முகப்பு
இளைஞர்மணி

வாங்க... இங்கிலீஷ் பேசலாம்

புரொபஸர் பாண்டிச்சேரி வீதியில் பைக்கில் போகிறார். அவர் பின்னால் கணேஷ் உட்கார்ந்திருக்கிறான். கணேஷ் எதுவோ கேட்கிறான்.

Updated On : 9 ஜனவரி, 2024 at 7:04 AM
பகிர்:

புரொபஸர் பாண்டிச்சேரி வீதியில் பைக்கில் போகிறார். அவர் பின்னால் கணேஷ் உட்கார்ந்திருக்கிறான். கணேஷ் எதுவோ கேட்கிறான்.

புரொபஸர்: காத்தில சரியா கேட்க மாட்டேங்குது

கணேஷ் (சத்தமாய்): காத்தில சரியா கேட்க மாட்டேங்குது என்கிறதை எப்பிடி இங்கிலீஷ்ல சொல்றது சார்?

புரொபஸர்: I can't hear anything in the wind

கணேஷ்: சார் எனக்கு இது போல நெனச்சதும் அதுக்கு இங்கிலீஷ் தெரியமாட்டேங்குது. தமிழ்ல தான் சொல்ல வருது. உங்களுக்கு மட்டும் எப்பிடித் தெரியுது?

புரொபஸர்: ஒவ்வொரு சந்தர்ப்பத்துக்கும், மனநிலைக்கும், உணர்ச்சிக்குமான நூற்றுக்கணக்கான சொற்கள், வாக்கியங்கள் இருக்குது. இதெல்லாம் நாம் பேசப் பேச, படிக்கப் படிக்க நம் மூளைக்குள் பதிஞ்சிடும். அப்புறம் தேவையான நேரத்தில எடுத்து விடலாம். அதுக்கு பழக்கம் முக்கியம். தினமும் ஒரு சொற்றொடரைக் கத்துக்கோ. அதை ஒரு புத்தகத்தில எழுதி வை. தினமும் எடுத்து ஒரு தடவை அதைப் படி. யாருகிட்டயாவது உபயோகப்படுத்திப் பார்.

கணேஷ்: எவ்வளவு நாள் ஆகும் சார், நான் சரளமாப் பேசுறதுக்கு?

புரொபஸர்: ஒரு வருசத்தில் இருந்து அஞ்சு வருசம் வரைக்கும் கூட ஆகலாம். நீ எந்த அளவுக்குத் தீவிரமா அதிகமாப் பயிற்சி செய்யுறியோ, அவ்வளவு சீக்கிரமாப் பேச வரும்.

கணேஷ்: சார் ஒரே மாசத்துல இங்கிலீஷ் கத்துத் தரேன்னு விளம்பரம் பண்றாங்களே?

புரொபஸர்: அதெல்லாம் அந்த அளவுக்கு உண்மையில்லை.

கணேஷ்: சார் ஒரு ஸூஸூக்கி பைக் விளம்பரத்தில் another fastest bike in the country அப்டீன்னு போட்டிருக்காங்க. Fastestக்கும் என்ன வித்தியாசம்?

புரொபஸர்: நான் இப்போ பைக்கில் போறேன்ல, இந்த வேகத்தை எப்பிடிச் சொல்லுவ?

கணேஷ்: படு slow சார்

புரொபஸர்: வயசாயிடுச்சில்ல. இன்னிக்கு காலைல எழுந்து தேடினா கண்ணாடியைக் காணோம். கண்ணாடி இல்லாம பல் தேய்க்கிற பிரஷை எடுக்கிறதுக்கே அரைமணி ஆயிடுச்சு.

கணேஷ்: அய்யோ... சார் கண்ணாடியில்லாமையா ஓட்டுறீங்க?

புரொபஸர்: அதெல்லாம் சரியா ஓட்டுவேன். ஏதாவது கார் முன்னே வந்தா மட்டும் காது பக்கம் சத்

தமாச் சொல்லிடு. இப்போ நான் ஓட்டுறது ள்ப்ர்ஜ்ன்னு சொல்றே. சரி. ஆனா என் பக்கத்துல என்னைவிட ஸ்லோவா ஒருத்தர் ஓட்டிட்டு

வர்றார்.

கணேஷ்: உங்கள விட ஸ்லோவான்னா உருட்டிக்கிட்டுத் தான் சார் வர முடியும்.

புரொபஸர்: சொல்றதைக் கேள். என்னவிட ஸ்லோவா ஒருத்தர் என் கூட வந்தா என் ஸ்பீடை நீ எப்பிடிச் சொல்லுவே?

கணேஷ்: நீங்க fastன்னு சொல்லுவேன்.

புரொபஸர்: சரியா யோசிச்சுச் சொல்லு

கணேஷ்: அவரை விட நீங்க fastன்னு சொல்லலாம்

புரொபஸர்: இதை இங்கிலீஷ்ல சொல்றதுன்னா faster than him. அதேமாதிரி அவரை slower than meன்னு சொல்லலாம். இதை degrees of comparisonன்னு சொல்றோம். Fast, faster, fastest.. Slow, slower, slowest. இப்போ நீ சொன்ன பைக் விளம்பரத்துக்கு வரேன். Another fastest bikeன்னு சொல்றது இலக்கணரீதியா தப்பு.

கணேஷ்: ஏன் சார்?

புரொபஸர்: fastன்னா வேகமாப் போறது. எத்தனை பேர் வேணும்னாலும் வேகமாப் போகலாம். fasterன்னா இன்னொருத்தரை விட வேகமாப் போறது. ஒருத்தர் fastestன்னு சொல்லும் போதே அவரை வேற சிலரோட ஒப்பிடறோம். fastestன்னா ஒருத்தர் தான் இருக்க முடியும். ஏன்னா fastestன்னா அவரை விட வேகமா வேற யாரும் இல்லேன்னு அர்த்தம். The fastest  தான் சரி. Another fastest தப்பு.

கணேஷ்: fastest bikesன்னு சொல்லலாமா?

புரொபஸர்: வெவ்வேறு கம்பெனிகளோட அதி வேகமான பைக்குகளைக் குறிக்கிறதுக்குச் சொல்லலாம். Gandhi was the best leaderன்னு சொல்லலாம். Gandhi was one of the best leadersன்னும் சொல்லலாம். முதல்ல நாம அவரைத் தவிர வேற சிறந்த தலைவர்கள் இல்லைங்குறோம். ரெண்டாவதா அவரை மாதிரி சிறந்த தலைவர்கள் வேற இருக்காங்கன்னு அர்த்தம்.

பின்னால் இருந்து ஆரவாரம் கேட்கிறது. மக்கள் ஓடி வருகிறார்கள். புரொபஸர் ஒருவரை நிறுத்தி விசாரிக்கிறார். அவர் ஒரு புலி வருவதாய்ச் சொல்லி விட்டு ஓடுகிறார். சற்று நேரத்தில் புலி உறுமும் பெரும் சத்தம் ஒலிக்க கணேஷ் பயத்தில் பைக்கில் இருந்து குதிக்கிறான்.

கணேஷ்: ஐயோ... சார்... புலி...

புரொபஸர்: எனக்கும் ஒண்ணும் கேட்கலியே

(ஒருவன் புலியைப் போல் கர்ஜித்தபடி வருகிறான்.)

புரொபஸர்: பயப்படாதே, இவன் என் பழைய மாணவன். பேரு குட்டிப்புலி.

(குட்டிப்புலி கைக்குட்டைகளை கழுத்திலும் கையிலும் காலிலும் கட்டியிருக்கிறான். அவன் அவர்கள் அருகே வந்து உறுமியபடி வணக்கம் வைக்கிறான்.)

கணேஷ்: சார் இவர் ஏன் இவ்வளவு கர்ச்சீப் கட்டியிருக்கிறார்?

புரொபஸர்: அடிக்கடி கர்ச்சீப்பைத் தொலைச்சிடறானா? திடீர்னு மூக்கு சிந்துறதுக்கு தேவைப்பட்டுதுன்னா வசதியா இருக்கட்டுமேன்னு கட்டி வச்சிருக்கான்.

கணேஷ்: சார் இப்பிடி கர்ஜிக்கிறதை இங்கீஷ்ல என்ன சொல்லலாம்?

புரொபஸர்: roarன்னு சொல்லலாம். ஆனா அடித்தொண்டையில புலி கிர்ர்ன்னு சத்தம் எழுப்புறது Growl. நாய் உறுமுறதும் growl  தான்.

குட்டிப்புலி: I dont growl, I roar.

கணேஷ்: என்ன சார் ரெண்டுக்கும் வித்தியாசம்?

புரொபஸர்: சத்தமா உறுமினா roar. கர்ஜனை. சத்தம் குறைச்சு உறுமினா growl. அதே மாதிரி இடி இடிக்கிறதை thunder growledன்னு சொல்லலாம். இடிச்சத்தம் மெதுவா ஒரு பெரிய பாறையை உருட்டுற மாதிரி நமக்கு கேட்கும். அது தான் growl. உன்னை ஒருத்தர் அடித்தொண்டையில தொலைச்சுப்புடுவேன் ன்னு மிரட்டினா அதுவும் growl. I will finish you off, he growled.

(இனியும் பேசுவோம்)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.