தினமணி கொண்டாட்டம்

ஆரியின் "பகவான்'

DIN

பிக்பாஸ் மூலம் ரசிகர்களின் கவனத்துக்கு வந்த  நடிகர் ஆரி அர்ஜுனன், தற்போது நடித்து வரும் படம்  "பகவான்'.
இயக்குநர் காளிங்கன் இயக்கத்தில்  மஞ்சுநாதா தயாரித்து வரும் இப்படத்தில் "ரங்கஸ்தலம்' படத்தில் நடித்த  பூஜிதா பொன்னாடா நடிக்கிறார். இவர்களுடன் ஜெகன், முருகதாஸ், யோக் ஜேபி, சம்பத் ராம், லக்கி நாராயணன், அலெக்ஸ், அபிஷேக், சத்யா, "மாஸ்டர்' பாண்டி, அஜய் தத்தா உள்ளிட்டோர் நடிக்கின்றனர். மித்தாலஜிகல் திரில்லர் எனும் திரை பாணியில் இந்தப் படத்தின் திரைக்கதை உருவாக்கப்பட்டுள்ளது.  
இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் கடந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் வெளியானபோதே பெரும் வரவேற்பை பெற்றது. இதுவரையிலும் தோன்றியிராத  வகையில் வித்தியாசமான தோற்றத்தில்   ஆரி அர்ஜுனன்  நடிக்கிறார். ரசிகர்களை இருக்கை நுனியில் இருத்தி வைக்கும் பரபர திரில்லர் படமாக  இப்படம் உருவாகியுள்ளது. 
சமீபத்தில் இப்படத்திற்காக  நடன இயக்குநர் கலாவின் நடன அமைப்பில், மிகப்பிரம்மாண்ட பாடல் காட்சி படமாக்கப்பட்டது. இப்பாடலுகென்றே 3 நாள்கள் பிரத்யேகமாக பயிற்சிகள் எடுத்துகொண்டு பாடல் காட்சியில் பங்கேற்றுள்ளார் ஆரி அர்ஜுனன்.  ஆங்கில நடிகர்   ஜேம்ஸ் பாரட் வில்லனாக நடிப்பது இப்படத்தின் குறிப்பிடத்தகுந்த அம்சம்.  
படத்தின் சண்டை காட்சிகள் ரசிகர்களுக்கு பிரமிப்பை ஏற்படுத்தும் வகையில் படமாக்கப்பட்டுள்ளது.  இப்படத்தின் இறுதி கட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. வரும் தீபாவளிக்கு படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. ஒளிப்பதிவு - முருகன் சரவணன். இசை - பிரசன் பாலா.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரூ.4 கோடி பறிமுதல் - சிபிசிஐடி போலீசார் வழக்குப்பதிவு

செந்தில் பாலாஜி வழக்கு: உச்ச நீதிமன்றத்தில் மன்னிப்புக் கேட்ட அமலாக்கத்துறை

சென்னையில் வாட்டும் வெயில் மட்டுமா.. குடிநீர் தட்டுப்பாடும் வருமா? ஏரிகளின் நீர்மட்ட நிலவரம்!

சென்னைக்கு கோடையில் குடிநீர் தட்டுப்பாடு வர வாய்ப்பு இல்லை

வெங்கடேஷ் பட்டின் ‘டாப் குக்கு டூப் குக்கு’!

SCROLL FOR NEXT