வாங்க இங்கிலீஷ் பேசலாம்... 32
புரொபஸர் அவரது நண்பரான சேஷாச்சலத்தின் பிணத்தை எரியூட்டும் மின்மயானத்துக்கு வெளியே காத்து நிற்கிறார். கூட அவரது நண்பர் சடகோபனும் கணேஷும் இருக்கிறார்கள். அவர்களுக்கு சற்று தள்ளி சேஷாச்சலத்தின் முன்னாள் காதலி கோமளவல்லி நிற்கிறார்.
புரொபஸர் அவரது நண்பரான சேஷாச்சலத்தின் பிணத்தை எரியூட்டும் மின்மயானத்துக்கு வெளியே காத்து நிற்கிறார். கூட அவரது நண்பர் சடகோபனும் கணேஷும் இருக்கிறார்கள். அவர்களுக்கு சற்று தள்ளி சேஷாச்சலத்தின் முன்னாள் காதலி கோமளவல்லி நிற்கிறார்.
கணேஷ்: sir, why are you both not grief?
புரொபஸர்: தப்புடா. எப்பவுமே is, was, are, were இதெல்லாம் வந்தா, அடுத்ததா வர வினைச்சொல் கடந்த காலத்துல இருக்கணும். அதாவது want எனும் areக்கு wanted அப்புறமா வந்தா wanted ஆகும். You are wanted. அது மட்டுமில்ல grief ஒரு noun அதாவது பெயர்ச் சொல்.
கணேஷ்: சாரி சார். Griefஐ எப்பிடி verbஆ சொல்லலாம்?
சடகோபன்: Grieve. Komalavalli was grieved over his sudden death.
அவர் சொன்னதைக் கேட்டு திரும்பிப் பார்க்கும் கோமளவல்லி அவர்களை நோக்கி வருகிறார்.
கணேஷ் (கோமளவல்லியை நோக்கி): மேடம் are you grieved?
கோமளவல்லி (கண்களைத் துடைத்தபடி): ரட்ஹற்? What? I am heart-broken, devastated.
கணேஷ் (புரொபஸரை நோக்கி): heart-brokenன்னா மனசு உடைஞ்சு போறது தானே சார்? Devastated?
புரொபஸர்: ஒரு இழப்பினால் ஏற்படுற கடுமையான துக்கம், அதிர்ச்சி இதையெல்லாம் devastationன்னு சொல்வோம். She was devastated at the news. அதே மாதிரி ஒரு இயற்கை பேரிடர் காரணமா பேரழிவு ஏற்படுறதும் devaste தான். Chennai was devastated by the floods. வெள்ள பாதிப்பால் சென்னை உருத்தெரியாமல் ஆனது.
சடகோபன் (கோமளவல்லியிடம்): you look fresh as a daisy.
கோமளவல்லி அவரை முறைத்து விட்டு திரும்பிக் கொள்கிறார்.
கணேஷ்: அப்பிடீன்னா
சடகோபன்: பார்க்கிறதுக்கு உற்சாகமா ஆரோக்கியமா இருக்கிறது. கோமளவல்லி நதியா மாதிரி. Age does not wither her.
கணேஷ்: Witherன்னா
சடகோபன்: பூ வாடி காய்ஞ்சு போறது.
புரொபஸர்: அதுக்கு ஜ்ண்ப்ற்ன்னும் இன்னொரு வார்த்தையும் இருக்குது
கணேஷ்: Age does not wither her. சார் அழகா இருக்கு இந்த வாக்கியம். உங்க கவிதையா சார்?
சடகோபன்: ஹா... ஹா... அப்பிடீன்னும் வச்சுக்கலாம்.
புரொபஸர்: அது ஷேக்ஸ்பியரோட வரி. "ஆண்டனி அண்ட் கிளியோபட்ரா' என்கிற பிரபலமான நாடகத்தில கிளியோபட்ராவை நோக்கி அவளோட காதலன் ஆண்டனி சொல்ற வசனம் அது: Age does not with her Nor custom stale her; infinite variety.
கணேஷ்: Customன்னா வழக்கம் தானே சார்?
புரொபஸர்: ஆமா, பழக்கம். Staleன்னா புளிச்சு அலுப்பாகிப் போறது. அதாவது கிளியோபட்ராவோட அழகு எப்படீனா அவளோட வருசக்கணக்கா பழகினாலும் யாருக்கும் அலுப்பு ஏற்படாது. ஏன்னா she has infinite variety. Infiniteன்னா முடிவற்றது. அவளோட சுபாவத்துல நாம் கணிக்கவே முடியாத முடிவில்லாத வெரைட்டி இருக்கு.
கணேஷ்: அதெப்படி சார் சுபாவத்துல வெரைட்டி இருக்கும்? டிரஸ்ஸில சாப்பாட்டுல வெரைட்டி இருக்கலாம்.
புரொபஸர்: வெரைட்டின்னா அந்த அர்த்தமில்ல. இது variedness. அதாவது மாறுபட்ட தன்மை. கிளியோபட்ரா கூட எத்தனை வருசம் பழகினாலும் அவள் மனசில என்ன இருக்குன்னு கண்டுபிடிக்க முடியாது. She plays cat and mouse with Antony. He is always kept guessing and is never bored over her.
கணேஷ்: யார் சார் இதில எலி?
சடகோபன்: ஆண்டனி தான். பொண்ணுங்களுக்கு ஆண்களை பூனை எலியை தட்டி விளையாடற மாதிரி கட்டுப்படுத்துறது பிடிக்கும். அதான் playing cat and mouse.
கணேஷ்: kept guessingன்னா தெளிவா எதையும் சொல்லாம இருக்கிறதா சார்?
புரொபஸர்: ஆமா. கிளியோபட்ரா தான் வேற ஆண்களை நேசிக்கிற மாதிரி பேசி ஆண்டனியோட பொறாமையைத் தூண்டி விட்டுக்கிட்டே இருப்பா. அது அவனுக்கு அவள் மேலுள்ள காதலை பல மடங்கு ஆக்கிடும்.
சடகோபன்: She keeps him on tenterhooks over her loyalty. அதாவது அவள் உண்மையிலே யாருக்கானவள் என்கிற விசயத்தில எப்பவுமே ஒரு சஸ்பென்ஸ் இருக்கும்படியா பார்த்துப்பா.
புரொஸர்: இப்போ எக்ஸாம்ல ஜெயிச்சிட்டியா? இல்லியான்னு ரிஸல்ட்டு வரவரைக்கும் தவிக்கிறியே அப்போ you are kept on tenterhooks.
(இனியும் பேசுவோம்)