தினமணி கொண்டாட்டம்

எலக்சன்

DIN

"உறியடி', "ஃபைட் கிளப்' ஆகிய படங்களின் ரசிகர்களின் கவனம் பெற்றவர் நடிகர் விஜய்குமார். வசன கர்த்தா, இயக்குநர், நடிகர் என பன் முகங்களைக் கொண்ட இவர் நடிக்கும் அடுத்த படத்தின் பெயர் "எலக்சன்'. இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் சமீபத்தில் வெளியிடப்பட்டுள்ளது. போஸ்டரை நடிகர் விஜய்சேதுபதி தன்னுடைய இணைய பக்கத்தில் வெளியிட்டு, படக் குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

"சேத்துமான்' படத்தை இயக்கிய இயக்குநர் தமிழ் இயக்கத்தில் உருவாகி இருக்கும் இப்படத்தில், விஜய்குமார் ஜோடியாக "அயோத்தி' படப் புகழ் நடிகை ப்ரீத்தி அஸ்ராணி நடிக்கிறார். இவர்களுடன் நடிகை ரிச்சா ஜோஷி, "வத்திக்குச்சி' திலீபன், பாவெல் நவகீதன், ஜார்ஜ் மரியம் மற்றும் நாச்சியாள் சுகந்தி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.

எழுத்தாளர் அழகிய பெரியவன் வசனம் எழுத, மகேந்திரன் ஜெயராஜு ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு கோவிந்த் வசந்தா இசையமைத்திருக்கிறார். படத்தொகுப்பு பணிகளை சி. எஸ். பிரேம்குமார் கையாள, கலை இயக்கத்தை ஏழுமலை மேற்கொண்டிருக்கிறார்.

வேலூர் மாவட்டத்தில் நடைபெறும் உள்ளாட்சித் தேர்தல் அரசியலை மையப்படுத்தித் தயாராகி இருக்கும் இந்தத் திரைப்படத்தை ரீல் குட் ஃபிலிம்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஆதித்யா தயாரித்திருக்கிறார். இந்தத் திரைப்படத்தின் படப்பிடிப்புப் பணிகள் நிறைவடைந்து தற்போது இறுதி கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது.

ஃபர்ஸ்ட் லுக்கில் கதையின் நாயகனான விஜய்குமாரின் தோற்றம் வித்தியாசமாக வடிவமைக்கப்பட்டிருப்பதால் ரசிகர்களிடையே வரவேற்பினை பெற்றிருக்கிறது. விரைவில் இப்படத்தின் டீசர், சிங்கிள் ட்ராக் , லிரிக்கல் விடியோ, ட்ரெய்லர் மற்றும் வெளியீட்டு தேதி உள்ளிட்ட கூடுதல் விவரங்கள் வெளியிடப்படும் என படக்குழுவினர் தெரிவித்திருக்கிறார்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோவிஷீல்டால் பாதிக்கப்பட்டவா்களுக்கு உரிய இழப்பீடு கோரி உச்சநீதிமன்றத்தில் மனு: நிபுணா் குழு அமைக்கவும் வலியுறுத்தல்

சல்மான் கான் வீட்டில் துப்பாக்கிச்சூடு: கைதானவா் போலீஸ் காவலில் தற்கொலை

மருத்துவ மாணவா்களின் மன நலனை ஆய்வு செய்கிறது என்எம்சி

பொய்களை தொடா்ந்து உரக்கக் கூறுவதே காங்கிரஸ் பிரசார உத்தி: அமித் ஷா விமா்சனம்

குடிநீா் கேட்டு கிராம மக்கள் சாலை மறியல்

SCROLL FOR NEXT