில் உள்ளேன்.   சமீபத்தில் வந்துள்ள "உரு' பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. "காலக்கூத்து', "விழித்திரு', தமிழ், மலையாளம் இருமொழியில் உருவாகும் "சோலோ' மற்றும் தெலுங்கில் "வாலு ஜடா', கன்னடத்தில் சுனில் குமார் தேசாய் இயக்கும் படம் என வெவ்வேறு படங்களில் நடிக்கிறேன். கமர்ஷியல் ஹீரோயினாக நடிக்க மாட்டீர்களா? என்கிறார்கள். பாலா, வசந்தபாலன் படங்களில் நடித்த பிறகு நடிப்புக்கு முக்கியத்துவம் தரும் வேடங்களில் நடிக்கும் எண்ணமே மனதில் பதிந்துவிட்டது. கமர்ஷியல் ஹீரோயினாக நடிக்க நான் தயார். சாய் பாபா பக்தையான நான் என்பெயரை "சாய் தன்ஷிகா' என மாற்றிகொண்டேன்'' என்றார்.  
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வானம், நிலவு, கடல்.. அஞ்சலி!

ராபாவில் இஸ்ரேல் நேரடித் தாக்குதல்? மக்களை இடம்பெயரக் கோரும் புதிய அறிவிப்பு!

தமிழ்நாட்டில் கோடை காலத்திலும் தடையில்லா மின் விநியோகம் -தலைமைச் செயலாளர்

பொருளின் பொருள் கவிதை

ப்ளிங்க் - சிந்திக்காமலேயே சிந்திக்கும் ஆற்றல்

SCROLL FOR NEXT