முகப்பு
இளைஞர்மணி

வாங்க... இங்கிலீஷ் பேசலாம் - 4

வாக்கிங் போகும் வழியில் புரொபஸரும் கணேஷும் காய்கறிக் கூடையுடன் வரும் பெண்ணைப் பார்க்கிறார்கள். அவள் புரொபசருக்கு வணக்கம் வைக்கிறாள்.

Updated On : 9 ஜனவரி, 2024 at 6:53 AM
பகிர்:

வாக்கிங் போகும் வழியில் புரொபஸரும் கணேஷும் காய்கறிக் கூடையுடன் வரும் பெண்ணைப் பார்க்கிறார்கள். அவள் புரொபசருக்கு வணக்கம் வைக்கிறாள்.

புரொபஸர்: வாம்மா. கணேஷ் இது தான் ரேணுகா. இவள் ஒரு பெண்ணியவாதி. இங்கிலீஷ்ல feminist. பெண்ணுரிமைக்காக பேசுறவங்க. வேறெதுக்காகவும் பேசமாட்டாங்க.

ரேணுகா: எல்லாத்துக்காகவும்தான் பேசுவோம் சார். இதுலயே தெரியுது. ஒரு hopeless chauvinist சார் நீங்க.

கணேஷ்: ஆங்

புரொபஸர்: நான் ஆணாதிக்கவாதின்னு சொல்றா.

கணேஷ்: சார் chauvinistன்னா பெண்களை வெறுக்கிறவங்கன்னு அர்த்தமா?

புரொபஸர்: இல்ல, அதுக்கு misogynistன்னு பேரு. நம்முடைய பழைய சித்தர்களில் நிறைய பேரு misogynists.  பெண்ணுடலைச் சூதாடும் பொருள் என்கிறார் ஒரு சித்தர். ஆனா chauvinistன்னா பெண்களை தாழ்வா நினைக்கிறவங்க. Linguistic chauvinism கூட இருக்கு. தன்னோட தாய்மொழி தான் உசத்தின்னு வெறியோட சுத்தறது அது.

ரேணுகா: அதே மாதிரி தேவையில்லாம ஒருத்தரோட பெண் நிலையைச் சுட்டிக் காட்டுற மாதிரி பேசுறது sexism. என்னை சில பேர் மிஸ்.ரேணுகான்னு சொல்றாங்க. அதுல மிஸ் தேவையில்லாதது. எனக்கு திருமணமாச்சா? இல்லையாங்கிற அழுத்தம் அதுல இருக்கு.

கணேஷ்: ரேணுகா... நீங்க ஏன் நகை ஏதும் அணியாம மூளியா இருக்கீங்க?

ரேணுகா: ஏன்னா மேக்கப் போட்டு ஒரு ஆம்பிளைக்கு அழகா, காட்சிப் பொருளா என்னை காட்டிக்க நான் விரும்பல. Bye the bye  மூளிங்கிறது ஒரு sexist word.

கணேஷ்: ஆனாலும் நீங்க அழகாத்தான் இருக்கீங்க. இப்பிடி சொல்றதும் sexismன்னு சொல்லாதீங்க.

புரொபஸர் ஒரு எலெக்டிரானிக் சிகரெட்டை பற்ற வைத்துக் கொள்கிறார்.

புரொபஸர் மின் சிகரெட்டை பாக்கெட்டில் போட்டுக் கொண்டு கிளம்புகிறார்.

ரேணுகா: ஐயோ சார்... you must put it out. பத்திக்கும்

கணேஷ்: ஆமா சார். இதுக்குன்னு fire service  - ஐக் கூப்பிட முடியாது

புரொபஸர்: ஸ்டுப்பிட். இது எலக்டிரானிக் சிகரெட். சும்மா பேருக்குத் தான். இதுல தீயோ, புகையிலையோ இல்ல.

கணேஷ்: சார் மின்சார சிகரெட்டுன்னு சொன்னீங்க. ஆனா புகை வந்துச்சே?

ரேணுகா: There can be no smoke without fire

கணேஷ்: ஆங்!

புரொபஸர்: நெருப்பில்லாம புகையாதுங்கிறா. அது ஒரு idiom.  அதாவது கவித்துவமான சொற்றொடர். அதுக்கு மறைமுகமான அர்த்தம் மட்டும் தான் இருக்கும். உதாரணமா Kick the bucket.  இப்போ My wife kicked the bucketன்னா வீட்டுக்காரி செத்துப் போயிட்டான்னு அர்த்தம்

கணேஷ்: சார் put out the cigarreteனா?

புரொபஸர்: கீழே போட்டு மிதிச்சு அணைக்கிறது. அது பேரு phrase. அதான் stamping it out. Stub out. நற்ன்க்ஷ ர்ன்ற்ன்னும் சொல்லலாம். சரி யூஸ் பண்ணினதுக்கு பிறகு மிச்சமிருக்குமே சிகரெட் பகுதி அதை என்ன சொல்லுவோம்? சொல்லு.

கணேஷ்: ம்ம்ம்... தெரியல.

புரொபஸர்: stub. இந்த stubங்கிற வார்த்தையோட தோற்றம் ரொம்ப சுவாரஸ்யமான கதை. வெட்டின மரத்தோட அடி பாகத்தை என்ன சொல்வோம் தெரியுமா?

ரேணுகா: Stump

கணேஷ்: ஸ்டம்புன்னா கிரிக்கெட் ஸ்டம்பில்லையா?

புரொபஸர்: அதுவும் தான். இப்போ பரீட்சையில புரியாத ஒரு கேள்வி வருதுன்னா அதை you are stumped by the

  questions ன்னு சொல்வோம். என்ன பணறதுன்னு தெரியாம திகைச்சு போய் இருப்பே. அதுக்கு stumped சொல்லலாம். சில பேர் "டொக் டொக்'குன்னு சத்தம் போட்டபடி நெடு நெடுன்னு நடப்பாங்களே அவங்கள He stumped aboutன்னு சொல்லலாம்

புரொபஸர்: இந்த ஸ்டம்பை தான் ஆரம்பத்தில இங்கிலீஷில ஸ்டம்புன்னு சொன்னாங்க. வெட்டப்பட்ட மரம் மாதிரியே தீர்ந்து போன சிகரெட் இருக்கிறதுனால அதுக்கும் stubனு பேர் வந்துச்சு.

கணேஷ்: துண்டு சிகரெட் பின்னாடி இவ்வளவு பெரிய கதையா சார்?

அவர்கள் ஒரு சினிமா போஸ்டரை பார்க்கிறார்கள்.

கணேஷ்: இப்போ தான் தலயோட தல அழகா இருக்கு!

ரேணுகா: இதுவே ஒரு ஹீரோயின் நரைச்ச தலையோட வந்தா அழகுன்னு சொல்லுவீங்களா?

புரொபஸர் (அதைப் பார்த்தபடி): இது தான் salt and pepper  ஸ்டைல். அஜித் இதை தமிழ்ல ரொம்ப பாப்புலர் ஆக்கீட்டார்

கணேஷ்: சார் அஜித்தோட தாடி கூட கொஞ்ச சால்ட் அண்ட் பெப்பர்ல அழகா இருக்கு

புரொபஸர்: அது தாடியில்ல

ரேணுகா: Its a stubble

புரொபஸர்: ஆமா ஒருவார தாடி இருக்குல்ல அது தான் இது. அது பேரு தான் stubble.

கணேஷ்: சார் நான் கூட ஸ்டபிள் வச்சிருந்தேன். ஆனா அரிக்க தொடங்கிச்சுன்னு ஷேவ் பண்ணிட்டேன்

புரொபஸர்: இதை கேளு நீ தெரியாத்தனமா கால் விரலை கதவில இடிச்சிட்டேன்னா அதை I stubbed my toe on the door அப்டீன்னு சொல்லலாம்

(இனியும் பேசுவோம்)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.