தினமணி கொண்டாட்டம்

எது சந்நியாசம்..?

நெ. இராமன்

தமிழ்த் தாத்தா உ.வே.சா ஒருமுறை திருவண்ணாமலைக்கு வருகை தந்து, பகவான் ரமண மகரிஷியைச் சந்தித்தார்.

ஆஸ்ரமத்தின் அமைதியும் ரமண மகரிஷியின் ஆன்மிகச் சக்தியையும் நுகர்ந்து இன்புற்ற உ.வே.சா., ""பகவானே! எனக்குச் சந்நியாசம் வாங்கிக் கொள்ள வேண்டும் என்று நீண்ட நாள் விருப்பம்.  ஆனாலும், பாச பந்தம் என்னைவிட்டுப் போகவில்லை. நான் என்ன செய்வது?'' என்றார்.

""என்ன பாச பந்தம்'' என்று கேட்டார் ரமணர்.

""பகவானே! இந்த ஏட்டுச் சுவடிகளை வைத்துக் கொண்டு இரவும் பகலும் அல்லல் படுவதிலேயே மனம் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறது.   அந்தப் பந்தம் விலகுமானால் நான் சந்நியாசம் வாங்கிக் கொள்ளலாம்'' என்றார் உ.வே.சா.

இதற்கு ரமணர், ""அது பந்தம் அல்ல. அது உங்களுக்காகச் செய்து கொள்ளும் காரியம் அல்ல. உலகத்துக்காகச் செய்யும் மாபெரும் சேவை.  தனக்காகச் செய்துகொள்ளும் காரியங்களை விளக்கிக் கொள்வதுதான் சந்நியாசம்.  

ஒரு குடும்பத்தைவிட்டு வருகிற சந்நியாசிக்கு உலகமே குடும்பம் என்றாகிவிடுகிறது. அதனால் நீங்கள் செய்துவரும் மாபெரும் தமிழ்த் தொண்டே நல்ல சந்நியாச யோகம்தான்!'' என்று ஆசி வழங்கினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விஜயுடன் கூட்டணிக்கு காத்திருக்கிறேன்: சீமான்

ஸ்ரீ ஆதிகேசவ பெருமாள் கோயில் குளத்தில் இறந்து மிதந்த மீன்கள்

எனது கேள்விகளுக்கு மோடியால் பதிலளிக்க முடியாது: ராகுல்

காவேரிப்பாக்கம் அருகே கன்டெய்னா் லாரி டயா் வெடித்து விபத்து:போக்குவரத்து பாதிப்பு

மேற்கு வங்க ஆளுநா் மீதான பாலியல் குற்றச்சாட்டு: ஊழியா்கள் மூவா் மீது வழக்குப் பதிவு

SCROLL FOR NEXT