முகப்பு
இளைஞர்மணி

நாளை நான் ஐஏஎஸ்! மன இறுக்கத்தை வெளிக்காட்டக் கூடாது!

விருப்பமான பொழுதுபோக்குகள் குறித்த வினாக்கள் சாதாரணமானவையாகத் தோன்றலாம். சில நேரங்களில் அவை கூடுதல் மதிப்பெண்களை ஈட்டித் தருவதில் பெரும்பங்கு ஆற்றுகின்றன.

Updated On : 24 ஜனவரி, 2024 at 4:47 PM
பகிர்:

விருப்பமான பொழுதுபோக்குகள் குறித்த வினாக்கள் சாதாரணமானவையாகத் தோன்றலாம். சில நேரங்களில் அவை கூடுதல் மதிப்பெண்களை ஈட்டித் தருவதில் பெரும்பங்கு ஆற்றுகின்றன.

மேலும் இப்பகுதிகளில் வினா கேட்கப்படும்போது அது விவாதமாய் மாறிவிடுகின்ற சூழல்கூட சிலநேரங்களில் உருவாகிவிடுவதுண்டு. அதனால் அந்நேரங்களில் மிகுந்த கவனம் தேவை.

ஒரு தேர்வர் தனது விருப்பமான பொழுதுபோக்காக WRITING NOVELS என்று பொதுவாகக் குறிப்பிட்டுள்ளார் எனில் கீழ்க்கண்ட வினாக்களை அவர் எதிர்நோக்கலாம்.

யாரேனும் ஒரு முக்கியமான எழுத்தாளரைக் குறிப்பிட்டு அவரது இந்த நூலினைப் படித்திருக்கிறீர்களா என்று கேட்கலாம். (தேடிப்பார்த்தால் அவர்கள் குறிப்பிட்டுக்கேட்கும் எழுத்தாளர் தேர்வரின் மாவட்டத்தைச் சேர்ந்தவராகவோ அல்லது பூர்வீகமாகக் கொண்டவராகவோ இருக்கலாம்).

நீங்கள் இந்தி மொழியில் நாவல் எழுதுகிறீர்களா? (தேர்வர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவரென்பது அவர்களுக்குத் தெரியும்) இக்கேள்விக்கு தேர்வர் இல்லையென்பார். அப்படியென்றால் ஆங்கிலத்தில் நாவல்கள் எழுதுகிறீர்களா?

தேர்வர் இதற்கான பதிலை கூறிக் கொண்டிருக்கும்போதே அடுத்த வினாவாக Are You Interested Fiction or Nonfiction Novels? இதற்குத் தேர்வர் Nonfiction Novels Sir  என்று பதிலுரைத்தால் அடுத்த கேள்வி. What is the Difference between Fiction and Nonfiction? எனத் தொடரலாம்.

தேர்வர் சற்று யோசிக்கத் தொடங்கினால், "Ok. Tell about Alva Myrdal?'' என்று அடுத்த வினா வந்துவிடும்.

ஆல்வா மிர்தால் பெயர் இவரிடம் ஏன் கேட்கப்பட்டது. இதுபற்றி சில விளக்கங்களைக் கீழே காணலாம்.

ஆல்வா மிர்தால் சுவீடன் நாட்டைச் சேர்ந்தவர். உலகின் தலைசிறந்த உண்மைக்கதை (NONFICTION) எழுத்தாளர்களில் ஒருவர். இவர் அமைதிக்கான நோபல் பரிசினை 1982ஆம் ஆண்டு அல்போன்ஸா கார்சியா ரோபிள்ஸ் - உடன் இணைந்து பெற்றார்.

1950 ஆம் ஆண்டு முதல் 1955 ஆம் ஆண்டுவரை யுனெஸ்கோ அமைப்பின் சமூக அறிவியல் பிரிவின் தலைவராக அரும் பணியாற்றினார். இந்த அமைப்பின் இத்தகைய தலைமைப் பொறுப்பினை வகித்த முதல் பெண் இவர்தான்.

இந்தியா, மியான்மர், இலங்கை நாடுகளுக்கான தூதராக சுவீடன் நாடு இவரை 1955-1956 ஆம் ஆண்டுகளில் பணியாற்ற வைத்தது.

1981ஆம் ஆண்டு சர்வதேசப் புரிந்துணர்வுக்கான ஜவஹர்லால் நேரு விருதினை இந்திய அரசு இவருக்கு வழங்கிக் கெüரவித்தது. ஓர் எழுத்தாளர் ஒருவர் இலக்கியத்திற்கான நோபல் பரிசு பெறாமல் அமைதிக்கான நோபல் பரிசு பெறுவது இங்கு கவனிக்கத்தக்கது.

இவரது கணவர் குன்னார் மிர்தால் சிறந்த பொருளாதார மேதை. இவர் 1974ஆம் ஆண்டு பொருளாதாரத்திற்கான நோபல் பரிசினைப் பெற்றார். ஏன் இவரது கணவரையும் இங்கு குறிப்பிடுகிறேன் என்றால், 1981 ஆம் ஆண்டு இந்திய அரசின் ஜவஹர்லால்நேரு விருது இருவருக்கும் தரப்பட்டது. இந்தப் பின்புலங்களைப் பொறுத்து கிளைக் கேள்விகள் உருவாகும்.

ஆகவே, Hobbies பதிவிடும்போது தேர்வர்கள் கவனிக்க வேண்டியது என்னவெனில், அவை பொதுவாக இல்லாமல் SPECIFIC - ஆக குறிப்பிடுதல் நலம் பயக்கும். Writing Novels  என்பதனை Writing Tamil Fiction novels எனக் குறிப்பிடலாம். Listioning Tamil Songs, Sung by Ilaiyaraja  SPECIFIC என SPECIFIC ஆக குறிப்பிடலாம். இளையராஜா இசையமைத்த பாடல்கள் என்பதை விட அவர் பாடிய பாடல்கள் என்பது குறைவாகவே இருக்கும்.

பெரும்பாலும் குடிமைப்பணிகளுக்கான நேர்முகத்தேர்வு நடைபெறும் 25 நிமிடங்கள் முதல் 45 நிமிடங்களுக்குள் கேட்கப்படும் கேள்விகள் ஒரு தேர்வரின் ஆளுமையை வெளிக்கொணரும் வகையில் வெவ்வேறு கோணங்களில் அமைந்திருப்பதை நாம் காணலாம். அதனைத் தேர்வர் உணர்ந்து கொள்ள முடியாத நிலையில் அச்சூழல் அவர் மீது ஆதிக்கம் செலுத்திக் கொண்டிருக்கும் என்பதும் உண்மை.

இதில் சிறப்பு என்னவென்றால், தேர்வாணைய நேர்முகத் தேர்வுக்குழுவினர் தேர்வரை ஊக்கப்படுத்தும் வகையிலும், பொறுமையுடனும் அணுகுவதுதான். தேர்வாணையத்தின் தலைவர் அல்லது உறுப்பினரைத் தலைமையாகக் கொண்ட நேர்முகத் தேர்வுக்குழுவில் இடம் பெறுகின்ற பிற உறுப்பினர்கள் அறிவார்ந்தவர்களாகவும், துறை வல்லுநர்களாகவும், வெவ்வேறு மாநிலங்களைச் சேர்ந்தவர்களாகவும் இருப்பர்.

அவர்கள் தாம் கேட்ட வினாவினைத் தேர்வர் புரிந்து கொள்ள ஏதுவாக ஒவ்வொரு வார்த்தையையும் அழுத்தம் கொடுத்து நிறுத்தி உச்சரிப்பர். அப்படியும் புரிந்து கொள்ளச் சிரமப்படுகிறார் என்பது தெரிந்தால் அவர்களாகவே இரண்டாவது முறையும் அக்கேள்வியினைக் கேட்பர்.

எனவே, அவர்கள் ஏற்படுத்திக் கொடுக்கின்ற வாய்ப்புகளை நேர்முகத்தேர்வில் தேர்வர்தான் திறமையாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

குடிமைப்பணிகளின் நேர்முகத்தேர்வினை எதிர்கொள்வதில் தேர்வர்களிடம் உள்ள அணுகுமுறையில் மாநிலத்திற்கு மாநிலம் அடிப்படையான வேறுபாடு ஒன்று காணப்படும்.

சில மாநிலத்தைச் சேர்ந்த தேர்வர்கள் இதனை CASUAL மனநிலையிலேயே அணுகுவர். வேறு சில மாநிலத்தைச் சேர்ந்த தேர்வர்கள் இதற்கு SINCERE மனநிலையில் தயாராவர். இந்த SINCERE  பின் சிலரை SERIOUS மனநிலைக்குக் கொண்டு சென்றுவிடும். இதனால் தேவையற்ற பதட்டம் சூழ்ந்து கொள்ளும் நிலைக்கு தள்ளப்படுகிறார்கள்.

மேலும் நேர்முகத்தேர்வுக்குத் தயாராகும்போது தேர்வர்கள் எதார்த்தமான நடைமுறைகளைப் பின்பற்றி தங்களுக்கான குறிப்புகளைத் தயார் செய்திருப்பர். ஆனால், தேர்வுக்குழுவினர் அவருக்கான வினாக்களை மற்றொரு கோணத்தில் அணுகுவர். அதனால் தேர்வர் ஏமாற்றமடையும் சூழலும் ஏற்படலாம்.

எனவே, தான் எதிர்பார்த்த வகையில் நேர்முகத்தேர்வில் கேள்விகள் கேட்கப்பட்டாலும் மற்றொரு கோணத்தில் சென்றாலும் சமநிலை அணுகுமுறையைத் தேர்வர் கையாளுதல் மிகவும் முக்கியமானதாகும்.

இத்துடன் தனக்குத் தெரிந்த பகுதிகளில் வினாக்கள் வரும்போது, முக மலர்ச்சியோடு நிறையப் பேசுதலும், மற்ற வினாக்கள் கேட்கப்படும்போது குறைவாகப் பேசுதலும், தன்னையறியாமல் மன இறுக்கத்தினை முகபாவனைகளில் வெளிப்படுத்துவதும் தவிர்க்கப்பட வேண்டியவை ஆகும்.

உதாரணமாக, ஒரு தேர்வர் தமிழ்நாட்டின் ஈரோடு மாவட்டத்தினைச் சேர்ந்தவராக இருந்தாரென்றால் அவர் பெரியாரைப் பற்றி விரிவான குறிப்புகளைத் தயார் செய்து வைத்திருப்பார். அதில் வினாக்கள் நிச்சயம் அமையும் என்ற நம்பிக்கையுடனும் செல்வார்.

ஆனால், தேர்வரிடம் பெரியாரைப்பற்றிய கேள்விகளைத் தேர்வுக்குழுவினர் கேட்பதற்குப் பதிலாக ஜவுளித்தொழில், மஞ்சள் பயிரிடுதல் அதன் பொருளாதார பங்களிப்பு மற்றும் மருத்துவப் பயன்கள், சாயக் கழிவுகள், அதில் கலந்துள்ள ரசாயன மூலக்கூறுகள், சாயக்கழிவுகளால் சுற்றுச்சூழல் எவ்வாறு மாசுபடுகின்றது? அதைத் தடுப்பதற்கான தீர்வுகள் எவை மற்றும் அண்ழ் ஈஹ்ங்ண்ய்ஞ் பங்ஸ்ரீட்ய்ர்ப்ர்ஞ்ஹ் போன்ற பகுதிகளில் வினாக்களைக் கேட்கலாம்.

அதுபோல, நேர்முகத்தேர்விற்குத் தயாராகும்போது நடப்பு நிகழ்வுகளைக் கூர்ந்து கவனித்தல் மிகவும் அவசியம். ஏனெனில், நடப்பு நிகழ்வுகளைத் தொடர்புப்படுத்தி ஞல்ண்ய்ண்ர்ய் ஆஹள்ங்க் வினாக்கள் அமையலாம். அடுத்த பகுதியில் அவை பற்றிக் காணலாம்.

(தொடரும்)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.