முகப்பு
இளைஞர்மணி

வாங்க இங்கிலீஷ் பேசலாம் - 54

புரொபஸர் மற்றும் கணேஷ் வண்டலூர் வனவிலங்கு பூங்காவைச் சுற்றிப் பார்க்கிறார்கள்.

Updated On : 24 ஜனவரி, 2024 at 6:18 PM
பகிர்:

புரொபஸர் மற்றும் கணேஷ் வண்டலூர் வனவிலங்கு பூங்காவைச் சுற்றிப் பார்க்கிறார்கள். புரொபஸர் pronouns பற்றி விளக்கும் போது ஒரு குறிப்பிட்ட ஆளின் பெயரை குறிப்பிடும் proper nounக்கு முன்னால் the, that, this ஆகிய pronounகளைப் பயன்படுத்தக் கூடாது என்கிறார். ஏன் கூடாது? என கணேஷ் கேட்கிறான். புரொபஸர் விளக்குகிறார்.

புரொபஸர்: வகுப்பில் ஒரு கணேஷ் தானே? அந்த கணேஷ் என்று குறிப்பாய் சொல்ல அவசியம் இல்லையே. ஆனால் Call that boyன்னு ஒரு common noun பயன்படுத்துகையில் சொல்லலாம். அதே போலத் தான் a, an, the எனும் articlesஐ கூட proper noun முன்னால் பயன்படுத்தல் ஆகாது. உதாரணமாக, Rajinikanth is a great entertainer என்று சொல்லலாம். ஆனால் That Rajinikanth, a Rajinikanth, the Rajinikanth எல்லாம் தப்பு.

கணேஷ்: சார்... Rajinikanth is a superstar. கரெக்டா? இல்ல Rajinikanth is the superstar சரியா?
புரொபஸர்: நல்ல கேள்வி. பட்ங் பயன்படுத்தினால் ரஜினி தான் ஒரே சூப்பர் ஸ்டார்னு அர்த்தம். அ பயன்படுத்தினால் ரஜினி போல் தமிழில் பல சூப்பர் ஸ்டார்கள் உண்டுன்னு பொருள். ஆனா ரஜினி ஒருவரே சூப்பர் ஸ்டார் என்பதால் the superstar தான் சரி. ஷாருக்கானை the Baadshah of Bollywood என்கிறார்கள். அதே போல the God என்று தான் சொல்வோம். A God அல்ல.
கணேஷ்: சார் எனக்கு ஒரு முக்கியமான சந்தேகம். கடைக்குப் போய் ஒரு வில்ஸ் குடுங்கன்னு கேட்குறோம்.Give me a Wills. 

புரொபஸர்: யாரு... நீயா?
கணேஷ்: சரி வேணாம். இப்படி வச்சுக்குங்க. நான் கடைக்கு போய் ஒரு கோக் கேட்கிறேன். Give me a Coke. அங்கே மட்டும் Coke ஒரு proper noun தானே? அதுக்கு முன்னால் எப்படி a பயன்படுத்தலாம். அது தப்பா? எல்லாரும் அப்படித் தானே சொல்றாங்க?
புரொபஸர்: இதுவும் ஒரு நல்ல கேள்வி. நீ ஒரு கடைக்குச் சென்று கோக் கேட்கும் போது ஒரு கோக் பாட்டில் கொடுங்கன்னு தான் கேட்கிறே. அதாவது Give me a bottle of Coke என்பதை சுருக்கி Give me a Coke என்கிறாய். அதனால் ஹ சேர்க்கலாம். 
கணேஷ்: சார் விராத் கோலி தான் அடுத்த சச்சின் என்பதை இங்கிலீஷ்ல எப்படிச் சொல்லுவீங்க?

புரொபஸர்: Virat Kohli is the next Sachin
கணேஷ்: இங்க மட்டும் சச்சின் என்கிற ஆளோட பெயர், அதாவது proper nounக்கு முன்னால் the சேர்க்கலாமா? 
புரொபஸர்: தாராளமா. Kohli is the Sachin of our times என்று சொல்லலாம். கோலி தான் நம் காலத்தின் சச்சின். இங்கே proper nounக்கு முன்னால் the சேர்க்கலாம். அதே போல Kohli is a Sachin in his own right என்றும் சொல்லலாம். கோலி தன்னளவில் ஒரு சச்சின் தான் என அர்த்தம். இந்த ரெண்டு இடங்களிலும் சச்சின் ஒரு adjectiveஆக செயல்படுகிறது. அதாவது அழகான பாப்பா என்பதில் பாப்பா அழகானது என குறிக்க அழகான எனும் சொல் வருவது போல் இங்கு சச்சின் பயன்படுகிறது. இன்னும் துல்லியமாய் சொல்வதானால் உருவகமாய் பயன்படுகிறது. அதாவது metaphor. 

கணேஷ்: Metaphorன்னா எப்படி சார்?
புரொபஸர்: ஒரு நடிகரை நீங்க எனக்கு தலைவர் மாதிரின்னு சொல்கிற ஒருவர். காலப்போக்கில் தலைவர் மாதிரி என்று சொல்வதை விட்டு விட்டு அவங்க பெயரையே தலைவர் என்று ஆக்குவது metaphor. 
கணேஷ்: அந்த மாதிரி பயன்பாட்டில் the சேர்ப்பது சரியாக இருக்குமா?
புரொபஸர்: இல்ல. கூடாது. இந்த இடத்தில் தலைவர் என்பது ஒரு adjective ஆக ஆரம்பித்து பின்னர் ஒரு proper noun ஆக மாறி விடுகிறது. அதனால் the, an வரக் கூடாது. ஆங்கிலத்தில் Thalaivar என்று முதல் எழுத்தை capitalஇல் தானே எழுதுகிறார்கள்?

கணேஷ்: ஒரு குணத்தை சொல்வதற்கான adjective பின்னாளில் பெயர்ச்சொல்லாக மாறிய வரலாறு... ரொம்ப சுவாரஸ்யம் சார்.
புரொபஸர்: புலியோட கர்ஜனை கேட்டியா? நாம புலி இருக்கிற இடத்துக்கு பக்கத்தில் வந்திட்டோம். வா, பார்க்கலாம்.
(இனியும் பேசுவோம்)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.