வாங்க... இங்கிலீஷ் பேசலாம்... 21
புரொபஸர், கணேஷ் மற்றும் நாய் ஜூலி ஒரு டீக்கடையில் அமர்ந்து பேசுகிறார்கள். புரொபஸர், கணேஷிடம் இரண்டு வாக்கியங்களைக் குறிப்பிட்டு வித்தியாசம் கேட்கிறார்.
புரொபஸர், கணேஷ் மற்றும் நாய் ஜூலி ஒரு டீக்கடையில் அமர்ந்து பேசுகிறார்கள். புரொபஸர், கணேஷிடம் இரண்டு வாக்கியங்களைக் குறிப்பிட்டு வித்தியாசம் கேட்கிறார்.
1) Water boils in a pot. 2) He boils water in a pot. 1) தண்ணீர் பானையில் கொதிக்கிறது. 2) அவன் தண்ணீரை பானையில் கொதிக்க வைக்கிறான். முதல் வாக்கியத்தில் boil intransitive verb ஆக உள்ளது என்றும் இரண்டாவதில் அதே boil intransitive verb ஆக உள்ளதென்றும் ஜூலி பதில் சொல்கிறது. அதென்ன transitive, intransitive என கணேஷ் வினவ புரொபஸர் மேலும் விளக்குகிறார்.
புரொபஸர்: ஒரு வாக்கியத்தில் வரும் வினைச்சொல்லுக்கு நேரடியான ர்க்ஷத்ங்ஸ்ரீற் இருந்ததுன்னா அது டிரான்ஸிட்டிவ் வினைச்சொல். உதாரணமா, இதோ டீ போடறாரே மாஸ்டர் அவரை ஜூலி கடிச்சுதுன்னா?
ஜூலி: bad example
புரொபஸர்: கடிச்சுதுன்னா என்னாகும்?
டீ மாஸ்டர்: அய்யோ சார்... இந்த நாய் கடிக்குமா?
புரொபஸர்: பார்த்தியா? இது மாதிரி ரியாக்ஷன் வந்திச்சின்னா ஒரு வினைச்சொல்லுக்கு object உண்டுன்னு அர்த்தம். ஒரு வாக்கியத்தில் objectன்னா அதில் வரும் செயலால் பாதிக்கப்படுற பொருளோ மனிதரோ தான். Julie bites the master. இங்க மாஸ்டர் தான் object. அதாவது சம்பவத்தினால் நேரடியா பாதிக்கப்படுகிறவர். அப்போ bite ஒரு transitive verb. He boils waterன்னு வரப்போ அங்க கொதிக்கிற செயலினால் நேரடியா பாதிக்கப்படுறது எது?
கணேஷ்: தண்ணீர்?
புரொபஸர்: கரெக்ட். அப்போ அங்கே தண்ணீர் தான் object. Water boils in the pot இல் boil என்கிற வினைச்சொல்லால் பாதிக்கப்படுறது எது?
கணேஷ்: தண்ணீர் அதுபாட்டுக்கு தானே கொதிக்குது. அது எதையும் பாதிக்கலையே...
புரொபஸர்: ஆமா... அதனால அங்க object இல்ல. அதனாலேயே அந்த வினைச்சொல் intransitive.
புரொபஸர்: The flag flutters in the wind. காற்றில் கொடி படபடக்கிறது. இங்கு எது கொடியை படபடக்க வைக்குது?
கணேஷ்: காற்று?
புரொபஸர்: குட். ஆனா காற்று படபடக்க வைக்கிறதா, அந்த வாக்கியம் சொல்லுதா? இல்ல... கொடியே படபடக்கிறதா சொல்லுதா?
கணேஷ்: கொடி தானாகத்தான் படபடக்குது. என்ன சார் குழப்புறீங்க?
புரொபஸர்: சரி. அப்போ இங்க படபடக்கிற செயலினால் பாதிக்கப்படும் object உண்டா?
கணேஷ்: ம்ம்... இல்ல சார். ஆனா சார்... காற்றில தானே கொடி அசையுது?
புரொபஸர்: நல்ல கேள்வி. நான் ஒரு விசயம் எழுதப்படறதைப் பொறுத்து அதோட வினைச்சொல் மாறுமுன்னு சொல்றேன். மத்தபடி அர்த்தம் மாறாது.
அப்போது சாலையில் நடந்து போகும் ஒரு ஜீன்ஸ் அணிந்த பெண் தடுக்கி விழுகிறாள்.
கணேஷ்: ஐயோ...
புரொபஸர்: நீ ஏன் ஓவரா பீல் பண்றே? அவளுக்கு எழுந்துக்க தெரியும். இப்போ அவள் விழுந்தது transitiveவா? intransitiveவா?
ஜூலி: You are a heartless monster
கணேஷ்: ஆங்...!
புரொபஸர்: என்னை இரக்கமற்ற அரக்கன்னு சொல்லுது. ஆனா நமக்குப் பாடம் தான் முக்கியம். என் கேள்விக்கு பதில் சொல்லு. அந்த பொண்ணு விழுந்ததாச் சொன்னால் அதில் object உண்டா? விழுறது இங்க transitive verbஆ? intransitive verbB?
கணேஷ்: சார் தடுக்கி விழுறதுக்கு இங்கிலீஷ்ல என்ன?
புரொபஸர்: பழ்ண்ல். Trip. She tripped over a stone on the road. அதாவது ரோட்ல கல் தடுக்கி விழுந்திட்டா?
கணேஷ்: கல் தான் சார் object.
புரொபஸர்: அவள் தானே கல் மேலே தடுக்கி விழுந்தாள். கல் அவளை தடுக்கிவிட்டதா நான் சொல்லலையே?
கணேஷ்: திரும்பவும் குழப்புறீங்க சார்...
புரொபஸர்: she tripped சரியா?
கணேஷ்: ஆமா
புரொபஸர்: அதனால யார் பாதிப்புக்குள்ளானாங்க?
கணேஷ்: அந்த பொண்ணே தான்
புரொபஸர்: நான் அவள் தடுக்கினதோட விளைவை கேட்கல. அவளது செயல் நேரடியா வேற ஒன்னையோ ஒருத்தரையோ பாதிச்சுதா?
ஜூலி: எனக்கு மட்டும் லைட்டா இதயம் வலிச்சுது
புரொபஸர்: ஜூலி you shut up.
கணேஷ்: அவள் தடுக்கினது வேற எதையும் நேரடியா பாதிக்கல சார். அப்படீன்னா அச்செயலுக்கு object இல்ல. அப்படீன்னா tripped intransitive சரியா சார்?
புரொபஸர்: சூப்பர் இப்போ தான்டா நீ என் ஸ்டூடென்ட்.
(இனியும் பேசுவோம்)