முகப்பு
இளைஞர்மணி

வாங்க... இங்கிலீஷ் பேசலாம்

சென்னை, மெரினா கடற்கரை. புரொபஸர் தன் நாயுடன் வாக்கிங் போய்க் கொண்டிருக்கிறார். பின்னால் இருந்து கணேஷ் ஓடி

Updated On : 9 ஜனவரி, 2024 at 6:42 AM
பகிர்:

சென்னை, மெரினா கடற்கரை. புரொபஸர் தன் நாயுடன் வாக்கிங் போய்க் கொண்டிருக்கிறார். பின்னால் இருந்து கணேஷ் ஓடி வருகிறான்.

கணேஷ் (மூச்சிரைக்க): சார்... சார்... நில்லுங்க. உங்களைப் பார்க்கத்தான் ஓடி வரேன்

புரொபஸர்: அந்தப் பக்கம் வந்து சொல்லு

கணேஷ்: ஏன் சார்?

நாய்: அவருக்கு இடது காது கொஞ்சம் மந்தம். அதான்!

கணேஷ்: சார்... உங்க நாய் பேசுது!

புரொபஸர்: என்னது?

கணேஷ் வலது பக்கம் சென்று காதுக்கருகில் கொஞ்சம் சத்தமாய்: சார் உங்க நாய் பேசுது!

புரொபஸர்: அதுக்கு ஏன் இப்படிக் கத்தறே? அது நல்லா பேசும். சரி... உனக்கு என்ன வேணும்? ஏன் இப்பிடி ஓடி வர்ற?

கணேஷ்: சார் எனக்கு இங்கிலீஷ்ல பேசணும். வேலைக்கு இன்டெர்வியூ போனா, இங்கிலீஷ் தெரியாம ரொம்ப தடுமாறுறேன். ஹெல்ப் பண்ணுங்க சார்...

புரொபஸர்: இங்கிலீஷ்ல பேசணும்னா முதல்ல நீ தமிழ்ல பேசுறதக் கொறைச்சிடணும். முடிந்தவரை இங்கிலீஷ்லயே பேசணும்.

கணேஷ்: சரி... சார்...  இனிமே டெய்லி உங்க கூடயே வாக்கிங் வரேன். அப்பிடியே இங்கிலீஷும் கத்துக்கிறேன்.

புரொபஸர்: இப்ப நீ சொன்னியே, அதையே இங்கிலீஷ்ல சொல்லு பார்க்கலாம்?

கணேஷ்: I am going to join  you in your

புரொபஸர்: அப்படிச் சொல்லக் கூடாது...  I am going to join  you in your

walking - ன்னு சொல்லணும்.

கணேஷ்: ரொம்ப பெரிசா இருக்கே சார்... walking you ன்னு சொன்னா தப்பா சார்?

புரொபஸர்: ஆமா, இந்த நாயை நான் கயிறு கட்டி அழைச்சிட்டு போறேன் இல்லியா? இதைச் சொல்றதுக்குத்தான் I am walking you அப்பிடீன்னு சொல்லணும். ஐ ஹம் ஜ்ஹப்ந்ண்ய்ஞ் ஹ்ர்ன் ன்னா நீ என்னை கூட்டிக்கிட்டு போறேன்னு அர்த்தம்.

நாய்:  I walk myself

கணேஷ்: அது என்னவோ சொல்லுது சார்

புரொபஸர்: அதுவா? அது தானா நடக்குதாம். ஏய்... quiet

நாய்:I am quite quiet

கணேஷ்: அப்டீன்னா?

நாய்: நான் ரொம்ப அமைதியாத்தான் வரேங்கிறேன்

கணேஷ்: இது அப்படி சொல்லலியே? கொயட் கொயட்னா அப்படியா மீனிங்?

நாய்: முத கொயட்டில ங் கடைசியில வருது பார்த்தியோ இல்லியோ. அப்டீன்னா ரொம்பன்னு அர்த்தம். ரெண்டாவது கொயட்ல ங் கடைசி எழுத்துக்கு முன்ன வருது. அப்போ அமைதின்னு அர்த்தம்.

கணேஷ்: சார் இது எப்பிடி சார் இவ்வளவு நல்லா இங்கிலீஷ் பேசுது?

புரொபஸர்: அது நம்ம சந்திரசேகர் இருக்கார் இல்லியா, உங்க பழைய ஹெச்.ஓ.டி அவர் வீட்டுல வளர்ந்தது. இந்த நாயை அவரால பார்த்துக்க முடியலன்னு சொல்லி எங்கிட்ட கொடுத்திட்டாரு. அவங்க வீட்டில அவர் பேசறதைக் கேட்டு வச்சுட்டு... அப்பப்போ எடுத்து விடும்.

கணேஷ்: சார்... அப்போ நீங்க இந்த நாயை அடேப்ட் பண்ணீட்டீங்க... அப்பிடித் தானே?

நாய்: அது அடேப்ட் இல்ல அடோப்ட். Adopt அப்பிடீன்னா தத்து எடுத்துக்கிறது.

கணேஷ் (வருத்தமாக): நானும் அதே தான் சொன்னேன்

நாய்: இல்லியே நீ சொன்னது adapt. அதுக்கு என்ன அர்த்தம்ன்னா சூழலுக்கு ஏத்தவாறு நம்மள மாத்திக்கிறது. மேட்ச் தோத்ததும் தோனி அடிக்கடி சொல்லுவாரே டிவியில we have to very quickly adapt to the new rules அப்படீன்னு...

புரொபஸர் (தலையைச் சொறிந்தபடி): தோனி அடிக்கடி இன்னொண்ணு சொல்லுவாரே, அதை மறந்திட்டேன். ஏதோ ஒண்ணு.

நாய்: அதுவா...  of course ன்னு அடிக்கடி சொல்வார்.

கணேஷ்: அப்பிடீன்னா

நாய்:  ஆமால்ல, ஆமா..ஆமா, நிச்சயமா, இப்பிடி அர்த்தம் சொல்லலாம். ஆனா of coursedக்கு மிகச் சரியா தமிழ்ல வார்த்தை இல்ல.

கணேஷ்: அதை ஏன் அவர் அடிக்கடி சொல்றாரு?

புரொபஸர்: அதை சும்மா எதுக்கும் சொல்லலாம். சாப்பிட்டியான்னு கேட்டா of coursed. தூங்கினியா of coursed. இப்பிடிஅதை filler மாதிரி, என்ன சொல்றதுன்னு தெரியாம இருக்கிறச்சே, பயன்படுத்தலாம்.

நாய்: தோனி காலேஜ் படிக்கிறச்சே ஒரு பொண்ணு அவர் கிட்ட முதமுதல்ல "ஐ லவ் யூ' சொல்லிச்சு. அதுக்கு தோனி என்ன சொன்னாருன்னு தெரியுமோ?

கணேஷ்:of coursed

நாய்: ஹா... ஹா... நாம் இப்பிடி கிண்டல் பண்ணி பண்ணி அவர் இப்போ அதை சொல்றதே இல்ல I really miss it.

கணேஷ்: சார் இது என்ன சொல்லுது? மிஸ்ன்னா ஒரு பொருளைத் தொலைக்கிறது இல்லியா?

புரொபஸர்: அது மட்டுமில்ல. பார்க்க முடியாமத் தவிக்கிறது கூட மிஸ் பண்றது தான். ஓர் ஆளைக் கூட மிஸ் பண்ணலாம். புடிச்ச ஒரு பொருளைக் கூட மிஸ் பண்ணலாம்.

கணேஷ்: ஐ மிஸ் யூன்னு ஒரு பொண்ணைப் பார்த்துச் சொன்னா?

நாய்: அடி வாங்குவே...

கணேஷ்: சார் உங்க நாய் ரொம்ப talking

புரொபஸர்: அது talking இல்ல talkative

கணேஷ்: அப்பிடீன்னா?

நாய்: வாயாடி

புரொபஸர்: கணேஷ் நீ அது சொல்றதைக் கேட்காத. ஜூலி நீ சும்மா இருக்க மாட்டியா?

நாய்: Sorry I missed you

கணேஷ்: இப்ப யாரை மிஸ் பண்றதாச் சொல்ற?

நாய்: உங்க சார் சொன்னது என் காதில விழலேங்கிறேன்!

கணேஷ்: ஓ... அதுக்கும் miss தானா?

(இனியும் பேசுவோம்)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.