தினமணி கொண்டாட்டம்

சதாவின் "டார்ச் லைட்'

தினமணி

பெண்களுக்கான  விழிப்புணர்வுப்  படமாக உருவாகி வரும் படம் "டார்ச் லைட்'. கான்ஃபிடன்ட் ஃபிலிம் கேஃப் நிறுவனத்துடன் இணைந்து ஆர்.கே.ட்ரீம் வேர்ல்டு - ஒயிட் ஸ்க்ரீன் நிறுவனங்கள் இப்படத்தை தயாரிக்கின்றன. விஜய் நடித்த "தமிழன்' படத்தை இயக்கிய அப்துல் மஜித் இப்படத்தின் கதை எழுதி இயக்குகிறார். படத்தின் முக்கிய கதாபாத்திரம் ஏற்று நடிக்கிறார் சதா. ரித்விகா, உதயா, இயக்குநர் வெங்கடேஷ் , சுஜாதா, ரங்கநாதன் உள்ளிட்டோர் கதையின் பிரதான கதாபாத்திரங்கள் ஏற்று நடிக்கின்றனர். படம் குறித்து இயக்குநர் பேசுகையில்...  
"வறுமையால் தடம் மாறி செல்லும் பெண்களின் எண்ணிக்கை இந்தியாவை பொறுத்தவரை நாளுக்கு நாள் பெருகி வருகிறது. பெண்களைப் போகப் பொருளாக்கி அவர்களை தங்களின் முன்னேற்றத்துக்கு பயன்படுத்தும் செயல் நல்லதல்ல.  பாலியல் தொந்தரவுக்கு ஆளான பெண்ணின் வாழ்வில் நடந்த சம்பவத்தின் தழுவலே இப்படம்.  90}களில் நடக்கும் கதையாக இந்தப் படம் உருவாகிறது .
படத்தின் கதையைக் கேட்ட நடிகைகள் பலரும் நடிக்கத் தயங்கிய நிலையில், நடிகை சதா மட்டும் தைரியமாக நடிக்கச் சம்மதித்தார்.  நிச்சயமாக இப்படிப்பட்ட சமூக அவலத்தைச் சொல்லி பெண்களிடம்  விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்  என்பதுதான் படத்தின் நோக்கம்.  இக் கதை சார்ந்து பலர் உண்மைச் சாட்சியங்களாகப்  உள்ளனர். அப்படிப்பட்ட பலரையும் சந்தித்து வீடியோவில் பேசி பதிவு செய்து இருக்கிறேன்'' என்றார் மஜித்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தீங்கலுழ் உந்தி: பாட வேறுபாடுகள்

உற்சாக கண்மணி!

பழமொழி நானூறு: முன்றுறையரையனார்

உங்களுக்குப் பிடித்த படம் எது? கேட்பது யாஷிகா ஆனந்த்...

விண்ணப்பித்துவிட்டீர்களா? மத்திய அரசில் 3712 காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!

SCROLL FOR NEXT