தினமணி கொண்டாட்டம்

பில்லா பாண்டி

DIN

"என் ஊரு, என் மண்ணு, என் "தல'ய தவிர எவனுக்கும் தல வணங்க மாட்டேன்' என்ற வசனத்துடனும், தல ரசிகர்களுக்கு இத்திரைப்படம் சமர்ப்பணம் என்றபடி முடிகிறது "பில்லா பாண்டி' படத்தின் ட்ரெய்லர். ராஜ்சேதுபதி இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படமும் தீபாவளிக்கு திரைக்கு வருகிறது. படத்தின் நாயகனாக நடித்துள்ள ஆர்.கே.சுரேஷ் படத்தைத் தயாரித்துள்ளார். மேலும் "மேயாத மான்' படத்தில் நடித்த இந்துஜா, தம்பி ராமையா, விதார்த், சாந்தினி தமிழரசன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். படத்துக்கு இளையவன் இசையமைத்துள்ளார். ஜீவன் ஒளிப்பதிவில் உருவாகியுள்ள இப்படத்துக்கு ராஜா முகமது படத்தொகுப்பு செய்துள்ளார். இப்படத்தில் அஜித் ரசிகராக, வலம் வருகிறார் ஆர்.கே.சுரேஷ். தீபாவளிக்கு அஜித் திரைப்படம் வெளிவராமலிருந்த நிலையில் ரசிகர்களின் கவலையைப் பூர்த்தி செய்யும் வகையில் இந்தப் படம் அமையும் எனத் தெரிகிறது.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ட்ரெண்டிங் ஆடையில் குஷி கபூர் - புகைப்படங்கள்

இது காங்கிரஸுக்கான நேரம்... ஒடிசாவில் ராகுல் பேச்சு

சிஎஸ்கே பேட்டிங்; வெற்றிப் பாதைக்கு திரும்புமா?

சேலையில் மிளிரும் கீர்த்தி சுரேஷ் - புகைப்படங்கள்

குஜராத் டைட்டன்ஸை வீழ்த்தி ஆர்சிபி அபார வெற்றி!

SCROLL FOR NEXT