தினமணி கொண்டாட்டம்

பாரதியின் கடிதங்கள்

முனைவர் கு.வெ. பாலசுப்பிரமணியன்

சுப்பிரமணிய பாரதி எழுதிய கடிதங்களில் கிடைத்த 23 கடிதங்களை ரா.அ.பத்மநாபன் 1981-இல் "பாரதியின் கடிதங்கள்'  என்றொரு நூலாகத் தொகுத்துச் சில விளக்கக் குறிப்புகளையும் எழுதியுள்ளார். 1897 முதல் 1920 வரையுள்ள காலப்பகுதியில் எழுதப்பெற்ற கடிதங்கள் இவை. 

பாரதி,  வெங்கடேசுர எட்டப்பநாயக்க மன்னருக்கு நான்கு கடிதங்கள் எழுதியுள்ளார். அவர் மன்னராவதற்கு முன், ஒரு கடிதமும், மன்னராகிய பின் மூன்று கடிதங்களும் எழுதியுள்ளார். முதல் கடிதம் 1897-ஆம் ஆண்டு எழுதப்பெற்றது. அப்போது பாரதிக்கு வயது பதினான்கு. திருநெல்வேலியில் ஆங்கிலக் கல்வி பயில்வதற்காகும் செலவுகளுக்காக நிதியுதவி வேண்டி இக்கடிதத்தைப் பாரதி எழுதியிருக்கிறார். கடிதம் ஆசிரியப்பாவில் எழுதப்பெற்றுள்ளது. 

1901-ஆம் ஆண்டு காசியிலிருந்து தன் மனைவிக்கு எழுதிய அன்புக் கடிதம் அவர்தன் மனைவியின் மீதும், தமிழின் மீதும் கொண்ட பேரன்பை எடுத்துரைக்கின்றது. பாரதியின் உறவினர் விசுவநாதன் பாரதி ராஜாங்க விரோத விஷயங்களில் ஈடுபட்டிருப்பதாகச் செல்லம்மாளிடம் கூறச் செல்லம்மாள் கவலை கொண்டு எழுதிய கடிதத்திற்குப் பதில் கடிதமே இது. 

1907-இல் பத்திரிகை அலுவலகத்திலிருந்து தமிழறிஞர் மு. ராகவையங்காருக்கு "செந்தமிழ்' ஏட்டில் வெளிவந்த  அவருடைய "வீரத்தாய்மார்கள்' என்ற கட்டுரையைப் பாராட்டி ஒரு கடிதத்தைப் பாரதி எழுதியுள்ளார். இக்கட்டுரையைப் தம் இந்திய ஏட்டில் மூன்று வாரம் தொடராக வெளியிட்டது மட்டுமின்றி அதனைப் பாராட்டி ஒரு தலையங்கத்தையும் பாரதி எழுதியுள்ளார்.

1908-ஆம் ஆண்டு லோகமான்ய பாலகங்காதர திலகருக்குப் பாரதியால் ஓர் ஆங்கிலக் கடிதம் எழுதப் பெற்றிருக்கிறது.  1914-ஆம் ஆண்டு இங்கிலாந்தின் தொழிற்கட்சித் தலைவர் ராம்úஸமக்டொனால்டுக்குப் பாரதி இந்தியாவில் காவல்துறையின் வரம்பற்ற செயல்களைக் குறித்து ஒரு கடிதம் எழுதுகிறார். 

பரலி சு.நெல்லையப்பருக்குப் பாரதி 1915-இல் ஒன்றும் 1918-இல் ஒன்றுமாக இரு கடிதங்கள் எழுதியுள்ளார். 

1918-இல் தன் இளவல் விசுவநாதனுக்கு எழுதிய கடிதத்தில் பாரதி "எனக்கு இனிமேல் இங்கிலீஷில் காயிதம் எழுதாதே. நீ எழுதும் தமிழ் எத்தனை கொச்சையாக இருந்த போதிலும் அதைப் படிக்க நான் ஆவலுறுவேன்'  என்று எழுதுகிறார். 

(பாரதி வாழ்கிறார் நூலிலிருந்து)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கனடா: சாலை விபத்தில் இந்தியாவைச் சோ்ந்த 3 மாத கைக்குழந்தை உள்பட 4 போ் உயிரிழப்பு

திருக்குறள் முற்றோதல் போட்டியில் வென்ற மாணவிக்கு பாராட்டு

தட்டச்சுப் பள்ளிகள் கேட்கும் தோ்வு மையத்தை ஒதுக்கக் கோரிக்கை

கேரளம், தென் தமிழக கடலோர பகுதிகளுக்கு ‘கள்ளக்கடல்’ எச்சரிக்கை!

குடிநீா் விநியோகப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு

SCROLL FOR NEXT