தினமணி கொண்டாட்டம்

விதி மதி உல்டா

DIN

ஏ.ஆர்.முருகதாஸின் உதவியாளர் விஜய் பாலாஜி கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கி வரும் படம் "விதிமதி உல்டா'. ரமீஸ் ராஜா கதா நாயகனாக நடிக்கிறார். ஜனனி அய்யர் கதாநாயகியாக நடிக்கிறார். டேனியல் பாலாஜி, கருணாகரன், சென்ட்ராயன், சித்ரா லட்சுமணன், ஞானசம்பந்தம் உள்ளிட்டோர் கதையின் பிரதான கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். மனிதன், கடவுள், அறிவியல் இந்த மூன்று புள்ளிகளுக்கான தொடர்பை விளக்கும் விதமாக திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது.  படப்பிடிப்பு முடிந்துள்ள நிலையில், படத்தின் பாடல்கள் மற்றும் ட்ரெய்லர் வெளியாகி வருகின்றன.  படத்துக்காக ஜி.வி.பிரகாஷ் பாடிய "தாறுமாறா ஒரு பார்வை பார்த்தா.. ஏறுமாறா என்னை அடித்து தூக்க...' என்ற பாடலின் வீடியோவை நடிகர் சிவகார்த்திகேயன் கடந்த வாரம் தனது சுட்டுரைப் பக்கத்தில் வெளியிட்டார். ஒரு நிமிட காட்சியாக வெளிவந்துள்ள இப்பாடல், ரசிகர்களின் பரவலான வரவேற்பை பெற்றுள்ளது. இந்த பாடலின் முழுமையான வீடியோ விரைவில் வெளியாக உள்ளது. இந்நிலையில், இப்படத்தின் ட்ரெய்லரை  இயக்குநர் பா.ரஞ்சித், தனது சுட்டுரைப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இதற்கும் ரசிகர்களின் வரவேற்பு கிடைத்துள்ளது. படத்தின் இறுதிக் கட்டப் பணிகள் நடந்து வருகின்றன. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

100 நாள் வேலை திட்ட ஊதியம் ரூ. 400 ஆக உயர்த்தப்படும் -ராகுல் காந்தி

150 இடங்களில் கூட தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெறாது! ராகுல் பேச்சு

தக் லைஃப் படத்தின் முக்கிய அறிவிப்பை வெளியிட்ட படக்குழு!

ராயன் அப்டேட்!

டி20 உலகக் கோப்பைக்கு பயங்கரவாத அச்சுறுத்தல்!

SCROLL FOR NEXT