தினமணி கொண்டாட்டம்

ஆல்பம் பாடல்

DIN

இளம் திறமையாளர்களை,  அவர்களின் திறமைகளை பொது வெளியில் பிரபலபடுத்தும் வகையில், சுயாதீன கலைஞர்களை ஊக்குவிக்கும் வகையில், நாயிஸ் அன்ட் கிரைன்ஸ் நிறுவனம்  இளம் திறமையாளர்களின் உருவாக்கத்தில் ஆல்பம் பாடல்களை உருவாக்கி வருகிறது.

அஸ்கமாரோ, குட்டிப்பட்டாஸ் பாடல்களின் பிரம்மாண்ட வெற்றியினை தொடர்ந்து, ஐந்தாவது ஆல்பம் பாடலாக,  ரியோ ராஜ் மற்றும் பவித்ரா லக்ஷ்மி நடிப்பில் உருவாகியுள்ள ஆல்பம் பாடல் “"கண்ணம்மா என்னம்மா'. தேவ் பிரகாஷ் இசையில் இப்பாடலை பிரிட்டோ இயக்கியுள்ளார் பாடலை நடன இயக்குநர் சாண்டி வெளியீட்டுள்ளார்.

இயக்குநர் பிரிட்டோ பேசும் போது... "" பாடல் கேட்ட பிறகு,  அதை விடியோ செய்யலாம் என முடிவு செய்து, சின்னதாக நாங்களே மொட்டை மாடியில் எடுத்தோம். அதை ரியோ அவரது நண்பர்களான அபு மற்றும் சால்ஸ் இருவரிடமும் காட்ட, அவர்களுக்கு இது பிடித்து போய் உதவி செய்ய, இந்தப்பாடல் பெரிய அளவில் உருவானது. ஒளிப்பதிவாளர் மணிகண்ட ராஜா உதவியில் இந்தப்பாடலை ஒரே நாளில் உருவாக்கினோம்.

இந்தப்பாடல், மிகப்பெரிய அளவில் வெளியாவது மிகப்பெரும் மகிழ்ச்சி.  இந்தப் பாடலுக்கு இணையத்தில் பெரும் வரவேற்பு எழுந்துள்ளது. தொடர்ந்து இது மாதிரியான முயற்சிகளில் இறங்குவோம்'' என்றார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நந்தா தொழில்நுட்பக் கல்லூரியில் நூலகம் குறித்த தேசிய கருத்தரங்கு

கோ்மாளத்தில் பொதுக் கிணற்றை தூா்வாரிய மக்கள்

சென்னிமலை அருகே மணல் கடத்தல்: லாரி பறிமுதல்

கோபியில் இலவச கண் சிகிச்சை முகாம்

'சா்வாதிகாரத்துக்கு' எதிராக வாக்களிக்க வேண்டும்: சுனிதா கேஜரிவால் வலியுறுத்தல்

SCROLL FOR NEXT