வாங்க இங்கிலீஷ் பேசலாம்...: 28
புரொபஸர், அவரது மாணவி மாலா, அவளது பெற்றோர் மற்றும் தங்கை, கணேஷ், நாய் ஜூலி ஆகியோர் சைதாபேட்டை நடைபாதையில் உள்ள சிறு குடிசையில் இருக்கிறார்கள்.
புரொபஸர், அவரது மாணவி மாலா, அவளது பெற்றோர் மற்றும் தங்கை, கணேஷ், நாய் ஜூலி ஆகியோர் சைதாபேட்டை நடைபாதையில் உள்ள சிறு குடிசையில் இருக்கிறார்கள். நாய் ஜூலி ழ்ங்ப்ஹற்ண்ஸ்ங் ற்ழ்ன்ற்ட் என்றால் என்னவென்று விளக்குகிறது.
ஜூலி: நாம ஒவ்வொருத்தரும் நம்முடைய பார்வையை, புரிதலை ஒட்டி உண்மையை வடிவமைக்கிறோம். அது தான் relative truth. எனக்கு மீன் வாசனைன்னா எச்சில் ஊறும். புரொபஸருக்கு வாந்தி வரும். So the smell of fish is relative. fish smells good for me and for him it is disgusting.
கணேஷ்: disgusting ன்னா?
ஜூலி: அருவருப்பானது. ஞ்ழ்ர்ள்ள்ன்னு இன்னொரு சொல் இருக்குது. உங்க அம்மா லஞ்சுக்கு ஈசல் வறுத்து தந்தா எப்பிடி இருக்கும்?
கணேஷ்: ஐயே...
ஜூலி: அது தான் gross. தாங்க முடியாத அளவுக்கு கேவலமானதை grossன்னு சொல்லலாம். Bye the bye மதுரைப் பக்கமா மழை பெய்ஞ்சு ஓஞ்சதும் ஈசல் வந்துச்சுன்னா அதை புடிச்சு வறுத்து சாப்பிடுவாங்க தெரியுமா?
மாலா: yech
கணேஷ்: what is yech?
மாலா: குமட்டிக்கினு வரதை yechன்னு சொல்லலாம்.
கணேஷ்: அப்பிடீன்னா I felt yechன்னு சொல்லலாமா?
புரொபஸர்: Yech ஒரு interjection. Alas, oh, hurrah, wow மாதிரி. தமிழில ஐயோ, ஐயகோ, ஏ...யப்பா இதெல்லாம் interjections. இதை ஒரு தனிச்சொல்லா தான் சொல்லணும். வாக்கியத்தோட பகுதியா பார்க்கக் கூடாது.
ஜூலி: ஆனா yuckன்னு ஒரு சொல் இருக்கு. yechஓட இன்னொரு வடிவம் தான் yech. Yuckஐ வாக்கியத்தோட பகுதியாச் சொல்லலாம். குறிப்பா அது nounஆக பெயர்ச்சொல்லாக வரும் போது. The oatmeal was yuckன்னு சொன்னா ஓட்ஸ் கஞ்சி வாந்தி வரவழைக்கிற மாதிரி இருந்ததுன்னு அர்த்தம்.
புரொபஸர்: Yuckக்கு இன்னொரு அர்த்தம் மனம் திறந்து வாய் விட்டு சிரிக்கிறது. They were yucking at Vadivelu’s comedy. அதே மாதிரி வேடிக்கையா நடந்துக்கிறதும் yucking தான். 2012இல் T 20 உலகக்கோப்பையை மேற்கிந்திய அணி பிளேயர்ஸ் ஜெயிச்சதும் கேங்கினம் டான்ஸ் ஆடினாங்களே... அதை The WI players yucked it up at the groundன்னு சொல்லலாம். Fooling aroundன்னும் சொல்லலாம்.
கணேஷ்: சார் ஜூலி சொல்றதைப் பத்தி என்ன நினைக்கிறீங்க? எல்லா உண்மையும் relative தானா? அப்போ எல்லாருக்கும் பொதுவான உண்மையா ஒண்ணு இல்லையா?
புரொபஸர்: அது பேசுறது relativism. சிலர் absolutism தான் சரின்னு சொல்லுவாங்க. அயோத்தியில ராமர் பிறந்ததா சொன்னா நீ ஏத்துக்கிட்டு தான் ஆகணும். அதை மறுத்து மற்றொரு உண்மை இல்லைம்பாங்க. அது absolute truth. ரெண்டு விதமான உண்மைகள் இருக்குன்னு சொல்லலாம். Relative truth, Absolute truth. நீ சரியா படிச்சு பரீட்சை எழுதினா தான் ஜெயிச்சு பட்டம் வாங்க முடியுங்கிறது மறுக்க முடியாத absolute truth.
மாலா: சார் நீங்க சொல்லுறது ஒரு செய்தி. ஒரு விதிமுறை அல்லது தகவல். அது truth இல்ல. It is a fact.
கணேஷ்: ரெண்டுக்கும் என்ன சார் வித்தியாசம்?
புரொபஸர்: மாலா சொல்றது சரி தான். மழை பெய்யுதுங்கிறது ஒரு fact. Truth. Absolute truthக்கு எனக்கு சரியான உதாரணம் தெரியல.
மாலா: சார் E = MC ²
புரொபஸர்: யெஸ்... ரொம்ப சரியான உதாரணம். எப்போதுமே மாறாத உண்மை... அந்த பார்முலா.
கணேஷ்: சார் ஜூலி தன்னை நாய் இல்லைன்னு நினைச்சிக்கிட்டா அது நாய் இல்லாம ஆகிடுமா?
புரொபஸர்: இல்லை.
ஜூலி: Why not I think therefore I am.
கணேஷ்: அப்பிடீன்னா?
புரொபஸர்: அது ரெனெ டெகார்ட்டே எனும் பதினேழாம் நூற்றாண்டு தத்துவஞானியோட மேற்கோள். அவரோட முக்கியமான கண்டுபிடிப்பு. அதாவது யோசிக்கிறதனால இருக்கிறேன்.
கணேஷ்: யோசிக்காட்டி?
ஜூலி: நான் இல்லாமப் போயிடுவேன். யோசிச்சா இருப்பேன்.
புரொபஸர்: இதைத் தான் syllogismன்னு சொல்வாங்க. ஸ்ருதிஹாசன் அழகு. அவங்க ஒரு நடிகை. அதனால எல்லா நடிகைகளும் அழகுன்னு சொல்றது தான் syllogism. ஜூலி அதே போல நினைக்குது: "நான் என்ன நினைக்கிறேனோ அதுவாகத் தான் இருக்கிறேன். நான் என்னை மனிதன்னு நினைக்கிறேன். அதனால் நான் நாய் இல்ல, மனிதன்'. பிழையான தர்க்கம் இது.
(இனியும் பேசுவோம்)