முகப்பு
இளைஞர்மணி

நினைவாற்றல் அதிகரிக்க...!

மனித மூளையில் 100 பில்லியன் நரம்பணுக்கள் உள்ளன. இவை நாம் உண்ணும் உணவில் இருந்து கிடைக்கும் சத்துகளை எடுத்துக் கொண்டு செய

Updated On : 9 ஜனவரி, 2024 at 6:42 AM
பகிர்:

மனித மூளையில் 100 பில்லியன் நரம்பணுக்கள் உள்ளன. இவை நாம் உண்ணும் உணவில் இருந்து கிடைக்கும் சத்துகளை எடுத்துக் கொண்டு செயல்படுகின்றன.

நமது உடலில் எரிக்கப்படும் கலோரிகளில் 30 சதவீதம் மூளையால் எரிக்கப்படுகிறது. கலோரிகள் குறைந்த உணவைச் சாப்பிட்டால், உடல் மட்டுமல்ல, மூளையும் சோர்ந்துவிடும்.

இனிப்பு, மாவுச்சத்து உள்ள உணவுகளைச் சாப்பிட்டால் உடலுக்கு அதிகமான கலோரிகள் கிடைக்கும்.

மூளை சிறப்பாகச் செயல்பட அதன் இரத்த ஓட்டம் இயல்பாக இருக்க வேண்டும். இரத்தத்தில் உள்ள ஆக்ஸிஜன் மூளையின் செயல்பாடுகளைத் தூண்டிவிடும். இரத்தத்தில் ஆக்ஸிஜன் அதிகரிக்க வேண்டும் என்றால் நாம் உண்ணும் உணவில் இரும்புச் சத்து போதிய அளவு இருக்க வேண்டும்.  இரும்புச் சத்து அதிகம் உள்ள பேரீச்சம் பழத்தை நாள்தோறும் உண்டு வர வேண்டும். பட்டாணியையும் சேர்த்துக் கொள்ள வேண்டும். இதனால் மூளை சுறுசுறுப்பாக இயங்கும். மூளைக்கு ஆக்சிஜன் கிடைப்பது குறைந்துவிட்டால், நினைவாற்றல் குறைந்துவிடும்.

வைட்டமின் பி 12 உடலின், மூளையின் சோம்பேறித்தனத்தைக் குறைக்கும். பால், அசைவ உணவுகளில் வைட்டமின் பி 12 இருக்கிறது.

வைட்டமின் சி நினைவாற்றலை அதிகரிக்கும். வைட்டமின் சி அதிகம் உள்ள கீரை வகைகள், ஆரஞ்சு, திராட்சை, வாழைப்பழம், அன்னாசிப் பழம் ஆகியவற்றை அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

மூளையில் உள்ள அசிட்டியல்சோலைன் என்ற பொருளை மூளை நரம்புகள் வெளியேற்ற வேண்டும். அப்படி வெளியேற்றினால்தான் நினைவாற்றல் அதிகரிக்கும். அதற்கு இனிப்பு வகைகளைச் சாப்பிட வேண்டும். முடிந்தவரை இயற்கையான இனிப்புப் பொருட்களைச் சாப்பிட்டால், உடலுக்கு நல்லது; மூளைக்கும் நல்லது. நினைவாற்றலும் அதிகரிக்கும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.