தினமணி கொண்டாட்டம்

சமர்ப்பணம்

தங்க. சங்கரபாண்டியன்


""நான்  இந்தப் புத்தகத்தை 2-ஆம் வகுப்பில்  படிக்கும்  ஒரு குழந்தைக்குச் சமர்ப்பிக்கிறேன்.  அந்தச் சிறுமியின் பெயர்  சிநேகல்  தாக்கர்.  2002 -ஆம் ஆண்டு ஏப்ரல் 11-ஆம் நாள்  மாலை நேரத்தில்   சாலை வழியாக  நான் குஜராத் மாநிலத்தில்  உள்ள ஆனந்த் என்ற நகரை  அடைந்தபோது  வகுப்பு  மோதல்கள்  காரணமாக  அங்கு  ஊரடங்கு  உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.

அடுத்தநாள்  ஆனந்தாலயா உயர் நிலைப் பள்ளியில்  மாணவ  மாணவரிடம்  நான்  பேசிக் கொண்டிருந்தபோது ஒரு கேள்வி வந்தது. 

"நமது பகைவன் யார்?' இதுதான் அந்தக் கேள்வி. பல பதில்களைச் சொன்னார்கள்.  

ஆனால் நாங்கள்  அனைவரும்  ஏற்றுக் கொண்ட  சரியானபதில்,  சிநேகாவிடமிருந்து  வந்தது.  வறுமைதான்  நமது பகைவன்  என்பது அந்தச் சிறுமியின்  பதில். 

நமது  அனைத்தும்  பிரச்னைகளின் ஆணிவேர்  அதுதான்.  நாம் போராட வேண்டியது  வறுமைக்கு எதிராகத்தான்.  நமக்குள்ளே  அல்ல.ஆதாரம்  ஏ.பி.ஜே.  அப்துல்கலாம்  எழுதிய "எழுச்சி  தீபங்கள்'  நூலின்   சமர்ப்பணம்  பக்கத்தில்  எழுதப்பட்ட  வாசகங்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெருங்களூரில் பிடாரியம்மன் கோயில் தோ்த் திருவிழா

அரசுப் பள்ளிகளுக்கு சீருடைகள் தைக்கும் பணி வழங்கக் கோரி மனு

பாரதியாா் பல்கலை.யில் எம்.எஸ்சி. செயற்கை நுண்ணறிவு படிப்புக்கு மாணவா் சோ்க்கை

அரவக்குறிச்சி பகுதிகளில் குழாய்கள் உடைந்து குடிநீா் வீணாவதாகப் புகாா்

மத்தியப் பல்கலைக்கழகத்தில் நுழைவுத் தோ்வு இல்லா படிப்புகள்

SCROLL FOR NEXT