முகப்பு
இளைஞர்மணி

வாங்க இங்கிலீஷ் பேசலாம் - 65

நீச்சல் குளம் அருகே புரொபஸர் மற்றும் கணேஷ் ஆண்டாள் எனும் திருநங்கையைச் சந்தித்துப் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

Updated On : 24 ஜனவரி, 2024 at 6:55 PM
பகிர்:

நீச்சல் குளம் அருகே புரொபஸர் மற்றும் கணேஷ் ஆண்டாள் எனும் திருநங்கையைச் சந்தித்துப் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.
ஆண்டாள்: உங்க சார் ண்ற் பற்றி சொன்னப்போ வேறொரு விசயம் நினைவு வந்தது. 
கணேஷ்: என்னது?
ஆண்டாள்: எங்களோட நிறுவனத்தோட வெளிநாட்டு வாடிக்கையாளர் ஒரு மாசமா எங்க அலுவலகம் வந்திருக்காங்க. அவங்களோட வெளியே ஷாப்பிங் போயிருந்தேன். தன்னோட குழந்தைக்குத் தள்ளு வண்டி வாங்கணுமுன்னு சொன்னாங்க. அப்போ He is 6 months oldன்னு சொன்னாங்க. அப்போ எனக்கு இந்த சந்தேகம் வந்துது. பொதுவா குழந்தைங்களை ண்ற் என்று தானே சொல்வோம். தமிழில் கூட குழந்தை தூங்கிருச்சா? என்று தான் குறிப்பிடுவோம். வளர்ந்தவங்களுக்கு தான் he,she பயன்படுத்துவோம். ஆனால் அதுக்குன்னு It is 6 months old  என்று சொன்னாலும் அது அக்கறையின்றி ஏதோ ஒரு பொருளைப் பற்றி சொல்றாப்ல இருக்கு. ஒரே குழப்பத்தில மண்டையைப் பிச்சுக்கிட்டேன்.
புரொபஸர்: You are right. குழந்தைங்களுக்கு it தான். ஆனா இந்த விதிமுறையும் ஜூலி பற்றி சொன்னது போலத் தான். முன்பு நாம் எப்படி நாய் பூனைகளை அஃறிணையாக நினைத்தோமோ, குழந்தைகளையும் கிட்டத்தட்ட அப்படித்தான் கருதினோம். அவர்களுக்கு என்று தனி அடையாளமோ, உரிமைகளோ இல்லை. அதனால் it போதுமானதாக இல்லை. ஆனால் இன்று பிறந்து சில மாதங்களே ஆன குழந்தை கூட ஒரு தனிமனிதன். குழந்தை ஒரு வளர்ந்த மனிதனுக்கு இணையாகக் கருதப்படுது. அதனால் தான் he, she போட்டு அவன், அவள் என குழந்தைகளை அழைக்கிற பழக்கம் ஆங்கிலத்தில் மேல்நாடுகளில் வந்தது. அதனால் தான் உனக்கே குழந்தையை it போட்டு அழைக்க சங்கடமாக இருந்தது. ஜூலி மாதிரி நாயைக் குழந்தையாக நடத்துறோம், குழந்தையை வளர்ந்தவங்களாக நடத்துறோம். இது தான் நவீன யுகம்.
ஜூலி: என்னால அவமானம் தாங்க முடியல. நான் தூங்கப் போறேன். 
புரொபஸர்: சரி தூங்கு.
ஜூலி நெட்டி முறித்தபடி: இவ்வளவு பேர் மத்தியிலா? I ought to sleep in a nice lonely corner.
புரொபஸர்: You ought not sleep then. நாங்க நீந்தும் போது எங்க செருப்பு, டிரஸ்ஸையெல்லாம் பாதுகாக்கத் தானே உன்னையே கூட்டிட்டு வந்தோம்.
கணேஷ்: அதென்ன சார் ought to?
ஆண்டாள்: நான் சொல்லட்டுமா?
புரொபஸர்: Go ahead
ஆண்டாள்: ஒரு விசயத்தைக் கட்டாயமா செய்யணுமுன்னு வலியுறுத்துறதுக்காக verb தான் ought. It is like should. கரெக்டா?
புரொபஸர்: Almost. ஆனா ought கூட to பயன்படுத்தலாம். ஆனால் should கூட to வராது. Should toன்னு சொல்ல மாட்டோம். 
ஆண்டாள்: To infinitive தானே மீன் பண்றீங்க?
புரொபஸர்: ஆமா.
கணேஷ்: ஹலோ எனக்கும் புரியற மாதிரி சொல்றீங்களா? அதென்ன infinity?
புரொபஸர்: Infinity என்றால் முடிவற்றது. To infinitive ஓர் இலக்கண வடிவம். ஒரு வினைச்சொல்லோட to சேர்த்து எண்ணற்ற வாக்கியங்களை அமைக்கலாம். உதாரணமா, I like to eat, to sleep, to ride a bike, to go for a movie. இப்படிப் போகும். உனக்கு இப்போ உடனடியா என்ன பண்ண ஆசைன்னு கேட்டா என்ன சொல்லுவே?
கணேஷ்: I want to kiss.
புரொபஸர்: என்னது கிஸ்ஸô? ஏம்மா நீ எதுக்கும் இவங்க கிட்ட இருந்து தள்ளி உட்காரு.
கணேஷ்: அதில்ல சார். I want to kiss my troubles goodbyeன்னு சொல்ல வந்தேன்.
புரொபஸர்: பரவால்ல நீ கூட சாமர்த்தியமா சமாளிக்க கத்துக்கிட்ட.
ஆண்டாள்: Kiss something goodbye என்றால் ஒரு விசயத்தை முடிப்பது என அர்த்தம். அப்படித் தானே?
புரொபஸர்: ஆமா. ஆனால் விருப்பமில்லாம ஒரு விசயத்தை இழக்கும் நிலை ஏற்படுறதும் kiss goodbye தான். உதாரணமா அடிக்கடி இப்படி லீவ் எடுத்துக்கிட்டிருந்தா you have to kiss your job goodbye soon. அதாவது வேலை நிலைக்காது. சரி, அது போகட்டும், I want to கூட to infinitive தான். சரி, இருட்ட தொடங்கியாச்சு. இனி நீந்த முடியாது. வாங்க பக்கத்தில ஹோட்டல் இருக்கு. காப்பி சாப்பிட்டுக்கிட்டே பேசுவோம்.
(இனியும் பேசுவோம்)
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.