தினமணி கொண்டாட்டம்

மீண்டும் ஜேசுதாஸ்

DIN

எஸ்.என்.எஸ். மூவீஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் படம் " தமிழரசன்'. விஜய் ஆண்டனி கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகியாக ரம்யா நம்பீசன் நடிக்கிறார். சுரேஷ் கோபி, ராதாரவி, சோனு சூட், யோகி பாபு, சங்கீதா, கஸ்தூரி, சாயாசிங் உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.
 இயக்குநர் மோகன் ராஜாவின் மகன் மாஸ்டர் பிரணவ் குழந்தை நட்சத்திரமாக நடிக்கிறார். படத்தின் படப்பிடிப்பு ஒரு புறம் நடந்து வரும் வேளையில், பாடல்களை உருவாக்கி வருகிறார் இசையமைப்பாளர் இளையராஜா. இந்தப் படத்துக்காக சுமார் 10 ஆண்டுகளுக்குப் பின் சினிமாவில் பாட வருகிறார் கே.ஜே.ஜேசுதாஸ்.
 கடந்த 2009-ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளிவந்த "பழசிராஜா' படத்துக்காக கடைசியாகப் பாடியிருந்தார் ஜேசுதாஸ். அதற்குப் பிறகு எந்தச் சினிமாவிலும் பாடாமல் தவிர்த்து வந்தார். இப்போது "தமிழரசன்' படத்துக்காக விடுக்கப்பட்ட அழைப்பை ஏற்றுப் பாட வந்துள்ளார்.
 இது குறித்து இயக்குநர் பாபு யோகேஸ்வரன் பேசும் போது... பாடகர் கே.ஜே.ஜேசுதாஸ், எங்கள் படத்துக்காகப் பாட வந்ததில் பெரும் மகிழ்ச்சி. இது எங்கள் படக்குழுவினருக்கு கிடைத்த மரியாதை என்று தெரிவித்துள்ளார். ஒளிப்பதிவு - ஆர்.டி.ராஜசேகர். பாடல்கள் - பழனிபாரதி, ஜெய்ராம். கலை - மிலன். ஸ்டண்ட் - அனல் அரசு. தயாரிப்பு - கௌசல்யா ராணி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காரைக்கால் மாங்கனித் திருவிழா பந்தல்கால் முகூா்த்தம்:திருவிழா ஜூன் 19-இல் தொடக்கம்

மறுவெளியீட்டில் அசத்தும் கில்லி: அஜித்தின் 3 படங்கள் இணைந்தும் குறைவான வசூல்!

இந்தியாவில் 2 கோடி கணக்குகளை நீக்கியது வாட்ஸ்ஆப்

அதே அரண்மனை! நம்பர் மட்டும் வேறு! : அரண்மனை - 4 திரைவிமர்சனம்!

அதிக விக்கெட்டுகள்: தமிழக வீரர் நடராஜன் முதலிடம்!

SCROLL FOR NEXT