வாங்க இங்கிலீஷ் பேசலாம்... 30
ரொபஸர் அவரது மாணவி மாலாவின் குடிசையில் இருக்கிறார். கூட கணேஷ், நாய் ஜூலி ஆகியோர் இருக்கிறார்கள்.
ரொபஸர் அவரது மாணவி மாலாவின் குடிசையில் இருக்கிறார். கூட கணேஷ், நாய் ஜூலி ஆகியோர் இருக்கிறார்கள்.
ஜூலி (கொட்டாவி விட்டபடி): இந்த இடம் என் கூண்டு போலவே இருக்குது.
புரொபஸரும் கணேஷும் அந்த இடத்தை மீண்டும் ஒருமுறை பார்க்கிறார்கள்.
புரொபஸர் (மாலா): நீ ஏன் இங்க வீட்டை மாத்திட்டு வந்திட்டே? உன் பழைய வீடு இன்னும் பெரிசா இருந்துதே? சொல்லப் போனா this is not a house, not even a hut. Some sort of makeshift hut, right?
கணேஷ்: Makeshiftன்னா?
மாலா: நீ பார்க்கிறியே இது. இங்க இப்போ எங்க வீடெல்லாம் இப்படித் தான். தார்ப்பாய், சேலைத் துணி, இதைப் பயன்படுத்தி தற்காலிகமா கட்டினது. அது தான் makeshift. This is our makeshift shelter.
ஜூலி (தன்னை கட்டியுள்ள கயிறைக் காட்டி): என்னோட leash அறுந்து போச்சு. அதனால நானே இந்த கயிற்றை என் கழுத்தில கட்டிக்கிட்டேன். This is my makeshift leash now.
கணேஷ்: Leash அதென்ன?
ஜூலி: சாதாரண கயிறு, நாய் கழுத்தில தொங்குகிற கயிறானதும் அது பேரு leash ஆயிடுது. நீ கிரிக்கெட் கமெண்டிரியில கேள்விப்பட்டதில்ல? the spinner has got the batsman on a leash.
கணேஷ்: அப்படீன்னா பேட்ஸ்மேன் ஒரு நாயா?
ஜூலி: இந்த உலகத்தில யார் தான் நாயில்ல? சொல்லு...
மாலா: On a leashகிறது ஒரு idiomatic expression.
புரொபஸர்: கம்பி நீட்டுறதுன்னு தமிழில சொல்லுவோமே, அது மாதிரி. அதுக்கு மறைமுக அர்த்தம் தான் இருக்கும். ஐய் ச்ஹஸ்ரீற் ந்ங்ங்ல் ர்ய் ஹ ப்ங்ஹள்ட் தப்பு. சரியான In fact keep on a leash தப்பு. சரியான expression to keep on a tight leash. The bowler keeps the batsman on a tight leash. அப்படீன்னா பவுலர் ரொம்ப சிக்கனமா பந்து வீசி ரன்னே கொடுக்காம பேட்ஸ்மேனை தன்னோட கட்டுப்பாட்டில் வச்சிருக்கிறது.
கணேஷ்: சார் to keep on a leashக்கும் tight leashக்கும் அவ்வளவு வித்தியாசம் இருக்கா என்ன?
புரொபஸர்: நிச்சயமா.
ஜூலி: இதை நான் என் அனுபவத்தில இருந்து புரொபஸரை விட பெட்டரா விளக்குவேன். நாயை வாக்கிங் அழைச்சிட்டு போகும் போது கயிறை ச்ழ்ங்ங்ஆக நீளமா விட்டால் நாய் தன் இஷ்டத்துக்கு இழுத்துக்கிட்டு போகும். அப்போ நாயை ஒழுங்குபடுத்துறதுக்கு, கட்டுப்பாட்டில கொண்டு வரதுக்கு கயிறை இறுக்கி பிடிச்சுப்பாங்க. அதுதான் tight leash. இந்த பிரயோகம் அடிப்படையில் நாய் பயிற்சியில் இருந்து வரது. இப்போ அதை எல்லாச் சூழலுக்கும் பயன்படுத்த ஆரம்பிச்சிட்டாங்க. நம்ம புரொபஸர் மாலை ஆறு மணிக்குள்ள வீட்டில இருக்கணுமுன்னு வீட்டுக்காரம்மா ஸ்டிரிக்டா சொல்லி இருக்காங்க. அவரு ஆறு மணி ஆனாலே வீட்டுக்கு ஓடிடுவாரு. She has him on a tight leash.
மாலா (ஜூலியின் கயிற்றை தூக்கிப் பார்த்து): So this is your makeshift leash. உன்னைத் தான் யாரும் இழுத்திட்டு போறதில்லியே... அப்புறம் ஏன் உனக்கு ஒரு கயிறு?
ஜூலி: மழை பெய்யாம இருந்தாலும் சில பொண்ணுங்க குடையோட சுத்துறது இல்லியா? அது மாதிரி தான் இது.
புரொபஸர்: சரி நீங்க எப்படி இங்க வந்தீங்க?
மாலா: சில மாதங்களுக்கு முன்பு வந்த வெள்ளத்தைத் தொடர்ந்து போலீஸ்காரங்களும் மாநகராட்சி அதிகாரிகளுமா சேர்ந்து எங்க வீட்டை இடிச்சிட்டாங்க. நாங்க கால்வாய் மேல வீடு வச்சிருக்கிறதா சொன்னாங்க. ஆனா உண்மையிலே வெள்ளத்துக்குக் காரணம் ஏரிகளை ஆக்கிரமிச்சு பெரிய பெரிய பல மாடிக் கட்டடங்களைக் கட்டினவங்களும் சரியா தூர் வாராமல் விட்டவங்களும்தான். But nobody touches them. Their pockets are deep.
கணேஷ்: அதென்னா பாக்கெட் டீப்?
ஜூலி: Another idiom. ஆக்சுவலி சரியா சொல்றதுன்னா They have deep pockets. Deep pocketsன்னா யாரையும் விலைக்கு வாங்குகிற பணபலம் இருக்கிறது. பொதுவா அரசாங்கத்தைக் கட்டுப்படுத்தும் செல்வாக்கு மிக்கவர்களைக் குறிப்பிடறதுக்கு இதைப் பயன்படுத்துவாங்க.
(இனியும் பேசுவோம்)