தினமணி கொண்டாட்டம்

இளம் தலைமுறைக்கான புரிதல் 

DIN

ராம்சேவா எழுதி இயக்கி வரும் படம் "என் காதலி சீன் போடுறா'.  "அங்காடி தெரு'  மகேஷ் கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகியாக ஷாலு நடிக்கிறார். "ஆடுகளம்' நரேன், மனோபாலா, விஜய் டிவி. கோகுல் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். 
அம்ரிஷ் இசையமைக்கிறார். படம் குறித்து இயக்குநர் பேசும் போது..."" காதலை வேறு கோணத்தில் அணுகி வந்திருக்கிறேன். அது எல்லாமே இளம் தலைமுறைக்கான புரிதலாகத்தான் இருக்கும். ஒரு படம் என்னென்ன அனுபவங்களைத் தரும் என எனக்குள்ளேயே ஒரு கணக்கு இருக்கிறது. அதற்குத் தகுதியாக இந்தப் படம் வந்திருக்கிறது. இந்தப் படம் ஒரு அசல் வாழ்க்கையை விட்டு, கொஞ்சமும் விலகாமல், ஏற்றி வைத்தும் சொல்லாமல், அச்சு அசலாக வந்திருப்பதுதான் விசேஷம். சொல்லியே ஆக வேண்டும் என்ற முயற்சியில் இறங்கியிருக்கிறேன். சினிமாவில் அதிர்ஷ்டம் என்றெல்லாம் எதுவும் இல்லை. ஆரம்பத்திலிருந்து உழைப்புதான் நம்மை உயரத்துக்குக்  கொண்டு போகும் என எண்ணுகிறேன். அந்த முயற்சியில் இறங்கி இந்தப் படத்தை எடுத்திருக்கிறேன். ஆரம்பித்த ஐந்து நிமிடத்திலேயே படம் உங்களை உள்ளே இழுத்துப் போட்டு விடும். காதல், அன்பு, கலாட்டா, துரோகம் எல்லாமும் கதை. . எல்லாமே புது காட்சிகளாக எடுத்து முடித்திருக்கிறேன். சில விஷயங்கை ஊடுருவிப் பார்த்தால், இது எல்லோருக்குமான சினிமாவாகவும் இருக்கும்'' என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னையில் எங்கு அதிகபட்ச வெப்பநிலை? - தமிழ்நாடு வெதர்மேன் பதிவு!

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் நாளை சித்திரைத் தேரோட்டம்!

ஓடிடியில் மஞ்ஞுமல் பாய்ஸ்!

பயங்கரவாதிகளின் தாக்குதல் மிகவும் வெட்கத்திற்குரியது: ராகுல் காந்தி

திருநள்ளாறு கோயிலில் குவிந்த பக்தா்கள்

SCROLL FOR NEXT