முகப்பு
இளைஞர்மணி

வாங்க இங்கிலீஷ் பேசலாம்... 26

கணேஷும் புரொபஸரும் பைக்கில் போய்க் கொண்டிருக்கிறார்கள். வழியில் ஒரு டீக்கடையில் இறங்கி இளைப்பாறுகிறார்கள். புரொபஸர் பட்டர் பிஸ்கெட்டை வாங்கி டீயில் முக்கி ரசித்து சாப்பிடுகிறார்.

Updated On : 24 ஜனவரி, 2024 at 4:43 PM
பகிர்:

கணேஷும் புரொபஸரும் பைக்கில் போய்க் கொண்டிருக்கிறார்கள். வழியில் ஒரு டீக்கடையில் இறங்கி இளைப்பாறுகிறார்கள். புரொபஸர் பட்டர் பிஸ்கெட்டை வாங்கி டீயில் முக்கி ரசித்து சாப்பிடுகிறார்.

புரொபஸர்: உன் வயசு எனக்கு இருக்கிறப்ப எனக்கு பெரும்பாலும் காலைல சாப்பிட பணமிருக்காது. பிஸ்கட்டும் டீயும் தான் எனக்கு டிபன்.

கணேஷ்: இப்படி ரசிச்சு சாப்பிடுறீங்க?

புரொபஸர்: when you dunk this in tea பிஸ்கட்டோட உண்மையான வாசனை வெளியே வரும். அதே போல டீயிலும் அந்த வாசனையும் இனிப்பும் கலக்க டேஸ்ட் அபாரமா இருக்கும்.

கணேஷ்: Dunk... சார்... இதே மாதிரி ஒரு வார்த்தை கொஞ்ச முன்னாடி சொன்னீங்களே? நாக்கு நுனியில இருக்குது. ஆனா வர மாட்டேங்குது!

புரொபஸர்: அது bunk. வகுப்புக்கு மட்டம் போடுறது. இது dunk. அதாவது பிஸ்கட்டை டீயில முக்கிச் சாப்பிடறது

கணேஷ்: சார் இப்பிடி சாப்பிடுறது தமிழர்களோட கண்டுபிடிப்பா?

புரொபஸர்: இல்லை. ரோமப் பேரசு காலத்தில் ராணுவ வீரர்கள் கெட்டியான பிஸ்கட்டை வைனில் முக்கி சாப்பிட்டார்கள். 16ஆம் நூற்றாண்டில் பிரித்தானிய கப்பல் படை வீரர்களுக்கு அளிக்கப்பட்ட பிஸ்கட்டுகளும் ரொம்ப கடினமாய் இருந்ததால் அதை பீரில் முக்கி சாப்பிடத் தொடங்கினார்கள். 19ஆம் நூற்றாண்டில் விக்டோரிய மகாராணி காலத்தில் இங்கிலாந்தில் மாலை வேளையில் டீ அருந்தும் பழக்கம் தோன்றியதும் மத்திய வர்க்கத்தினர் டீயில் பிஸ்கட்டை dunk செய்து சாப்பிடும் வழக்கம் ஏற்பட்டது. இப்பிடி இதுக்குன்னு ஒரு தனி வரலாறு இருக்குது. அதனால தான் இப்பிடி சாப்பிடுறதுக்குன்னே ஆங்கிலத்தில் ஒரு தனி வார்த்தை dunking ன்னு உருவானது.

கணேஷ்: சார் அப்பிடீன்னா சாயங்காலம் டீ சாப்பிடுறதைக் கண்டுபிடிச்சவன் வெள்ளைக்காரனா?

புரொபஸர்: ஆனா சர்க்கரையை அள்ளிப் போட்டு பாலில டிக்காஷன் ஊத்தி கிளாசில கொடுக்கிறது நாம கண்டுபிடிச்சது. Tim Tam Slam  கேள்விப்பட்டிருக்கியா?

கணேஷ்: யாரு சார் அவரு! டீயை கண்டுபிடிச்சவரா?

புரொபஸர்: டீயை கண்டுபிடிச்சது சீனர்கள். 17ஆவது நூற்றாண்டுல சீனாவில் இருந்து இங்கிலாந்துக்குப் போனது. அப்போது அங்கு குடிதண்ணீர் அசுத்தமாய் இருப்பது பற்றி மக்கள் கவலை கொண்டிருந்த காலம். டீத்தூள் போட்டு கொதிக்க வைத்தால் குடிநீர் சுத்தமாகும் எனும் நம்பிக்கையில் இங்கிலாந்தில் டீ பரவலானது. இந்த Tim Tam Slam என்பது ஆளின் பெயர் அல்ல. ஆஸ்திரேலியாவில் உள்ள வித்தியாசமாய் டீ அருந்தும் வழக்கம் அது. ஒரு குறிப்பிட்ட சாக்லேட் பிஸ்கட்டை இரு பக்கமும் டீயில் dunk செய்து மெல்ல மெல்ல சாப்பிட்டு நடுப்பகுதியை மட்டும் மீதம் வைப்பார்கள். நடுப்பக்கம் துளையுடன் இருக்கும். அதன் வழி டீயைக் குடிப்பார்கள்.

கணேஷ்: அட!

இருவரும் பைக்கில் ஏறி சைதாப்பேட்டை நடைபாதையில் உள்ள ஒரு குடிசைக்குள் குனிந்து நுழைகிறார்கள். அங்கே விளக்கில்லை. அரை இருள். காற்றில்லாத வெக்கை. ஓரமாய் பாய் விரித்து ஓர் எட்டு வயது பெண் குழந்தை கையில் ஒரு ஆறு மாத குழந்தையுடன் இருக்கிறது.

புரொபஸர் (குழந்தையிடம்): மாலா எங்கம்மா?

குழந்தை: வெளியே போயிருக்கு

அவர்கள் வெளியே வருகிறார்கள். சற்று நேரத்தில் மாலாவும் அவள் அம்மாவும் படுக்கையையும் வேறு பொருட்களையும் சுமந்து சாலையைக் கடந்து வருகிறார்கள்.

மாலா: afternoon sir.

புரொபஸர்: afternoon. உன்னைப் பார்க்கத் தான் வந்தோம். இது என் ஸ்டூடண்ட் கணேஷ்.

மாலா: how do you do?

கணேஷ்: I am fine

(புரொபஸரைப் பார்த்து): சார் ஒரு டவுட். how do you doவில் ஏன் ரெண்டு do வருது.

புரொபஸர்: நல்ல கேள்வி. மாலா பதில் சொல்வாள்.

மாலா: How are you doing மாதிரி தான். முதல் do how க்கு. இரண்டாவது ஹ்ர்ன் வுக்கு.

கணேஷ்: புரியல சார்.

புரொபஸர்: விளக்குறேன். (மாலாவிடம்) குடிக்க கொஞ்சம் தண்ணி குடேன்.

மாலா: buttermilk?

புரொபஸர் தலையாட்ட இருவருக்கும் மோர் வருகிறது.

புரொபஸர் ஏப்பம் விடுகிறார். வயிற்றை தடவியபடி கணேஷிடம் கேட்கிறார்: ஏப்பம் விடுறதுக்கு இங்கிலிஷ்ல என்ன?

கணேஷ்: ம்ம்ம்...

புரொபஸர்: ஆன்ழ்ல்.  I just burped. belched  ன்னும் சொல்லலாம்!

(இனியும் பேசுவோம்)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.