முகப்பு
இளைஞர்மணி

வாங்க இங்கிலீஷ் பேசலாம் - 73

புரொபஸர் தன் நாய் ஜூலியுடன் கடற்கரைக்கு நடை பழகச் செல்கிறார். அங்கு நூற்றுக்கணக்கான மாணவர்கள் பதாகைகளுடன் கூடி நிற்பதைக் காண்கிறார்.

Updated On : 29 ஜனவரி, 2024 at 10:57 AM
பகிர்:

புரொபஸர் தன் நாய் ஜூலியுடன் கடற்கரைக்கு நடை பழகச் செல்கிறார். அங்கு நூற்றுக்கணக்கான மாணவர்கள் பதாகைகளுடன் கூடி நிற்பதைக் காண்கிறார். அவர் ஓர் இளநீர் கடை அருகே செல்கிறார்.

கடைக்காரர்: என்ன தாத்தா இன்னிக்கு லேட்டா?
புரொபஸர்: ஆமா. I slept off.
கடைக்காரர்: அப்படீன்னா? 
புரொபஸர்: தூங்கிப் போயிட்டேன்.
இளநீர் வெட்டியபடியே கடைக்காரர்: தூங்குறதுக்கு ள்ப்ங்ங்ல் தானே?
புரொபஸர்: ஆமா. Sleep - ஓட கடந்த காலச் சொல், அதாவது past tense, slept. Slept off அதாவது காலங் கடந்து தூங்கிட்டேன்.
கடைக்காரர் (இளநீர் நீட்டுகிறார்): இந்தாங்க.
ஜூலி: கொடுக்காதீங்க.
கடைக்காரர்: என்னங்க நாய் பேசுது?
புரொபஸர்: அதுவா நேத்து எங்க வீட்டு மாடியில இருந்து குதிச்சதுல அதுக்கு மண்டையில அடிபட்டுடுச்சு. அப்போதிலிருந்து பேசுது.
கடைக்காரர்: இதென்ன உலக அதிசயமா இருக்கு?
ஜூலி: அதிருக்கட்டும். இவர் சொல்றதை நம்பாதீங்க. அது தப்பு.
புரொபஸர்: ஏய்... நீ வரம்பு மீறி போறே. என்ன தப்பா சொல்லீட்டேன்?
ஜூலி: நீங்க மட்டுமில்ல... நிறையப் பேர் இந்த தப்பை பண்றாங்க. காலம் கடந்து தூங்கினா I slept offன்னு சொல்றாங்க. 
புரொபஸர் (சற்றே கோபமாய்): வேறென்ன சொல்லணுமாம்?
ஜூலி: Oversleptன்னு சொல்லலாம். I overslept and so was late அப்டீன்னு சொன்னா கரெக்டா இருக்கும்.
புரொபஸர்: ஆமா ஜூலி சொல்றது சரி தான். நான் தான் தப்பா சொல்லிட்டேன்.
கடைக்காரர்: குருவை மிஞ்சின சிஷ்யனா இருக்குதே உங்க நாய். (ஜூலியிடம்) உனக்கு நான் பொரை வாங்கி போடுறேன் வா.
ஜூலி: அதெல்லாம் வேணாம். பத்து ரூபா கொடுங்க. நானே தேவைப்படுறதை வாங்கி சாப்பிட்டுக்கிறேன்.
கடைக்காரர் ரூபாய் நோட்டை நீட்ட ஜூலி வாயில் வாங்கிக் கொள்கிறது.
கடைக்காரர்: சரி, அப்படீன்னா sleep offக்கு என்ன தான் அர்த்தம்?
ஜூலி: உங்களுக்கு எப்படி இங்கிலீஷ்ல இவ்வளவு ஆர்வம்?
கடைக்காரர்: ஸ்கூலில் நான் இங்கிலீஷ்ல எப்பவும் முதல் மார்க் வாங்குவேன் தெரியுமா? ஆனா பாதியில படிப்பை விட வேண்டியதாப் போச்சு. சரி சொல்லு
ஜூலி: உங்களுக்கு தலைவலி எடுக்குது. என்ன பண்ணுவீங்க?
கடைக்காரர்: வீட்டில இருந்த மாத்திரையைப் போட்டு தூங்குவேன்.
ஜூலி: Yes. அப்போ you sleep off your headache. அதாவது தூங்கி ஒரு பிரச்னையை சரி பண்றீங்கன்னா அது sleeping off something. நீங்க தூங்கி உங்க தலைவலியை களைவது sleeping off your headache. உங்களுக்கு உடம்பு முடியாம இருக்கிறப்போ நிறைய மருந்து மாத்திரை கொடுக்கிறாங்க. அதனோட தீய விளைவுகளை தூங்கித் தான் உடம்பில் இருந்து அகற்ற முடியும். அப்போ you sleep off the effects of the drug he had taken. 
கடைக்காரர்: நான் பொதுவா சரக்கு போட்டுனு தான் தூங்குவேன்.
ஜூலி: Then you sleep off the alcohol. மது அருந்தி விட்டு போதை தெளியும் வரை தூங்கிறதையும் இப்படிச் சொல்லலாம். 
கடைக்காரர்: அடடா... தூங்குறதைப் பற்றின சொல்லுக்கு பின்னாடி எவ்வளவு விதமான பயன்பாடுகள். நான் மட்டும் ஒழுங்கா ஸ்கூலுக்கு போயிருந்தேன்னா இந்நேரம் இதை விட நல்லா பேசியிருப்பேன்.
புரொபஸர்: இளநீர் முன்ன மாதிரி டேஸ்டா இல்ல. லைட்டா உப்பா இருக்குது. சரி அதை விடு, நீ இப்போ சொன்னதை இங்கிலீஷ்ல சொல்லு பார்ப்போம்.
கடைக்காரர்: அது வந்து If I studied
புரொபஸர்: நான் மட்டும் படிச்சிருந்தேன்னா என்று சொன்னியே. அப்படீன்னா நீ படிக்கல. அதைக் குறிப்பிடுறதுக்கு If I had studied என்று சொல்லணும். அதாவது நீ மேற்கொண்டு படிக்கல. ஆனா படிச்சிருந்தேனா இதை விட நல்லா இருந்திருப்பே. நடக்காத ஒரு விசயத்தை பற்றி சொல்லும் போது இப்படிச் சொல்லலாம்.
கடைக்காரர்: If I had studied
ஜூலி: I would have spoken better English than you.
கடைக்காரர்: அட சூப்பர். அதைத் தான் நான் சொல்ல வந்தேன்.
புரொபஸர்: சரி... அதென்ன அங்கே கூட்டம்?
கடைக்காரர்: போராட்டம் சார். Protest for jallikattu.
ஜூலி: Protest to revoke the ban on jallikattu.
(இனியும் பேசுவோம்)
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.