தினமணி கொண்டாட்டம்

தெரியுமா?

DIN

87 வயதிலும் இயக்குகிறார்!

ஷியாம்  பெனகல்  பரீட்சார்த்தமான  படங்களை  எடுப்பதில்  வல்லவர்.  87 வயதிலும்  படங்களை இயக்கிக் கொண்டிருக்கிறார். அந்த  வகையில்,  அவருடைய  லேட்டஸ்ட்  படம் விரைவில்  ரிலீஸ்.
தலைப்பு:  'முஜிப் - ஒரு தேசத்தை  உருவாக்கியவர்'
  - பங்களாதேஷ்  நாட்டின்  தந்தை  முஜிபூர் ரஹ்மானின்  சுயசரிதம்.
சரி முஜிப்  பற்றி  ஷியாம்  பெனகல்  கூறுவது இதுதான்:
"மக்களை  நம்பினார்.  மிக அதிகமாக  நம்பினார்.  அவருடைய  அரசியல் உதவியாளர்களை நேசித்தார்.  ரொம்பவும்  நேசித்தார்.  அந்த உதவியாளர்களுக்கும் பலவீனங்கள்.. ஆசைகள் இருக்கும்  என்பதை  அவர் மனதில்  கொள்ளவில்லை.

உங்களுக்குத் தெரியுமா?


போர்ச்சுகீசிய  சினிமா இயக்குநர்  மனோல்  டி ஒலிவைரா  - 105  வயது வரை  படங்களை இயக்கியவர். ஷியாம்  பெனகலிடம்  இவர் பற்றி  கேட்டபோது,  "தெரியும்.  லிஸ்பன் நகரில்  சந்தித்தேன்.  ஆனால்,  பரஸ்பர மொழி  தெரியாததால்  பேச இயலவில்லை.  ஆனால்,  அவரிடம்  ஒரு  25 வயதுக்கு  உரியவரின்  துடிப்பு இருந்தது.  அதே துடிப்புடன்தான்  நானும் இன்றும்  செயல்பட்டுக் கொண்டிருக்கிறேன்'' என்கிறார்  ஷியாம் பெனகல்.

பாடிய முதல் பாட்டு

பி.சுசீலா, தன்னுடைய  முதல் பாடலை பெற்றதாய் என்ற படத்தில்,  பெண்டியாலா  நாகேஸ்வரராவ்  இசையமைப்பில்   ஏ.எம். ராஜாவுடன் இணைந்து பாடினார். " அழைத்தாய்.. எதுக்கு.. அழைத்தாய்' என்பதுதான் அந்த பாடல். 
டூயட்டில்  டி.எம். எஸ். - சுசிலாவை  இனைத்தது  இயக்குநர் ஆர்.சுதர்சனம்.
"திரை இசைவானில்'  என்ற நூலிலிருந்து

எல்.ஆர்.ஈஸ்வரி ஆனது எப்படி?

இயக்குநர் ஏ.பி.நாகராஜன் ஒருமுறை  எல்.ஆர். ஈஸ்வரி  பாடிய  பாடல்களை கேட்டு இவருக்கு,  நல்ல எதிர்காலம்  இருக்கு. 
அப்படின்னு  எல்லார்கிட்டேயும் சொல்லி, இவரது பெயரை மாத்தனும் என்று  அந்த  டி யை எடுத்துட்டு,  எல்- லையும்,  ராஜேஸ்வரியிலிருந்து ஆரை யும் வச்சுக்குவோம். ஆக இன்று முதல் எல்.ஆர். ஈஸ்வரிதான் இவங்களது புது பெயர் என்றார். அது அப்படியே நிலைத்துவிட்டது.

மணிக்கு 56 கீ.மீ. வேகம்!

ஒட்டக  சிவிங்கிகளில் ஆண் 14 அடிவரை  வளரும்.  இதன் கால்கள்  மட்டும் 6 அடி. ஒட்டக சிவிங்கியால் மணிக்கு  56 கிலோமீட்டர்  வேகத்தில்  ஓட  இயலும். ஆனால்,  அமைதியானது.  இவற்றின்  நாக்கு நீளமாய்  நீல வண்ணத்தில்  இருக்கும்.

* உலகின்  பெரிய புலி  சைபீரியன்  புலி.  கிழக்கு  ரஷ்யாவின்  பிர்ச்  காடுகளில்  அவை வசிக்கின்றன. சீனா  மற்றும் தென் கொரியாவிலும்  காணலாம்.  உலகில் இன்று மொத்தமே 400  சொச்சம் சைபீரியன்புலிகள்  தான் உள்ளன.
* ராஜநாகத்தின்  விஷம் மிகவும் ஆற்றல்  மிக்க விஷமாகும்.  இதன்  7 மில்லிலிட்டர்  விஷம்  20  மனிதர்கள்  அல்லது  ஒரு யானையை  கொன்றுவிடும்.  இது கடிக்கக் கூட வேண்டாம்.  அந்த விஷத்தை  துப்பினாலே போதும்.
* ராயல்  பெங்கால் புலி 10 அடி  நீளம் வளரும்.  உலகில்  உள்ள மொத்த ராயல் பெங்கால்  புலிகளில்  70 சதவிகிதம்  இந்தியாவில்தான் உள்ளது.


தொகுப்பு:  ராஜிராதா

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாகுபலி அனிமேஷனில் தோனியின் முகம்: ராஜமௌலி கூறியது என்ன?

வாக்குச்சாவடியை சூரையாடிய பாஜக எம்.பியின் மகன்: குஜராத்தில் அதிர்ச்சி!

மெட் காலாவில் கவனத்தை ஈர்த்த மோனா பட்டேல்.. யார் இவர்?

ஹாட் ஸ்பாட் ஓடிடி தேதி!

வெப்ப அலை: கேரளத்தில் 3 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை!

SCROLL FOR NEXT