தினமணி கொண்டாட்டம்

நடிகர் இயக்கும் கதை

DIN

"வட சென்னை' உள்ளிட்ட படங்களில் நடிகராக வெளிப்பட்ட பாவெல் நவகீதன் இயக்குநராக அறிமுகமாகும் படம் "வி 1'. ராம் அருண் காஸ்ட்ரோ, விஷ்ணு பிரியா, லிஜேஷ், மைம் கோபி, காயத்ரி, லிங்கா, மோனிகா, மனிஷா ஜித் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். காவல்துறையில் பொறுப்பு வகிக்கும் அதிகாரிக்கு இருட்டை கண்டால் பயம். பகல் என்றாலும் இருள் சூழ்ந்த பகுதிகளுக்குச் செல்ல மாட்டார். அப்படியான தருணத்தில் ஒரு கொலை வழக்கில் துப்பறியும் சூழல்.
 இருளை கண்டால் பயம் கொள்ளும் அந்த அதிகாரி, இருளில் நடந்த அந்தக் கொலையை எப்படி விசாரித்தார், அதன் முடிவு என்ன என்பதே இதன் கதை. இன்வஸ்டிகேட்டிவ் த்ரில்லர் பாணியில் உருவாகி வரும் இப்படம், காட்சிக்குக் காட்சி புதுப்புது யுக்திகளையைக் கையாண்டு அமைக்கப்பட்டுள்ளது. படப்பிடிப்பு முடிந்துள்ள நிலையில் படத்தின் இறுதிக் கட்டப் பணிகள் நடந்து வருகின்றன. பேரடைம் பிக்சர் ஹவுஸ் மற்றும் கலர்புல் பீட்டா மூவ்மண்ட் ஆகிய நிறுவனம் இணைந்து தயாரிக்கிறது. ஒளிப்பதிவு - கிருஷ்ணா சேகர். இசை - ரோனி ரப்ஹெல்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

எழுச்சியில் தொடங்கி சரிவில் முடிவு: சென்செக்ஸ் 733 புள்ளிகள் வீழ்ச்சி!

கூடலூரில் நாளை மகளிா் பாா்வை நாள் மற்றும் பிராா்த்தனை தினம்

தில்லி காவல் தலைமையகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் சிறுவன் கைது

தில்லி கலால் கொள்கை முறைகேடு வழக்கில் மேலும் ஒருவா் கைது

ஜோலாா்பேட்டை மெமு ரயில் இன்று ரத்து

SCROLL FOR NEXT