தினமணி கொண்டாட்டம்

உழைப்பை மதித்த துணைவேந்தர்

DIN

சென்னைப் பல்கலைக்கழகத்தில் தொடர்ந்து 27 ஆண்டுகள் துணைவேந்தராகப் பணியாற்றியவர் அ.இலட்சுமணசாமி முதலியார்.
 இவர் துணைவேந்தராக இருந்தபோது பட்டப்படிப்பு சான்றிதழ்களில் கையெழுத்து என்ற இடத்தில் துணைவேந்தரின் கையெழுத்து "சீல்' வைக்கும் முறை இருந்தது. அவரின் உதவியாளர் அவரிடம், "அனைத்துச் சான்றிதழ்களிலும் கையெழுத்திடுவது சிரமமானது. ஆகவே தற்போது முறைப்படி "சீல்' வைத்து விடலாம்'' என்றார்.
 "ஐந்து ஆண்டுகள் சிரமப்பட்டு படித்துப் பட்டம் பெறுகிறார்கள். அவர்களின் உழைப்பால் கிடைத்த பட்டத்திற்கு ஒரு நிமிடம் செலவழித்து கையெழுத்துப் போடக்கூடாதா?'' எனக்கூறி இரவு பகல் பாராது எல்லா சான்றிதழ்களிலும் கையெழுத்திடுவாராம் இலட்சுமணசாமி முதலியார்.
 -கோட்டை செல்வம்
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்

இந்தியன் - 2 இசைவெளியீட்டு விழா எப்போது?

”தாலி அணியாத பிரியங்கா காந்தி..” -ம.பி. முதல்வர் விமர்சனம்

4-வது இடத்தில் சிறப்பாக செயல்படும் ஜடேஜா: சிஎஸ்கே பேட்டிங் பயிற்சியாளர்

பெங்களூரில் ’டிசிஎஸ் உலக மாரத்தான்’ ஓட்டப்போட்டி

SCROLL FOR NEXT