வாங்க... இங்கிலீஷ் பேசலாம் - 16
ரொபஸரும் கணேஷும் நாகேஸ்வரராவ் பூங்காவில் ஒரு பெஞ்சில் அமர்ந்து மூச்சு வாங்கிக் கொண்டிருக்கிறார்கள்.
ரொபஸரும் கணேஷும் நாகேஸ்வரராவ் பூங்காவில் ஒரு பெஞ்சில் அமர்ந்து மூச்சு வாங்கிக் கொண்டிருக்கிறார்கள்.
கணேஷ்: சார், இத்தனை பேர் இப்படி அலுங்கி குலுங்கி நடக்கிறது பார்க்க கஷ்டமா இருக்கு.
புரொபஸர்: நவீன மருத்துவம் நம்மை அப்படி பயமுறுத்தி வச்சிருக்கு. நிறையப் பேருக்கு இப்படி நடக்கிறதுனாலேயே முட்டி போயிடுது. உனக்கு ஒண்ணு தெரியுமா? எக்ஸர்ûஸஸ் பண்ணுறதுனால ஆயுள் கூடும்னு எந்த ஆய்வும் சொல்லல. எக்ஸர்ûஸஸ் செய்யிறவங்களை விட செய்யாதவங்க அதிக நாள் வாழ்றதாக் கூட ஓர் ஆய்வு சொல்லுது தெரியுமா? உடம்புக்கு நல்லதுன்னு திடீர்னு விளையாடப் போய் முதுகு வலி, முட்டி வலின்னு ட்ரீட்மெண்ட் எடுக்கிறவங்களை எனக்குத் We just throw the baby with the bath water.
கணேஷ்: என்ன சார் சொன்னீங்க?
புரொபஸர்: Throw the baby with the bath waterன்னா குழந்தையை குளிப்பாட்டி தண்ணியை மட்டும் கொட்டாம குழந்தையோட சேர்த்து வீசிடறது. அது ஒரு idiomatic expression. இடியம்னா நேரடியா அர்த்தம் இருக்காது. மறைமுகமாத் தான் புரிஞ்சிக்கணும். இந்த இடியத்தோட பொருள் என்னென்னா, கெட்டதை ஒழிக்க நினைச்சு நல்லதை தொலைச்சிடறோம்.
கணேஷ்: சுவாரஸ்யமா இருக்கு. ஆனா எந்த அம்மாவும் அப்படிப் பண்ண மாட்டாங்க... இல்ல?
புரொபஸர்: அது தான் idiom. இடியம் எப்பவுமே விசித்திரமா அதிர்ச்சியா இருக்கும். உதாரணமா நீ தினமும் உட்கார்ந்து படித்தால் ஐ.ஏ.எஸ் பரீட்சை கூட a piece of cake.
கணேஷ்: என்னது பரீட்சையில் கேக் கொடுப்பாங்களா?
புரொபஸர்: ரொம்ப ரொம்ப ஈஸின்னு பொருள். அதே மாதிரி தான் a walk in the park. ஸ்பின்னிங்பிட் சில தென்னாப்பிரிக்காவை தோற்கடிக்கிறது இந்தியாவுக்கு a walk in the park.
கணேஷ்: ஆனா பார்க்கைச் சுத்தி நடந்தா மூச்சு வாங்குதே சார். அதை ஏன் ஈஸிங்கிறாங்க?
புரொபஸர்: சரி தான். A cakewalk கேள்விப்பட்டிருக்கியா?
கணேஷ்: கிரிக்கெட் கமெண்டிரியில கேட்டிருக்கேன். கோலி சதம் அடிச்சு நாம ஜெயிக்கிற நிலை வரும் போது its going to be a cakewalk for India from here onன்னு சொல்வாங்க. அதுவும் ஈஸியா ஜெயிக்கலாமுன்னு தான் மீனிங்கா சார்? நானும் இத்தனை நாளா ஏன் அவசியமில்லாம கேக் கேக்குன்னு சொல்றாங்களேன்னு யோசிச்சிட்டிருந்தேன்.
புரொபஸர்: கேக் வாக்குங்கிறது 19வது நூற்றாண்டில் அமெரிக்காவில் பிரபலமாக இருந்த ஒரு நடனம். கறுப்பர்கள் மட்டும் பங்கேற்ற அழகுப்போட்டியில் இருந்து தான் அந்த நடனத்தை உருவாக்கினாங்க. யார் அழகா நடந்து காட்டி ஜெயிக்கிறாங்களோ அவுங்களுக்குப் பரிசா ஒரு கேக் கொடுப்பாங்க. ரொம்ப சுளுவா ஜெயிச்சு பரிசு வாங்கலாமுங்கிறதுனால ஈஸியா சாதிக்க கூடிய விசயங்களை cakewalkன்னு அழைக்கத் தொடங்கினாங்க. ஆனா கேக் வாக் இடியம் இல்ல. அது ஒரு noun. பெயர்ச் சொல்.
கணேஷ்: சார் ஏன் ஒரு வார்த்தை சொல்லிட்டு அடுத்தடுத்து தொடர்புடையதா சொல்றீங்க?
புரொபஸர்: நிறைய வார்த்தைகளை நினைவு வச்சிக்கிறதுக்கு அது ஒரு டெக்னிக். இன்னிக்கு hot potato என்ன தெரியுமா?
கணேஷ்: உருளைக்கிழங்கு தானே சார்?
புரொபஸர்: ஆமா. வேக வைத்த கொதிக்கிற உருளைக்கிழங்கு. அதை எடுத்துச் சாப்பிட்டுப் பாத்திருக்கியா? கையிலையும் வைக்க முடியாம, வாயிலையும் போட முடியாம தவிப்போமே, அந்த அவசரத்தையும், பரபரப்பையும் தான் hot potato என்கிற இடியம் குறிக்குது. அப்பப்போதைக்கு எந்த விசயத்தைப் பத்தி மீடியாவும் மக்களும் பரபரப்பா பேசுறாங்களோ, அது தான் hot potato. உதாரணமா, வெள்ளத்தின் போது ஏன் ஏரிகளை திறந்து விட்டாங்க? என்கிறது ஒரு hot potato.
கணேஷ்: சல்மான்கார் காரை ஓட்டினது யாரு? கட்டப்பா ஏன் பாகுபலியைக் கொன்னாரு? எல்லாமே hot potatoவா சார்?
புரொபஸர்: yes. எப்பவுமே எந்திரிக்காம டி.வி முன்னாடியே இருக்கிறவங்களை coach potatoன்னு சொல்வோம். அதே போல ஒரு மோசமான தரமில்லாத கேமரா அல்லது செல்போனையும் potatoன்னு சொல்லலாம்.
The video quality is so poor. Was it shot with a potato?
கணேஷ்: சார் கொஞ்ச நேரம் முன்னாடி ஒரு பெண் நம்மைக் கடந்து ஓடிப் போனப்போ she ran past usன்னு சொன்னீங்க?
புரொபஸர்: ஆமா
கணேஷ்: ழ்ஹய்ன்னா கடந்த காலத்தை உணர்த்துற சொல்லுன்னும் சொன்னீங்க. ஆனா அவங்க நேத்தோ முந்தா நாளோ நடக்கலையேன்னு கேட்டேன். நீங்க அதுக்கு she has run past usன்னு சொல்லலாமுன்னு சொன்னீங்க. ஆனால் அப்பவும் கூட அந்தப் பொண்ணு நிகழ் காலத்தில நம்ம கண் முன்னாடி தானே இருக்காங்க. அதாவது ஒருத்தர் நம்மை கடந்து போனாலும் நம் கண் முன்னாடி தானே இருக்காங்க? நாம நிகழ்காலத்தில இருக்கும் போது அவங்க எப்படி கடந்த காலத்தில இருக்க முடியும்?
புரொபஸர்: ரொம்ப நல்ல கேள்விடா. பதில் சொல்றேன்.
(இனியும் பேசுவோம்)