முகப்பு
இளைஞர்மணி

வாங்க இங்கிலீஷ் பேசலாம் - 67 

புரொபஸர் கணேஷ் மற்றும் ஜூலி பணம் எடுப்பதற்காக ஏ.டி.எம். வாயிலில் ஒரு நீண்ட வரிசையில் சேர்ந்து கொள்கிறார்கள்.

Updated On : 24 ஜனவரி, 2024 at 7:00 PM
பகிர்:

புரொபஸர் கணேஷ் மற்றும் ஜூலி பணம் எடுப்பதற்காக ஏ.டி.எம். வாயிலில் ஒரு நீண்ட வரிசையில் சேர்ந்து கொள்கிறார்கள்.
கணேஷ்: ஜூலி என்ன ரொம்ப சீரியசா யோசிக்கிறே?
ஜூலி (கனைக்கிறது): We used to believe money is no object.
கணேஷ்: object
ஜூலி: அதாவது முன்பு எல்லார் கிட்டயும் நிறைய பணம் இருந்தது. பணத்தால் எதையும் வாங்கலாமுன்னு நம்பினோம். அப்படி நினைக்கிறது தான் money is no object. Real estate became a license to print money. ஆனால்  இப்போ everybody is pressed for money.
கணேஷ்: Pressed for ன்னா?
ஜூலி: பேஸ்ட் காலியானதும் அதைப் பிதுக்குவோம் இல்லையா? அதேபோல பணம் இல்லாம நெருக்கடியில் தவிக்கிறது தான் pressed for money.
கணேஷ்: உனக்கு நாங்கள் அல்லல்படுறது வேடிக்கையா தெரியுதா?
ஜூலி: அப்படி இல்ல. Every cloud has a silver lining. அதாவது எந்த துயரத்திலும் ஒரு நம்பிக்கை கீற்று இருக்குது என்கிறேன்.
கணேஷ்: சரி அதென்ன license to print money?
ஜூலி: காசை ஒருத்தர் கன்னாபின்னாவென செலவு செய்யும் போது பணம் என்ன மரத்திலையா காய்க்குதுன்னு கேட்போமே, அதோட ஆங்கில வடிவம் தாம் to have the license to print money. Globalization, அதாவது உலகமயமாதல், வந்ததும், சுலபமா பணம் சம்பாதிக்க நிறைய வழிகள் உருவாகிச்சு. சிலர் நிறையப் பணம் சம்பாதிச்சாங்க. அது கறுப்புப் பணமா உருமாறிருச்சு. Then we had a 
license to print money.  
புரொபஸர் (கோபமாய்): Julie you are spinning a yarn.
கணேஷ்: அதென்ன spin a yarn?
புரொபஸர்: கதை விடுறது. It is plain hogwash.
கணேஷ்: hogwash
ஜூலி: It means nonsense. என் கருத்து அபத்தமுன்னு சொல்றார்.
கணேஷ்: அதுக்கு ஏன் hogwash? Hog என்றால் பன்றி தானே?
புரொபஸர்: கரெக்ட். We call it pigswill. அப்படீன்னா சமையலறையில் மீதமான எச்சில் உணவையெல்லாம் நீரில் கலந்து பன்றிக்கு ஆகாரமா வைக்கிறது. அதைத் தான் hogwash என்போம். ஜுலியின் கருத்து அதற்குச் சமம். நான்சென்ஸை விட அதிக கோபத்தை காட்டி திட்டறதுக்கு hogwash ன்னு சொல்லலாம்.  
கறுப்புப் பணம் உண்மையில் சாதாரண ஜனங்களிடம் இல்லை. Do you know so many small 
traders are running into huge losses?
கணேஷ்: அதென்ன சார் run into losses?
புரொபஸர்: நஷ்டமடைவதை அப்படிச் சொல்றோம். Incurring huge loss என்றும் சொல்லலாம். 
வரிசையில் நிற்கும் ஒரு முதியவர்: ஆமா ஆமா போன வாரம் due to the cyclone ஏ.டி.எம்.  எங்கேயும் திறக்கல. கார்ட் மெஷின் வேலை செய்யல. I was running from pillar to post. மருந்து வாங்குறதுக்காக நான் தெருத்தெருவா அலைஞ்சேன். கடையில மருந்திருக்கு, என் கிட்ட கணக்கில பணம் இருக்கு. ஆனால் என்னால வாங்க முடியல. 
கணேஷ்: அதென்ன சார் pillar to post?
(இனியும் பேசுவோம்)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.