முகப்பு
இளைஞர்மணி

இணைய வெளியினிலே!

கடவுள் மனிதனுக்குச் சொன்னது கீதை. மனிதன் கடவுளுக்குச் சொன்னது திருவாசகம்

Updated On : 28 அக்டோபர், 2015 at 5:14 PM
பகிர்:
Updated On : 9 ஜனவரி, 2024 at 12:34 PM

முக நூலிருந்து .................................................................

கடவுள் மனிதனுக்குச் சொன்னது கீதை.

மனிதன் கடவுளுக்குச் சொன்னது திருவாசகம்

Advertisement

மனிதன் மனிதனுக்குச் சொன்னது திருக்குறள் என்று நம்முடன் நூல்கள் பின்னிப் பிணைந்திருக்கின்றன. ஒருவரின் நல்லறிவானது, அவர் பயின்றிடும் நல்ல நுôல்களைப் பொறுத்து அமையும்.

மனிதனின் அறிவுத்தேடலை நிறைவடையச் செய்பவை நூல்களே. மனிதனை அறிவில் சிறந்தவனாகவும், ஆளுமை நிறைந்தவனாகவும் மாற்றுவதில் நுôல்களின் பங்கு அளப்பரியது. ஒவ்வொரு நுôலும் மனிதனை விசாலமாக்குகிறது. வாசிப்பு அவனுக்குள் ஒரு பரிணாம வளர்ச்சியை ஏற்படுத்துகிறது.

கார்ல் மார்க்ஸ் தனது "மூலதனம்' எனும் நூல் உருவாக்கத்திற்காக, பதினான்கு ஆண்டுகளுக்கும் மேலான காலத்தை நூலகத்திலேயே கழித்தார். மாவீரன் அலெக்சாண்டர், போர்க்களத்திற்கு கூட ஹோமருடைய காவியங்களை எடுத்துச் சென்று படித்தாராம்.

மில்டன் ஐந்து ஆண்டு காலம் கிரேக்க காவியங்களைப் படித்துக் குறிப்பெடுத்தார். பின்பு "சொர்க்க இழப்பு' என்னும் அழியாத காவியத்தைப் படைத்தார். அக்பர் தன்னுடைய நுôல் நிலையத்தில் 20,000 கையெழுத்துப் பிரதிநிதிகள் கொண்ட பல்வேறு நூல்களைப் பத்திரப்படுத்தி வைத்திருந்தார்.

ஐசக் நியூட்டன் இளமையில் மாடுமேய்க்கச் செல்லும்போது, அவற்றை புல் மேயவிட்டு புத்தகங்களைப் படிப்பார். அலெக்சாண்டர் ஒவ்வொரு நாடாக வெற்றி கண்டு அந்த செய்தியை தன்னுடைய குருவான அரிஸ்டாட்டிலுக்கு தெரிவித்த போது, "நாடு உனக்கு முக்கியமாக இருக்கலாம். அந்த நாட்டிலுள்ள அறிஞர்கள் எழுதிய ஏடுகள் எனக்கு முக்கியம். அவற்றை எனக்கு அனுப்பி வை' என்றார். அவ்விதமே அலெக்சாண்டரும் அனுப்பினாராம்.

ஜான்ரஸ்கின் எழுதிய "கடையனுக்கும் கடைத்தேற்றம்' என்ற நுôல்தான் காந்தியடிகளின் வாழ்வைப் புரட்டிப் போட்டது.

பகத்சிங்கை துôக்கில் போடும் நேரம் நெருங்கிய போது, "லெனின் புரட்சி' என்ற நுôலின் கடைசி அத்தியாயத்தைப் படித்து கொண்டிருந்தார். காவல் அதிகாரிகளிடம் ஐந்து நிமிடம் அனுமதி வாங்கி, அந்த அத்தியாயத்தைப் படித்து முடித்துவிட்டு அந்தப் பக்கத்தை மடித்து வைத்துவிட்டு தூக்கு மேடைக்குச் சென்றார்.

நூல் எனும் ஏணி நமக்காக காத்திருக்க, நாமும் ஏறத் தயாராகலாமே!

-டி. கருணாநிதி

-----------------------------------------------

"நட்டோர் கொடுப்பின், நஞ்சும் உண்பர் நனிநாகரிகர்'

- இது நற்றிணை. (எழுதிய புலவர் பெயர் தெரியவில்லை)

"நச்சை வாயிலே கொணர்ந்து நண்பர் ஊட்டு(ம்)போதினும்,

அச்சமில்லை, அச்சமில்லை, அச்சமென்பதில்லையே'

- இது பாரதியார்

- என்.சொக்கன்.

-----------------------------------------------

காற்றின் கரங்களைக் கேட்கலாமென்றால்

அது கரைந்து செல்லவே எத்தனிக்கிறது

ஃபீனிக்ஸின் இறகுகளைக்கேட்கலாமென்றால்

முழுதும் எரிந்தபின்னரே அவை கிடைக்குமெனத் தெரிகிறது

சாதகப்பறவையைக் கேட்கலாமென்றால்

பெருமழை வேண்டிக்காத்துக்கிடக்கச் சொல்கிறது

அன்னப்பறவையைக் கேட்கலாமென்றால்

நீரிலிருந்து பிரித்தெடுக்கும் வரை காத்திருக்கச் சொல்கிறது

மானின் விழிகளைக்கேட்கலாமென்றால்

அதன் மருட்சியில் மனமே துவண்டு கிடைக்கிறது

உன் மனத்தைக் கேட்கலாமென்றால்

அது நொடிக்கொருதரம் மாறிக்கொண்டேயிருக்கிறது

- ராம் சின்னப்பயல்.

-----------------------------------------------

வலைத்தளத்திலிருந்து........................................................

வண்ணதாசனிடம் எனக்குள்ள முதல் ஈர்ப்பாக திருநெல்வேலியே இருந்தது. சிறுவயதில் நான் பார்த்த மனிதர்கள், நான் புழங்கிய பகுதிகள் என வண்ணதாசனின் கதைகளில் வரும் அத்தனையையும் நேரடியாக பார்த்து அனுபவித்திருந்தேன். கீழப்புதுதெருவில் குடியிருந்த தாடி ரத்தின பாகவதர் மார்கழிமாதக் காலையில் தன் சிறு குழுவுடன் பஜனை சங்கீதம் இசைத்துச் செல்வதை வண்ணதாசனின் "வேர்' சிறுகதையில் படித்தபோது மனதுக்குள் அப்படி ஒரு சந்தோஷம். தாடி பாகவதர் வாயாலேயே மோர்சிங் ஒலியெழுப்புவதை வண்ணதாசன் குறிப்பிட்டிருந்ததையும்விட, பாகவதரின் கூடவே புல்லாங்குழல் இசைத்து வரும் கண்பார்வையற்றவரைப் பற்றி இப்படி எழுதியிருந்தார்.

"கண்ணில்லாதவர்களுக்குத்தான் புல்லாங்குழல் வாசிக்க வரும் என்று நான் சிறுவயதில் நம்பியிருக்கிறேன். எதிர்த்தவீட்டுப் பிள்ளைகளுக்கு எப்படியென்று தெரியவில்லை. கேட்க வேண்டும்'.

www.venuvanam.com

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.