முகப்பு
இளைஞர்மணி

வாங்க... இங்கிலீஷ் பேசலாம்...: 23

புரொபஸரும் கணேஷும் வெள்ள நிவாரணத்துக்கான வரிசையில் நிற்கிறார்கள். கணேஷ் புரொபஸரிடம் ஒரு சம்பவம் நடந்ததும் அதை past tense  இல் சொல்ல வேண்டுமா? அல்லது present tense  இல் சொல்ல வேண்டுமா? என கேட்கிறான்.

Updated On : 24 ஜனவரி, 2024 at 4:32 PM
பகிர்:

புரொபஸரும் கணேஷும் வெள்ள நிவாரணத்துக்கான வரிசையில் நிற்கிறார்கள். கணேஷ் புரொபஸரிடம் ஒரு சம்பவம் நடந்ததும் அதை past tense  இல் சொல்ல வேண்டுமா? அல்லது present tense  இல் சொல்ல வேண்டுமா? என கேட்கிறான்.

கணேஷ்: சார் பாட்டி மேல சைக்கிள் ஏத்திடறான். அதை As we are standing a boy riding his cycle knocks over an old womanன்னு சொன்னீங்க. Knocks நிகழ் காலத்துக்கான சொல் இல்லையா? ஏன் knocked சொல்லக் கூடாது?

புரொபஸர்: சில விஷயங்களை நிகழ் காலத்துல சொன்னா இன்னும் டிராமிட்டிக்கா கலர்புல்லா இருக்கும். ஆனால் ஒரு விஷயத்தில கவனமா இருக்கணும். அந்த வாக்கியத்தை நீ கடந்த காலத்துக்கு மாற்றும் போது எல்லா வினைச்சொற்களையும் கடந்த காலத்துக்கு மாற்றணும். அந்த வாக்கியத்துல உள்ள வினைச்சொற்கள் எதெல்லாம்?

கணேஷ்: ம்...ம்...ம்... knocks, riding, standing

புரொபஸர்: Are - ஐ விட்டுட்டே. அது ரொம்ப முக்கியம். எப்போதுமே ஒரு வாக்கியத்தில ரெண்டாவது, மூன்றாவது சொல்லாக வினைச்சொல் இருக்கும். பெரும்பாலும் ள்ன்க்ஷத்ங்ஸ்ரீற்க்குப் பிறகு வரும்.

கணேஷ்: Subjectன்னா என்ன சார்?

புரொபஸர்: அதை அப்புறமா சொல்றேன். உன் லிஸ்டில ழ்ண்க்ண்ய்ஞ் தப்பு. அது அங்கே வினைச்சொல் இல்ல. ஏன்னு அப்புறமா விளக்குறேன். இப்போதைக்கு are, knocks  ரெண்டை past tenseக்கு மாத்தினா போதும். எங்க மாத்தி சொல்லு.

கணேஷ்: As we are standing a boy riding his cycle knocked over an old woman

புரொபஸர்: நான் குறிப்பிட்ட தவறைத் தான் நீ இங்க பண்றே. நீ ஹழ்ங்-ஐ ல்ஹள்ற்க்கு மாத்தல

கணேஷ்: ஓகே சார். Areக்கு past were தானே? நேத்து தான் படிச்சேன்

புரொபஸர்: கரெக்ட். Go ahead

கணேஷ்: அப்படீன்னா?

புரொபஸர்: continue பண்ணுன்னு சொன்னேன்

கணேஷ்: As we were standing a boy riding his cycle knocked over an old woman

புரொபஸர்: கரெக்ட். வெரி குட்

கணேஷ்: சார் knockன்னா கதவை தட்டுறது தானே?

புரொபஸர்: அதுக்கு வேற அர்த்தங்களும் உண்டு. நடந்து போகும் போது கவனிக்காம யார் மேலயாவது மோதி கீழே தள்ளுனா அது knocking over someone.  அதே மாதிரி நீ ஒருத்தரிடம் பயங்கர ஆச்சரியமான ஒரு விஷயத்தைச் சொல்றே. அதைக் கேட்டு அவர் கிட்டத்தட்ட கீழே விழுந்திடறார். அது knock over someone with a feather. You almost knocked me over with a

feather when you said petrol price fell by 20 rupees. அதாவது பெட்ரோல் விலை 20 ரூபாய் குறைஞ்சிருச்சுன்னு நீ சொன்னதைக் கேட்டு எனக்கு மயக்கமே வந்திடுச்சு. அதே மாதிரி ஒரு இடத்தை கொள்ளையடிக்கிறதும் knock over தான். The gang knocked over two houses in a week. ஒரு பொருளைத் தெரியாமல் கீழே தள்ளி விடறது கூட knock over தான். நேத்து உண்மையிலேயே என் மனைவி எனக்குப் பரிசா தந்த flower vaseஐ கீழே தள்ளி போட்டுட்டேன். I knocked over the flower vase, a gift from my wife on my birthday.

கணேஷ்: அப்புறம் என்னாச்சு சார்?

புரொபஸர்: ஒரே களேபரம் தான். கடைசியில பதிலுக்கு she knocked me over. என் சட்டையைப் பிடிச்சு உலுக்கிற மாதிரி உலுக்கி கீழே தள்ளி விட்டுட்டா. அப்புறம் அவ கவலைப்படுற மாதிரி நடிச்சு என் கிட்ட மன்னிப்பு கேட்க, நான் அவளுக்குச் சமாதானம் சொல்ல, பழையபடி ஒண்ணாயிட்டோம்.

கணேஷ்: (புரொபஸர் கையில் உள்ள நாளிதழை வாங்கிப் பார்க்கிறான்) சார் இங்க பாருங்க ஒரு விபத்து நியூஸ் இருக்கு. போட்டோ எல்லாம் பயங்கரம். ஒரு பைக் சிதைஞ்சு போய் கெடக்கு. the lorry ran over a bikeன்னு தலைப்பு.

புரொபஸர்: Ran over  என்கிறது விபத்துக்கு அதிகமா பயன்படுத்தப்படுற phrasal verb.

கணேஷ்: Phrasal verbன்னா?

புரொபஸர்: மறந்திட்டியா? ஒரு வினைச் சொல்லும் prepositionன்னும் சேர்ந்து வந்தா phrasal verb. இங்க வினைச்சொல் run, preposition over  ரெண்டும் சேர்ந்து வந்து ஒரு புது அர்த்தம் கொடுக்குது.

(இனியும் பேசுவோம்)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.