தினமணி கொண்டாட்டம்

"100% காதல்'

DIN

தெலுங்கில் வெளியாகி ரசிகர்களின் பெரும் வரவேற்பைப் பெற்ற "100% லவ்' தமிழில் "100% காதல்' என்ற பெயரில் ரீமேக்காகிறது. இதன் கதாநாயகனாக ஜி.வி.பிரகாஷ் நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக ஷாலினி பாண்டே நடிக்கிறார். சமீபத்தில் இவர் தெலுங்கில் நடித்த "அர்ஜூன் ரெட்டி' மிகப் பெரும் வெற்றிப் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.  கடந்த சில வாரங்களுக்கு முன்பு இப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்ஸ் வெளியிடப்பட்டுள்ள நிலையில், இப்படத்தின் துவக்க விழா சென்னை ஏவி.எம்.மில் கடந்த வாரம் நடைபெற்றது. இயக்குநர் சுகுமார் தயாரிக்கவுள்ள இப்படத்துக்கு ஜி.வி.பிரகாஷே இசையமைக்கவுள்ளார்.  எம்.எம். சந்திரமௌலி இப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாக இருக்கிறார். ஒளிப்பதிவாளராக டட்லி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். சுகுமார் இயக்கத்தில் நாக சைதன்யா, தமன்னா உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் "100% லவ்'. 2011-ஆம் ஆண்டு வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்ற இப்படத்தை கீதா ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரித்து வெளியிட்டது. சுகுமார் இயக்கியிருந்தார். முதற்கட்டப் படப்பிடிப்பு சென்னையில் துவங்கியுள்ளது. ஒரே கட்டமாக படப்பிடிப்பை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. வரும் மே மாத வெளியீடாக படம் திரைக்கு வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மதுபானக் கடைகளுக்கு நாளை விடுமுறை

கல்லூரி மாணவா்களை பாதி வழியில் இறக்கிவிட்ட தனியாா் பேருந்துகள் சிறைபிடிப்பு

பிரதமரைக் கண்டித்து காங்கிரஸ் மகளிரணி ஆா்ப்பாட்டம்

சாத்தான்குளம் பகுதியில் தொடங்கியது கொல்லாம்பழம் சீசன்: கிலோ ரூ.100க்கு விற்பனை

கழுகுமலையில் மழை வேண்டி மாணவி யோகாசனம்

SCROLL FOR NEXT